Thursday, June 17அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

காதலுக்கு இனிமை சேர்க்கும் தொடுதலும் உணர்தலும்…

னைவியோ, காதலர்களோ அவர் களது உறவு வலுவாக இருப் பதற்கு காதலுடன் கூடிய தொடு தல் முக்கிய மானது. ஆனால் நிறையப் பேர் இதில் அதிக அக் கறை காட்டுவதில்லை.

ஒவ்வொரு வெற்றி பெற்ற ஜோடி யிடமும் இந்த ரொமான்டிக் தொ டுதல்கள் கண்டிப்பாக இருக்கும். சின்னதாக ஒரு அணைப்பு, கன்ன த்தில் செல்லமாக ஒரு முத்தம், கைகளைப் பாசத்துடன் பிடித்துக் கொள்வது என சின்ன சின்ன இந்த தொடுதல்கள், காதலர்களுக் குள்ளும், கணவன், மனைவிக் குள்ளும் அன்பை வலுப்படுத்தும், காதல் பெருகச் செய்யும். நெருக்கத்தை அதிக ரிக்கும்.

அதிலும் கைகளைப் பிடித்துக் கொள்வது இருக்கிறதே, அதை விட சிறந்த அன்பை வெளிப் படுத் தும் விஷயம் இருக்க முடி யாது என்கிறார்கள். காதலனோ, காதலியோ அல்லது கணவனோ, மனைவியோ, ஒருவர் கையை இன்னொருவர் பாசத்துடன் பற் றிக் கொள்ளும்போது, மன தில் பாதுகாப்பான உணர்வு ஏற்படு மாம்.

உனக்கு நான், எனக்கு நீ என்பதை வார்த்தைகளே இல்லாமல் வெ ளிப்படுத்தும் உணர்வுதான் இந்த கைப்பிடித்தல்.

இதை இங்குதான் செய்ய வேண்டும் என்பதில்லை. எந்த நேரத் திலும், எந்த இடத்திலும் செய்ய முடியும் என்பது இதில் உள்ள விசேஷம்.

பார்க்கிலோ, பீ்ச்சிலோ, வயதான தம்பதியினர் அன்னியோன் யமாக, கைகளை பரிவுடன் பற்றிக் கொண்டு நடப்பதைப் பார்க் கும் பல இளம் ஜோடிகள், நாமும் ஒருநாள் இப்படித்தான் நடப்போம் என்று நினைக்கலாம். ஆனால் அந்த நினைப்பு வயதானவர்களுக்குத்தான் வர வேண் டும் என்பதில்லை. இளம் வயதிலேயே அந்த பாச உணர்வை நாம் கைக் கொள்ளலாம்.

ஆனால் இன்றைய மெஷின் உல கில் கைகளைப் பரிவுடன் பற் றிக் கொள்வது என்பதே நிறைய பேரு க்கு மறந்து போய் விட்டது. கைக ளை ஆதரவுடன் பற்றிக் கொள் ளும்போது ஏற்படும் உணர்வு களை அனுபவித்தால் தான் தெரி யும். கிட்டத்தட்ட ‘கட்டிப்புடி’ வைத்தியம் போலத் தான் இது வும்.

நாம் உறுதியாக இருக்கிறோம், ஒருவருக்கொருவர் அன்பாக, அனுசரணையாக, காதலுடன் இருக்கிறோம் என்பதை சொல் லாமல் சொல்லும் மொழிதான் இந்த கைப்பிடித்தல்.

எப்போதெல்லாம் மனக் கிலேசம், மனச் சோர்வு ஏற்படுகிறதோ, அப்போதெல்லாம் உங்களுக்குப் பிரியமானவரின் கைகளைப் பிடித்துக் கொண்டு சில விநாடிகள் இருங்கள். எல்லாமே உங்க ளிடம் வந்து விட்டதைப் போன்ற உணர்வு ஏற்படுவதை உணர் வீர்கள்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: