ஒசாமா பின்லேடன் சுட்டுக்கொல்லும் நடவடிக்கைக்கு இடை யூறாக பாகிஸ்தான்
இராணுவம் வருமாயின் அவர்கள் மீதும் தாக்குதல் நடத்த அமெரிக்க அதிபர் ஒபாமா உத்தரவிட்டதாக வும்,
இதற்காகவே தான் கூடுதல் படை யினரை அனுப்புவதற்கு அவர் சம்ம தித்ததாகவும் தகவல்கள் வெளியாகி யுள்ளன.
பாகிஸ்தான் அபோதாபாத்தில் மறைந்து வாழ்ந்துவந்த ஒசாமா பின்லேடனை அமெரிக்கா நாட்டின் கடற்படை சீல் வீரர்கள் சுற்று வளைத்து சுட்டுக் கொன்றனர்.
மிக மிக இரகசியமாக மேற்கொள்ளப்பட்ட இத்தாக்குதலின் பின் னரான பரபரப்பு இன்னமும் அடங்கவில்லை.
இந்நிலையில் பின்லேடன் மீதான தாக்குதலுக்கு இடை யூறாக பாகிஸ்தான் இரா ணுவம் செயற்பட்டால் அவர் கள் மீதும் தாக்குத லை தொடுக்க ஒபாமா உத்தரவி ட்டிருந்ததாகவும் செய்திகள் வெளியாகி யுள்ளமை குறிப் பிடத்தக்கது.
இதற்கென பாகிஸ்தானுக்குள் சென்ற ஹெலிகொப்டர்கள் தவிர பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதியில்
இரண்டு தாக்குதல் ஹெலிகொப்டர்களையும், அதிகளவிலான வீரர்களையும் அமெரிக்கா தயார் நிலையில் வைத்திருந்ததாக வும் தெரிவி க்கப்படுகிறது.
இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.
தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்