Saturday, July 31அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி!

5 மாநில சட்டசபை தேர்தலுக்கு வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கிய து. மேற்கு வங்காளத்தில் மொத் தம் உள்ள 294 தொகுதிகளுக்கு ஓட்டு எண்ணிக்கை 87 வாக்கு எண்ணிக்கை மையத்தில் நடந் தது. ஆளும் கூட்டணியான மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு தலை மையிலான இடதுசாரி கூட்ட ணியை வீழ்த்த திரிணாமுல் காங்கிரஸ் தலைவரான மம்தா பானர்ஜி கடும் பிரசாரம் செய்தார்.
காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து மார்க்சிஸ்டு கம்யூ னிஸ்டை எதிர்கொண்டார். அவரது தேர்தல் பிரசாரத்துக்கு நல்ல பலன் கிடை த்தது. கருத்து கணிப்புக்கு ஏற்றவாறே திரிணாமுல் காங்கிரஸ் கூட்டணி தொடக்கத்தில் இரு ந்தே முன்னணி பெற் று வந்தது. நேரம் செ ல்ல செல்ல திரிணா முல் காங்கிரஸ் கூட் டணி அமோக வெற் றியை நோக்கி சென் றது.   முன்னணி நில வரம் வெளியாகி இருந்த 285 தொகுதி களில் திரிணாமுல் காங்கிரஸ் கூட்டணி 215 இடங்களில் முன்னணியில் இருந்தது.
மூன்றில் 2 பங்கு தொகுதியில் முன்னணி பெற்று இடது சாரிக்கு கடும் தோல்வியை கொடுத்தது. திரி ணா முல் காங்கிரஸ் கட்சி மட்டும் 177 தொகுதியில் முன்னணியில் இருந் தது. காங்கிரஸ் 35 தொகுதியில் முன் னணியில் இருந்தது. இடது சாரி கூட் டணி 70 இடங்களில் முன்னிலை பெற்று இருந்தது. மார்க்சிஸ்டு கம்யூ னிஸ்டு 47 இடங்களிலும், இந்திய கம்யூனிஸ்டு 3 இடங்களிலும், பார் வர்டு பிளாக் 13 தொகுதிகளி லும் ஆர்.எஸ்.பி. 4 தொகுதிகளிலும் முன்ன ணியில் உள்ளது.  
ஆட்சி அமைக்க 147 இடங்கள் தேவை. திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தனித்து ஆட்சி அமைக்கும் வகையில் 170 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. இதனால் அந்த கட்சி மேற்கு வங்காள த்தில் முதல் முறையாக தனித்து ஆட்சி அமைக்கிறது. மம்தா பானர்ஜி தற்போது மத்திய மந்திரியாக உள்ளார். அவர் மத்திய மந்திரி பதவியை ராஜினாமா செய்து விட்டு மேற்கு வங்காள முதல்-மந்திரியாக பொறுப்பேற்பார் என்று எதிர்பார்க்கப் படுகிறது. மம்தாபானர்ஜியின் இந்த வெற்றி வரலாற்று சிறப்பு மிக்கது.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: