Monday, June 5அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

“சி கிளீ னர்’: ஒரு நல்ல, இலவச புரோகிராம். அதனை

கம்ப்யூட்டரின் திறனை அதிகபட்ச அளவிற்குப் பயன்படுத்த நமக்கு உதவிடும் ஒரு நல்ல, இலவச புரோகிராம் “சி கிளீ னர்’ ஆகும். அதனை முழுமை யாகப் பயன்படுத்த சில குறிப் புகள் இங்கு தரப்படுகின்றன.

கம்ப்யூட்டரில் குவியும் தேவையற்ற பைல்களை நீக்கும் பணியினை மேற்கொ ள்ள பல புரோகிராம்கள் நம க்கு இணையத்தில் கிடைக் கின்றன. இருப்பினும், மற்றவற்றிற்கும் “சி கிளீனர்’ புரோ கிராமின் செயல்பாட்டிற்கும் பலத்த வேறுபாடுகள் உள்ளன.

“சி கிளீனர்’ பயன்படுத்த மிக எளிதான ஒன்றாகும். அது மட்டு மின்றி அதிக வேகத்தில் தன் செயல் பாட்டினை மேற்கொண்டு கம்ப்யூட்ட ரையும் கூடுதல் வேகத்தில் இயங்க வைக்கும். இணை யத்தைப் பயன் படுத்துகையில் நம் கம்ப்யூட்டரை வந்தடையும் பல தற்காலிக பைல் களை நீக்குவது, ரெஜிஸ்ட்ரியில் உரு வாக்கப்படும் தேவையற்ற வரிகளை அழிப்பது, தற்காலிக இணையக் கோப்புகளை முற்றிலுமாக எடுப்பது மற்றும் அண்மையில் பயன்படுத் தப்பட்ட கோப்புகளின் பட்டியலை அழிப்பது போன்ற பல செயற் பாடுகளை மேற்கொண்டு, “சி கிளீனர்’ கம்ப்யூட்டரை கூடுதல் வேகத்தில் இயங்க வைக்கிறது. இதனை இயக்குவது எளிதாக உள்ளது என் பதற்காக, அலட்சியமாக இதனைக் கை யாள்வது சில வேளைகளில் ஆபத்தில் கொண்டு விட்டுவிடும். அப்படிப்பட்ட ஆபத்துக்களைத் தவிர்க்கவே இந்த குறிப்புகள் தரப்படுகின்றன.

1. ஆய்வு செய்திடவும் (Analyze): “சி கிளீ னர்’ பயன்படுத்தும் அனைவரும், சிகிளீ னரை இயக்கினால், எந்த எந்த பைல்க ளை அது நீக்கும் என ஆய்வு செய்வ தில்லை. இதற்கெனத் தந்திருக்கும் பட்டனைப் பயன்படுத்துவதே இல்லை. இந்த பட்டனை அழுத்தினால், இது குறி த்து நமக்கு ஓர் அறிக்கை கிடை க்கும். இதனைப் படித்துப் பார்த்த பின்னர், நாம் கிளீன் செய்வதற்கான (Run Cleaner) பட்டனை அழுத்தலாம். இதன் மூலம் அழிக்கக் கூடாதது எதுவும் அழிக்கப்படாது என்ற நம்பிக்கையை நாம் பெறலாம். அனலைசர் இயங்கிய பின்னர் கிடைக்கும் பட்டியல் மூலம், அப்ளிகேஷன் புரோகிராம் சார்ந்து எவை அழிக்கப் படுகின்றன என்ற தகவல் கிடைக்கும். இவற்றைப் பார்த்த பின்னர், எதனை யாவது நாம் தக்க வைக்க வேண்டும் என எண்ணி னால், அதற்கான விலக்கும் கட்டத்தில் டிக் அடை யாள த்தை நீக்கி செட் செய்தி டலாம்.

2.தேவைப்படும் குக்கிகளை வைத்துக் கொள்ள: “சி கிளீனர்’ இயக்கப்படுகையில் அனைத்து குக்கிகளும் அழிக்கப்படும். குக் கிகள் பல, நமக்கு இணையப் பயன்பாட்டினை விரைவாகத் தரு வதற்கு அமைக்கப்படுவதால், நாம் சிலவற்றை அப்படியே விட்டுவிட விரும்புவோம். “சி கிளீனர்’, மாறா நிலையில் கூகுள் மற்றும் யாஹூ தளங்கள் ஏற்படுத்தும் குக்கிகளைத் தொடுவ தில்லை. மற்ற சில வற்றையும் தக்கவைக்க விரும்பினால், Options டேப் பில் கிளிக் செய்து, Cookies பட்டனைத் தேர்ந் தெடுக் கவும். இங்கு கிடைக்கும் விண்டோவின் மூலம், நாம் வைத்துக் கொள்ள விரும்பும் குக்கிகளை “சி கிளீனர்’ இயக் கத்திலிருந்து விலக்கி வைக்கலாம். இதன் மூலம் முக்கிய, பயனுள்ள குக்கிகளை “சி கிளீனர்’ இயக்கத்திலிருந்து விலக்கி வைத்துக் காப்பாற்றிப் பயன்படுத்தலாம்.

3.ரெஜிஸ்ட்ரி பேக் அப் செய்க: “சி கிளீனர்’ எவ்வளவுதான் திறமையுடன் செயல் பட்டாலும், ரெஜிஸ்ட் ரியில் தேவையற்ற வரிகளை நீக்கினாலும், “சி கிளீனரை’ இயக்கும் முன்னர், ரெஜிஸ்ட்ரியை பேக் அப் செய்து கொள்வது நல்லது. ரெஜிஸ் ட்ரியை கிளீன் செய்திட முயற்சிக்கும் ஒவ் வொரு முறையும், அதனை பேக் அப் செய்து வைக்க “சி கிளீனர்’ நம்மை நினைவு படுத்தும். ஏதேனும் ஒரு ரெஜிஸ்ட்ரி கீக்கான வரிகளை, “சி கிளீனர்’ நீக்கிவிட்டால், விளைவுகள் கம்ப்யூட்டர் இயக்கத்தினை முடக்கும் அளவிற்குச் செல்லலாம். எனவே ரெஜிஸ்ட்ரியை பேக் அப் செய்வது நல்லது. “சி கிளீனர்’ தொகுப் பின் மூலமாகவே, ரெஜிஸ்ட்ரியை இரண்டு கிளிக் மூலம் பேக் அப் செய்து கொள்ளும் வசதி தரப்படுகிறது.

4.ஸ்டார்ட் அப் கிளினீங்: “சி கிளீனர்’ ஒரு போனஸ் பயன்பாட்டினையும் கொண்டுள்ளது. ஸ்டார்ட் அப் தொகுப்பில் உள்ள புரோகிராம்களை இயக்க வும், முடக்கவும் அல்லது நீக்கவும் எளிமை யான வழிகளைத் தருகிறது. வழக்கமான விண் டோஸ் தரும் வழியைக் காட்டிலும் இது எளிமை யானதும் வேகமானதும் ஆகும். Tools டேப் சென்று Startup பட்டன் கிளிக் செய்து இதனை மேற்கொள்ளலாம். புரோகிராமின் முன் உள்ள enabled/disabled பிரிவுகளில் ஒன்றைத் தேர்ந் தெடுக்கலாம். இதில் ஏற்படுத்தப்படும் மாற்றங்கள் தற்காலிகமே. எப்போது வேண்டுமானலும், நிறுத்தி வைத்துள்ள புரோகி ராம்களை ஸ்டார்ட் அப்பில் இயங்கும் வகையில் அமைக்கலாம்.

5. பதிந்ததை நீக்குதல் (uninstaller): “சி கிளீனர்’ தரும் மிக முக்கிய செயல்பாடு, கம்ப்யூட்டரில் பதிந்துள்ள புரோகிராம் களை நீக்கு வதே. வழக்கமாக, கம்ப்யூட்டரில் பதியப்பட்டுள்ள புரோகிராம்களை நீக்க, நாம் விண்டோஸ் தரும் Windows Add/Remove Programs டூலினைப் பயன்படுத்துவோம்.

“சி கிளீனர்’ அதனைக்காட்டிலும் முழு மையாகவும், வேகமாகவும் புரோ கிராம்களை நீக்குகிறது. புரோகிராம் களை நீக்கிய பின்னர், ரெஜிஸ்ட்ரி கிளீனிங் ஒருமுறை மேற்கொண்டால், புரோகிராம்களை நீக்கும் வேலை முழுமையாக மேற் கொள்ளப்படும்.

தற்காலிக பைல்களை நீக்கு வதற்கும், ரெஜிஸ்ட்ரியைக் கிளீன் செய்வதற்கு மட்டுமே சிகிளீனர் என்று பலர் எண் ணிக் கொண்டுள்ளனர். அதற் கும் மேலாக, “சி கிளீனர்’ தரும் சில வசதிகளையும், நாம் மேற்கொள்ள வேண் டிய சில செட்டிங்ஸ் முறைகளையும் மேலே பார்த்தோம். கூடுதல் பயன்பாட்டினைப் பெறுவது இனி உங்கள் சாமர்த்தியம்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.
தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: