Saturday, June 3அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பாதாம் பால் தயாரிக்க…

பாலை எளிய முறையில் மதிப்புக்கூட்டும் முயற்சியால் மூன்று மாதம் கெடாமல் வைத்திருக்கலாம். இதிலிருந்து பாதாம் பால் தயாரிக்கலாம்.  பாதாம் பாலில் பத்து வகை யான நறுமண பால் தயாரிக்கலாம்.
1. பாதாம் பால்,
2. பிஸ்தா மில்க்,
3. ரோஸ் மில்க்,
4. ஸ்ட்ராபெரி மில்க்,
5. ஏலக்காய் மில்க்,
6. வென்னிலா மில்க்,
7. பைன் ஆப்பிள் மில்க்,
8. ஜிகர்தண்டா மில்க்,
9. சாக்லேட் மில்க்,
10. காபி மில்க் தயாரித்து கடையில் விற்பனை செய்வதன் மூலம் குறைந்த முதலீட்டில் வீட்டிலிருந்தபடியே அதிக லாபம் சம்பாதி க்கலாம்.

பாலை கெடாமல் வைத்திருக்க எந்தவிதமான ரசாயன கெமிக் கல் மற்றும் லிக்விட் பிரிசர்வேட்டிவ் கிளாஸ்-2, மற்ற கெமிக் கல் எதுவும் கலக்காமல் பாலை எளிய முறையில் மதிப்பு கூட்டும் முயற்சியால் பாலில் பாதாம்பால் தயாரித்து வீட்டிலி ருந்தே கடைக்கு விற்பனை செய்தால் கூடுதல் லாபம் கிடைக் கும்.

ஒரு பாட்டில் பாதாம்பால் தயாரிக்க பாட்டில், பால், சர்க்கரை, எசன்ஸ், மூடி, லேபிள் அனைத்து மூலப்பொருட்களும் சேர்த்து ஒரு பாட் டிலுக்கு ரூ.5 அடக்கவிலை ஆகும். நாம் கடைக்கு ஒரு பாட்டில் ரூ.10 விற்பனை செய்ய வேண்டும். பாட்டிலின் மேல் லேபிளில் எம்.ஆர்.பி. ரூ.15 அச்சிட்டு கடைக்கு விற்பனை செய்ய வேண்டும். கடைக் காரர் ஒரு பாட்டில் ரூ.13 விற்பனை செய்து ரூ.3 லாபம் அடைவார். தினமும் 100 பாதாம்பால் பாட்டில் விற் பனை செய்தால், மாதம் ரூ.1000 லாபம் சம்பாதிக்கலாம்.

இதே முறையில் பாக்கெட் பாலிலிருந்து மற்றும் பசுமாடு, எருமை மாடு வைத்திருப்பவர்களும் பாதாம்பால் தயாரிக்கலாம். 1 லிட்டர் பாலில் வெண்ணெய் எடுக்கும் இயந்திரத்தைப் பயன் படுத்தி 50கிராம் வெண் ணெய் எடுக்கலாம். அதே பா லில் பாதாம் பால் தயாரித் தால் கூடுதல் வருமானம் கிடை க்கும். 5 லிட்டர் பாலில் கால் கிலோ வெண் ணெய் நமக்கு கிடைக்கும். வெண் ணெயின் மதிப்பு ரூ.60. வெண் ணெய் எடுத்த பாலில் பாதாம் பால் தயாரித்தால் பாலின் விலை ஒரு லிட்டர் ரூ.10 அடக்க விலை ஆகும்.

இந்த வகையான பாதாம்பால் எளிய முறையில் இயந்திரத்தின் உதவி இல்லாமல் கையால் சோடா மூடி போடும் சிறிய இயந்திர த்தை பயன் படுத்தி குறைந்த முதலீட்டில் தயாரிக்கலாம். சோடா மூடி இயந்திரத்தின் விலை ரூ.2000. வீட்டில் உள்ளவர்கள் மூலம் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 1000 பாட்டில் தயாரிக் கலாம்.

மற்றொரு முறை முழுவதும் இயந்திரத்தை பயன்படுத்தி பாதாம்பால் தயாரிக்கலாம். இதில் இரண்டு வகைகள் உள்ளது.

1. வெர்டிகல் டைப் – இதன் மூலம் ஒரு நாளைக்கு 2000 பாதாம் பால் பாட்டில் தயாரிக்கலாம். வேலை ஆட்கள் 6 பேர் தேவைப் படும். இதன் விலை 2 லட்சம் முதலீடு செய்ய வேண்டும். 2. ஹரி ஜான்டல் டைப் – இதன் இயந்திரத்தின் விலை 4 லட்சம். இதன் மூலம் நாள் ஒன்றுக்கு 6 ஆயிரம் பாதாம் பாட்டில் தயாரிக் கலாம். வேலையாட்கள் 10 பேர் தேவைப்படும். இதன் இரண் டுக்கும் இடம் 1000 சதுரடி தேவைப்படும்.

தொடர்புக்கு: பி.சந்திரமோகன், 94892 56025.

-கே.சத்தியபிரபா, உடுமலைப்பேட்டை.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

One Comment

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: