Saturday, June 3அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஹன்சிகா மோகம் சரிந்ததற்கு காரணம், அவர். . .

தமன்னா புகழ் பாடிய தமிழ்சினிமா, சிலபல காரணங்களால் டாப்ஸியை புகழோ புகழென்று புகழ்ந்தது. அதன்பிறகு அவரையும் கைகழுவி விட்டு ஹன்சிகா பக்கம் திரும்பியது பார் வை. இப்போது ஹன்சிகாவை மிரட்ட ஆந்திராவில் இருந்து களமிறங்கியிருக் கிறது ஒரு புயல். அவர் பெயர் ரிச்சா. ஆந்திராவில் இருந்து. முதலில் அம்மணி யின் அழகை நம்பி அழைத் தவர் செல்வ ராகவன்தான். தற்போது இயக் கிக் கொண்டிருக்கும் இரண்டாம் உலகம் படத் தின் நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்ட ஆன்ட்ரியா அதிரடியாக நீக்கப்பட்டு அங்கே அமர்த்தப்பட்டார் ரிச்சா.

செல்வராகவனைத் தொடர்ந்து சிம்புவும் தனது அடுத்த படமான ஒஸ்தியில் அம்மணியை புக் பண்ணி விட்டாராம். ஹன்சிகா வந்த புதிதில் இருந்த எழுச்சி இப்போது இந்த ரிச்சாவுக்கும் இருக்கிறது என்கிறது கோடம் பாக்கம்! நிலைமையை உணர்ந்த ரிச்சா, சென்னை யில் ஒரு மேனேஜரை நியமித்து கதை கேட்க ஆரம் பித்திருக்கிறார்.

ஹன்சிகா மோகம் சரிந்ததற்கு காரணம், அவர் நடித்த மாப்பிள்ளை, எங்கேயும் காதல் என இரண்டு படங்களும் எதிர் பார்ப்பை ஏற்படுத்தி ஏமாற்றத்தை அளித்ததால்தான் என்ப தை சொல்லவும் வேண்டுமா என்ன?

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: