Saturday, June 3அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஆண்களுக்கு ஈர முத்தம் பிடிக்கிறது ஏன்?

ஆண்களுக்கு எப்போதுமே உதடுகளை குளிப்பாட்டி எடுக்கும் அளவுக்கு முத்தமிடுவதான் பிடிக்கிற து. இதற்கு ஒரு காரணம் இருக்கிறது என்பதை சிபிஐ வைக்காமலேயே ஆராய்ந்து கண்டுபிடித்திருக் கிறார் கள்.

பெண்களின் உதடுகளில் தங்களது உதடுகளால் அபிஷேகம் செய்யும் போது, பெண்களிடம் உள்ள அன்பின் அளவை அறியும் முயற்சியாகவே ஆண்களுக்கு ஈர முத்தம் பிடிக்கிறது என்று கூறுகிறது அந்த ஆய்வு.

ஆண்களின் இந்த முத்தத்தில் காதல் மட்டுமல்ல, கொஞ்சம் ஆராய்ச்சியும் இருக்கிறது என்கிறார்கள் ஆய்வாளர் கள். நம்ம ஆளு வளமையா னவளா, செழிப்பானவளவா என்பதை அறியும் ஆராய்ச் சிதானாம் இது.

இதுகுறித்து ரட்கர்ஸ் பல் கலைக்கழகத்தின் ஆய்வா ளரான ஹெலன் பிஷர் கூறுகையில், வெறும் முத்தத்தோடு நிற்காமல் உதடுகளால் துளா வுவதைத்தான் ஆண்கள் அதிகம் விரும்புகிறார்கள். அந்த முத்தம் எவ்வளவுக்கு ஆழமாக, இருக்கிறதோ அந்த அளவுக்கு ஆண்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள்.

இன்னும் ஒரு காரணமும் அதில் இருக் கிறது. அது, பெண்ணின் உணர்ச்சி களைத் தூண்டுவிக்கும், டெஸ்டோஸ் டிரானை தங் களது முத்தத்தின் மூலம் பார்ட்னரிடம் அனுப்பி விடும் உத்தி தான் அது.

முத்தத்தின் மூலம் தனது காதலி அல்லது மனைவியை வசியப்படுத்தி விட வேண் டும், மற்றவை அப்போ துதான் எளிதாக இருக்கும் என்ற எண் ணமும் கூட ஆண்க ளின் இந்த வெட் முத்தத்திற்கு ஒரு காரணம் என்கிறார் ஹெலன்.

அமெரிக்காவின் பென்சில்வேனியாவின் ஈஸ்டன் நகரில் உள்ள லபாயெட் கல்லூரியின் ஆய்வா ளரான வென்டி ஹில் என்பவர் கூறு கையில், ஆணுக்கும் சரி, பெண் ணுக்கும் சரி முத்தம்தான் எல்லா வற்றுக்கும் ஆரம்பம். அதை நம்பி க்கையின் வெளிப்பாடாகவும் கருது கிறார்கள்.

எந்த அளவுக்கு முத்தம் ஆழமாகவும், தீவிரமாகவும் இருக்கிறதோ அதை வைத்து தங்களது பார்ட்னரின் நம்பகத்தன்மையை அறிந்து கொள்ள முடியும் என்பது ஆண் மற்றும் பெண்களின் நம்பிக்கை.

ஒரு உறவு சிறப்பாக அமையும் போது அது அருமையான பழக்கமாக மாறுகிறது. ஆனால் உறவில் லேசான விரிசல் வந்தாலும் கூட அதை ஒட்ட முடியாத கண்ணாடிச் சிதறல் களுடன் ஒப்பிடலாம் என்கிறார் பிஷர்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: