இனி உடற்பயிற்சிக் கூடங்களில் இருக்கும் சில முக்கியமான கருவிகளைப் பற்றித் தெரிந்து கொள் வோம்.
ரோயிங்: இருக்கையில் உட்கார்ந்து கொண்டு, கால்கள் இரண் டையும் பெடலில் வை த்துக் கொண்டு, பக்கவா ட்டில் இருக்கும் இரு ஹேண்டில்களை கை களால் பிடித்துக் கொண் டு இருக்கை யை நகர்த் தியபடியே முன்னும் பின்னும் கைகளால் துடு ப்புத் தள்ளுவது போன் று, 25 முதல் 200 தடவை செய்ய வேண்டும். பெண்கள் குறை வாகச் செய்ய வேண்டும். இதன் மூலம் தொடை கள், கால்களில் உள்ள கொழுப்பு ஆகியன குறைந்து தோளுக்கும் நல்ல வடிவம் அமைகிறது.
சைக்கிள்: உடற்பயிற்சிக்கு என் றே வடிவமைக்கப்பட்ட இந்த சைக் கிளில், ஒவ்வொருவரும், அவ ரவர் விருப்பத்திற்கு ஏற்ப, 5 நிமிடம் முதல் அரைமணி நேரம் வரை பயிற்சி செய்யலாம். இது கால் களுக்குத் தனி அழகைத் கொடுக்கும். இதில் இருக்கும் மீட் டர் மூலம், ஒரு நாளைக்கு எத் தனை கிலோ மீட்டர் பயிற்சி செய் கிறோம் என்று குறித்துக் கொள்ளலாம்.
வைப்ரேட்டர்: மின்சாரத்தால் இயக் கப்படும் இந்த மெஷினின் பெல்ட்டை அதிகப்படியான சதைகள் இருக்கும் பகுதிகளில் எல்லாம் ஒரு நிமிடம் வீதம் 5 நிமிடங்கள் பயிற்சி செய்ய லாம். கர்ப்பப்பை தொந்தரவு இருப் பவர்கள் இதைச் செய்ய வே ண்டாம். இது, உடல் உறுப்புகளுக்கு மசாஜ் செய் வதுபோல் இருக்கும்.
உடற்பயிற்சிக் கூடங்களுக்குச் செ ல்லுமுன் உங்கள் குடும்ப மருத்து வரை ஆலோசித்துவிட்டுச் செல்லவும். தகுந்த பயிற்சியாள ரிடம் பயிற்சி பெறுவது நல்லது.
இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.
தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்