Sunday, June 4அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

குழந்தை விரல் சூப்புவதற்கு முக்கிய காரணம்

குழந்தைகள் என்றாலே விரல் சூப்புவது என்பது இயல்புதான். நாம் என்னதான் கையை எடுத்து விட்டால் குழந்தைகள் மீண்டும் மீண்டும் கையை வாய்க் குதான் கொண்டு செல்லும்.

குழந்தை விரல் சூப்புவதற்கு முக்கிய காரணம், தனக்கு முழுமை யான பாதுகாப்பு கிடைக்க வில்லை என்று உணர் வதால்தான் என்கிறா ர்கள், உளவியல் அறிஞர்கள்.

மூன்று வயது வரை இந்த பழக் கத்தை பெரிதாக நினைக்க வேண்டிய அவசியமில்லை. தாயின் கருவறையில் இருக்கும் போதே இந்தப் பழக்கம் ஏற்பட்டு விடு கிறது.

இதனால் கவலை அடைய வேண்டிய அவசியமில்லை. குறிப் பிட்ட வய தில் இந்தப் பழக்கம் மாறிவிடும். நான்கு வயது வரை இந்தப் பழக்கம் நீடித்தால் குழந்தை நல சிறப்பு மருத் துவரிடம் காட்டி சிகிச்சை பெறுவது நல்லது

பெற்றோரிடம் தேவையான அன்பு, பராமரிப்பு, பாதுகாப்பு ஆகியவை கிடைக்காதபோது விரல் சூப்பும் பழக் கம் அதிகமாக இருக்கும். ஐந்து, ஆறு வயதில் இந்த பழக்கம் இருந் தாலும் மன நெருக்கடி மற்றும் அதிக கோபம் வரும்.

கையில் கிடைத்ததை எல்லாம் தூக்கி வீசுவார்கள். இவர்களிடம் அதிகமாக அன்பு செலுத்தி அரவணை த்தால் மட்டுமே விரல் சூப்பும் பழக் கம் மாறும். நான்கு வயது முதல் 14 வயது வரை விரல் சூப்பும் குழந்தை ளுக்கு உடலில் பல மாற்றங்கள் நிகழும்.

டி.வி. பார்க்கும்போது விரல் சூப்பும் பழக்கம் அதிகம் என்பதும் உண்மை தான். குழந்தைகளின் கவனம் முழுவதும் டி.வி.க்குள் போய்விடு வதால். தங்களை அறியாமலேயே அந்த பழக்கத்தைக் கையா ளுகின்றனர்.

இதனால் குழந்தைகள் டி.வி. பார்க்கும்போது தனியாக பார்க்க விடாமல் பெற்றோர் துணையாக இருப்பது நல்லது. மேலும் குழந்தைகள் டி.வி. பார்ப் பதை தவிர்க்க வேண்டும்.

விரல் சூப்பும் பழக்கத்தை எப் படி மாற்றுவது?

விரல் சூப்பும் குழந்தையிடம் அந்த பழக்கத்தை மாற்றுவத ற்காக பெரிய பிரச்சினை களை செய்ய வேண்டாம். வயது வந்த குழந்தைகளை, விரல் சூப்பும் பழக்கத்தை விட்டுவிடுமாறு கட்டாயப் படுத்து வதோ அல்லது அவர்களை அடிப்பதோ, உடலில் சூடு போ டுவதோ கூடவே கூடாது.

4 வயதுக்கு மேல் அவர்களிடம் பக்குவமாக எடுத் துச் சொல்லி அவர்களை திருத்தலாம். அல்லது நிறைய அன்பு செலுத்தி அவர்களாகவே அந்த பழக்க த்தை நிறுத்த முயற்சிக்கலாம். குழந்தைகளுக்கு விரல்களுக்கு வேலை கொடுக்கும் விதமாக அவர் களை விளையாட வைக்கலாம்.

எதையாவது எழுதச் சொல் லலாம் அல்லது ஓவியம் வரைய வைக்கலாம். இப்படி கை விரல்களுக்கு வேலை கொடுத்தால் விரல் சூப்பும் பழக்கத்தை தன்னாலேயே கொஞ்சம் கொஞ்சமாக மற ந்து விடுவார்கள் குழந் தை கள்.

அதேபோல், தூங்கும்போது அவர்கள் கையில் பொம்மையை கொடுத்தால், அந்த பொம்மையை பிடித்துக் கொள்வதில் கவனம் செலுத்தும்போது விரல் சூப்புவதை மறப்பார்கள்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: