Tuesday, July 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அழகு குறிப்புகள் எளிய டிப்ஸ்!

சந்தனம், முல்தானிமட்டி கலந்த, “பேஸ் பாக்’ உபயோகித்து வர, முகம் பொலிவாகவும், மிருதுவாகவும் மாறும்.

* கடலைமாவுடன் சிறிது மஞ் சள் தூள், எலுமிச்சை சாறு, ஒரு டேபிள் ஸ்பூன் பால் கலந்து முகத்தில் தடவி, காய் ந்தவுடன் மித மான சுடுநீரில் கழுவ, முகம் மிருதுவாகும்.

* ஆலிவ் எண்ணெயுடன் சர்க் கரை கலந்து உள்ளங்கை களில் தே ய்த்து கழுவ வேண் டும். இவ்வாறு செய்ய உள்ளங்கைகளின் கடினத் தன்மை மறைந்து மிருதுவாக மாறும்.

* பச்சை உருளைக்கிழங்கின் சாற்றை முகத்தில் தடவி வர சூரியக் கதிர்களால் ஏற்படும் கருமை நிறம் மாறும்.

* 2 ஸ்பூன் முள்ளங்கி சாற்றுடன் 2 ஸ் பூன் மோர் சேர்த்து, முகத்தில் தடவி, ஒரு மணிநேரம் கழித்து, சுடு நீரில் முகத்தை கழுவ வேண்டும். இதை தினசரி செய்து வர, வெப்பத் தால் முகத் தில் ஏற்படும் தவிட்டு நிற முள்ள புள்ளி மறையும்.

தேங்காய் தண்ணீரை முகத்தில் தொட ர்ந்து 6 மாதம் தடவி வர சின்னம்மை யால் ஏற்பட்ட வடு மறையும்.

* பூசணிக்காயை சிறு துண்டுகளாக்கி அதை கண்களை சுற்றி வைக்க கண்களைச் சுற்றி ஏற்படும் கரு வளையம் மறையும்.

* பப்பாளி பழத்தை அரைத்து, முகத்தில் தொடர்ந்து தடவி வர முகப்பரு, கரும்புள்ளி ஆகியவை மறை யும்.

* புளித்த மோரை முகத்தில் 15 நிமிடம் தடவி, மிதமான சுடுநீரில் கழுவ முகம் பொலிவு பெறும். இதை தொடர்ந்து 15 நாட்களுக்கு செய்து வர நல்ல பலன் கிடைக்கும்.

* முழங்கை (முட்டி) கருப்பாகவும், சொர சொரப்பாகவும் இருந்தால், தேங் காய் எண்ணெயுடன் எலுமிச்சை சாறு கலந்து தடவி வர மிருதுவாக மாறும்.

* தேன் மற்றும் எலுமிச்சை சாறு கலந்த கலவையை உதட்டின் மீது தொடர்ந்து தடவி வந்தால், தரம் குறைந்த லிப்ஸ்டிக் பயன் படுத் துவதால் ஏற்படும் கருமை நிறம் மறையும்.

தயிருடன் கடலை மாவு கலந்து முகத் தில் தடவி 15 நிமிடம் கழித்து கழுவ வேண்டும். இவ்வாறு செய்வ தால் முகத்தில் ஏற் படும் சுருக்கம் மறையும்.

* முட்டை கோஸ் சாறு, சிறிது ஈஸ்ட், ஒரு டேபிள் ஸ்பூன் தேன் மூன்றையும் கலந்து, 20 நிமிடம் முகத்தில் தடவி, மிதமான சுடு தண்ணீரில் முகத்தை கழு வ வேண்டும். இதனால், முகச் சுருக் கம் மறைந்து,முகம் பொலிவுடன் இரு க்கும்.

* சுண்ணாம்பை தண்ணீர் கலந்து காலை யில் தடவினால், மாலை க்குள் முகப்பரு மறைந்து விடும்.

* வெள்ளை முள்ளங்கி சாறுடன், 2ஸ்பூன் எலுமிச்சை சாறு, 2 ஸ்பூன் தக்காளி சாறு சேர்த்து முகத்தில் தடவி 20 நிமிடம் கழித்து, மிதமான சுடு நீரில் கழுவ வே ண்டும். இதை தொடர்ந்து செய்து வர, வெப்பத்தால் உண்டாகும் தவிட்டு நிறப்புள்ளி மறை யும்.

* உலர்ந்த சருமம் உள்ளவர்கள் கிளி சரினுடன் ரோஸ் வாட்டர் மற்றும் எலுமி ச்சை சாறு கலந்து முகத்தில் தடவலாம்.

* முகம் மிருதுவாகவும், ரோஸ் நிறத்துடனும் இருக்க ரோஜாப் பூ இதழ்களை அரைத்து, அதோடு பால் , பச்சை பயிறு மாவு, மற்றும் ரோஸ் வாட்டர் கலந்து முகம் மற்றும் கழுத்தில் தடவி வர சருமம் பளபளக்கும்.

* கரும்புள்ளி உள்ள இடத் தில், பச்சை பயிருடன் தயிர் சேர்த்து தடவ வேண்டும். அது காய்ந்ததும் கைகளால் மேலும் கீழும் நன்கு தேய்த்து பின் முகத்தை கழுவ வேண் டும். இவ்வாறு செய்தால் முகத் தில் உள்ள கரும்புள் ளிகள் மறையும்.

கடலை மாவு ஆறு டீஸ்பூன், பாலாடை இரண்டு டீஸ்பூன், எலுமிச்சம் பழச்சாறு 10 சொட்டு, கிளிசரின் ஒரு டீஸ்பூன் கலந்து தினம் ஒருமுறை முகம், கை, கழுத்து பகுதிகளில், தடவினால் வெயிலினால் ஏற்படும் கருமையை போக்கலாம். பப்பாளி கூழு டன் தேன் கலந்து முகத்தில் தடவி வந்தாலும் நல்லது.

* வெள்ளரிச்சாறு, சந்தனப்பொடி, கடலைமாவு மூன்றையும் சம அளவு கலந்து முகம், கை கால்களுக்கு தினமும் போட்டு வந்தால் முகம் பிரகாசமாக இருக்கும்.

* ஒரு லிட்டர் நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயில் நெல்லிக்காய் பொடி, தான்றிக்காய் பொடி, மருதாணி பொடி, கறிவேப்பிலை பொடி, கரிசலாங் கண்ணி பொடி, வெட்டிவேர், ரோஜா இதழ்கள், சந்தன பொடி ஆகியவை தலா 10 கிராம் சேர்த்து, எண்ணெயில் போட்டு கொதிக்க வைக்கவும். இந்த கலவையை நாலு நாள் வெயிலில் வைக்க வேண்டும். சூரிய கதிர்கள் பட்டு எண்ணெயில் எசன்ஸ் இறங்கும். பின் வெள்ளைத் துணியில், அதை வடிகட்டவும். குளிக் கும் முன் இதை தலையில், தேய்த்து வந்தால், முடி உதிர்தல், நரைமுடி குறை யும், செம்பட்டை முடி கருமையாகும், பொடுகு நீங்கும்.

* நாம் சாப்பிடும் உணவு மூலமாகவே அழகை அதிகப்படுத்திக் காட்டலாம். பேலன்ஸ்டு டயட் என்பது மிக மிக அவசியம். வைட்டமின்கள், தாதுப் பொருட்களை உணவில் சேர்த்து கொ ள்ள வேண்டும். காய்கறி, பழங்களையும் அதிகளவில் சாப்பிட வேண்டும்.

புருவங்களை சீர்திருத்தி கொண்டால் முகம் அழகாக இருக்கும். மிக மெ ல்லிய புருவம் முகத்தை குண்டாகக் காட்டும். மிக அடர்த்தியான புருவம் வைத்துக் கொள்வதும் தற்போது நாகரிகம் இல்லை.

*நெயில் பாலிஷ் வாங்கும்போது, நம் நிறத்திற்கு ஏற்ற வகையில் தேர்ந் தெடுத்து வாங்க வேண்டும்.

*லிப்ஸ்டிக் போடும் போது, மெல்லிய உதடு உடையவர்கள் இளம் வண்ணங்களையும், பருமனான உதடு உடையவர்கள் ஆழ்ந்த வண்ணங் களையும் உபயோகப் படுத்த வேண்டும்.

*காலை நேரங்களில் லைட் பிரவுன் அல்லது லைட் ப்ளு நிறமுள்ள ஐ ஷே டோவை பயன்படுத்துங்கள். மாலை அல்லது இரவு நேர ரிஸப்ஷன், பார்ட்டி போன் றவைகளில் கலந்து கொள்ளும் போது டிரஸ்ஸிற்கு ஏற்ற நிறத்தில் பச்சை, நீலம், பிங்க் போன்ற நிறங்களை பயன்படுத் தலாம்.

நம் அழகை வெளிப்படுத்து வதில் ஆடைக்கு முக்கிய பங்கு ண்டு. ஒல்லியாக இருக்கும் பெண் கள் இறுக்கமாக உடை அணியக் கூடாது. பிளவுசும் இறுக்கமாக இல்லாமல் சிறிது தொள தொள வென அணிய வேண்டும். பருமனான உடல் வாகு கொண்டவர்கள் இறுக்க மாக உடையணிவது பருமனைக் குறைத்து காட்டும்.

*சேலை லேசான வண்ணமுடையதாக இருந்தால், பிளவுஸ் சற்று அழுத்தமான வண்ணமு டையதாக இருப்பது நல்லது. சேலை யின் வண்ணம் அழுத்தமாக இருந் தால், பிளவுஸ் லேசான நிறத்தில் இருப்பது நல்லது. ஒரே நிறத்தில் சேலை, பிளவுஸ் என பார்த்து வாங்குவதை விட, இவ்வாறு அணி வது அழகை மேம்படுத்திக் காட்டும்.

*ஷாப்பிங் போகும்போது சிறிய பூக்கள் போட்ட இளம் வண்ண நைலான் சேலைகளையே பயன்படுத்துங்கள். கோவில், கடற் கரை போன்ற பொது இடங்களுக்கு செல்லும் போது ஆழ்ந்த வண்ணம் கொண்ட காட்டன் சேலைகளே ஏற்றது.

*உயரமாக உள்ள பெண்கள், தங்கள் உயரத்தை சற்றுக் குறைத்துக் காட்ட குறுக்கு கோடு போட் ட சேலைகளை தேர் தெடுத்து அணிய வேண்டும். குள்ளமான பெண் கள் உயரத் தை சற்று அதிகரித்து காட்ட நேர்வாக்கில் கோடு போட்ட சேலை களை அணிய வேண்டும்.

*மூக்கு பெரிதாக உள்ள பெண்கள் தங் கள் கூந் தலை தூக்கி சீவ வேண்டும். கூந்தலை அழுத்தி வாரக்கூடாது. தூக்கி சீவினால் மூக்கு அளவுடன் இருப்பதை போல் தோற்றம் கிடைக்கும்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: