Wednesday, June 7அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஆங்கிலத்தில் இருந்து தமிழில் இலக்கணத்துடன் மொழிப் பெயர்க்கும் “சாப்ட்வேர்’

ஆங்கிலத்தில் இருந்து தமிழில் இலக்கணத்துடன் மொழிப் பெயர்க்கும் “சாப்ட்வேர்’ உருவாக்கியுள்ளனர் கோவை, அமிர்தா பல்கலை ஆராய் ச்சிக் குழுவினர்.

சர்வதேச அளவில் ஆங்கில மொ ழிக்கு “மவுசு’ அதிகம் என்பதால், கட்டாயமாக கற்க வேண்டியுள்ள து. ஆங்கிலத்தை அந்தந்த மா நில மொழிகளில் மொழிபெயர்க் கும் கம்ப்யூட்டர் சாப்ட்வேர் இருந் தாலும், முழுமையான பயன் கிடைப்பதில்லை. இந் நிலையில், தமிழ் மொழி இலக் கணத்துடன், செயல், பால்விகுதி, காலத்துக்கே ற்ப மொழிபெயர்ப்பு செய்யும் தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளனர், கோவை அமிர்தா பல் கலை கணிப்பொறியியல் மற்றும் செய்வலை அமைப் பியல் மேம்பாட்டு மையத்தினர் (சென்).

மொழிபெயர்ப்பு சாப்ட்வேர் குறித்து, “சென்’ குழுவைச் சேர்ந்த சோமன், தனலட்சுமி, ஆனந்தகுமார், மணிகண்டன் ஆகியோர் கூறிய தாவது: கம்ப்யூட்டர் துறையின் அபரிமிதமான வளர்ச்சி காரணமாக, உலகின் பல்வேறு நாடு களில் இயற்கை மொழிகளை கம்ப்யூட்ட ருக்குள் புகுத்தும் முயற்சி நடக்கிறது. அந்தந்த நாட்டு மொழிகளில் பலரும் வெற்றி பெற்றுள்ளனர். தமிழ் இயற்கை மொழி ஆய்வில் 2007ல் இருந்து ஈடு பட்டுள்ளோம். கம்ப்யூட்டர் மொழிப்பெயர்ப்புக்கு தேவையான மொழியியல் கருவி, துவக்க நிலை மொழிபெயர்பு சாதனம் தற்போது கண்டுபிடிக்கப்பட்டு ள்ளது. ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழிப் பெயர்க்கலாம். தமிழ் சொல்வகை அடையாளப்படுத்தி, தொடர் பகுப்பான், உரு பனியல் பகுப்பாய் வி போன்ற சாப்ட்வேர் மூலம் ஆங்கில சொற் றொடர்கள், வார்த் தை, பால்விகுதி, காலம் போன்றவற் றின் அடிப்படையில் தமிழில் மொழிப்பெயர்க்கப்படுகிறது. எந்த வினைச் சொல்லாக இருந்தாலும், எப்போது, எந்த பால் விகுதியை குறிக்கும் என கணித்து மொழிபெயர்க்கப்படும்.

வார்த்தைகளில் குறில், நெடில், வினை, மாத்திரை போன்ற அடிப் படை இலக்கணத்தையும் அடையாளம் காட்டும். எனவே, ஆங்கி லம் தெரியாத மாணவர்கள் உட்பட பலரும் இந்த சாப்ட்வேரை பயன்படுத்தி எளிதாக தமிழில் மொழிபெயர்க்கலாம். ஆசிரியர் கள் உதவி யின்றி இலக்கணத்தை கூட கற்க முடியும். இந்த தொழில்நுட்பத்தை மேலும் மேம்படுத்தும் முயற் சியில் ஈடு பட்டுள்ளோம். இந்தி மொழியிலும் சாப்ட்வேர் உருவாக்கப்ப ட்டுள்ளது; அடுத்தடுத்து பிற முக்கிய மொழிகளிலும் மொழிபெ யர்க்கும் சாப்ட்வேர் உருவாக்கப்படும். ஆங்கிலத் தில் உள்ள சிற ந்த புத்தகங்களை கூட அந்தந்த மொழிகளில் எளிதாக மொழி பெயர்த்து பயனடையலாம். இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: