Tuesday, January 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

மோட்டார் வாகனப் பதிவு சட்டம்

ஒரு வீட்டை விலை பேசி பணம் கொடுத்த பிறகு, அதை நம் பெயருக்குப் பதிவுசெய்யாமல், அந்த வீட்டுக்குள் குடியிருந்தால் வில்லங்கம் தான். ‘இந்த வீட்டின் உரிமையாளர் நான்தான். காலி செய்யுங்கள்’ என்று யாராவது வந்து நம்மை வெளியேற்றி விட லாம். ஹைவே டிபார்ட் மென்ட்டோ அல் லது அரசுத் துறையோ ‘இது புறம் போக்கு இடம். எனவே அரசுக்குச் சொந்தமானது’ என்று வீட்டை இடித்துவிட்டுக்கூட போ கலாம். இதே போன்ற பிரச்னை கள்தான் வாகனம் வாங்கும்போதும் ஏற்படும். ஒரு முறை எனது கட்சிக்காரர் ஒருவர் வந்தார்… ‘‘சார், நல்ல கண்டிஷனில் உள்ள ஒரு செகண்ட் ஹேண்ட் பைக் வாங் கினேன். 18 ஆயிரம் ரூபாய்க்கு விலை பேசி, அட் வான்ஸாக பத்தாயிரம் கொடு த்தேன். அந்த வாகனத்தின் ஆர்.சி.புத் தகம் ஃபைனான்ஸ் கம்பெனி யில் இருந்ததால், அதை ரிலீஸ் செய்து கொடுத்த பிறகு பாக்கி 8 ஆயிரம் ரூபா யைக் கொடுப்பதாகப் பேசி னோம். மூன்று மாதம் ஆகியும் ஆர்.சி. புத்தகம் தரவில்லை. பல முறை கேட்டுப் பார்த்தும் பயனில்லை. ‘பத்தாயிரம் ரூபாய் க்கு நல்ல கண்டிஷனில் உள்ள பைக் கிடைத்திருக்கிறதே’ என்று நானும் ஆர்.சி.புத்தகம் கேட்பதையே விட்டுவிட்டேன்’’ என்றார். ‘‘ஆர்.சி.புத்தகத்தை உங்கள் பெயருக்கு மாற்றிக்கொள்ளுங்கள். இல்லாவிட்டால் நாளைக்கு ஏதாவது விபத்து போன்ற பிர ச்னைகள் வந்தால் ரொம் ப ரிஸ்க்காகிவிடும்’’ என்று நான் சொன்ன தும், ‘‘பேல ன்ஸ் 8 ஆயிரம் ரூபாயைக் கொடுத்துவிட்டு ஆர்.சி.பு த்தகத்தை வாங்கி வந்துவிடு கிறேன்’’ என்று சொல்லி விட்டுச் சென்றவர், ஒரு வாரம் கழித்து திரும்ப வந்து, ‘‘சார் என் பைக்கை இரண்டு நாளை க்கு முன்னாடி போலீஸ் வந்து தூக்கிட்டுப் போயிட்டாங்க… அது திருட்டு பைக்காம். எனக்கு பைக் விற்றவன் 20 வண்டிகளுக்கு மேல திருடியதாச் சொன் னாங்க… இப்ப அந்த பத்தாயிரம் ரூபா யை திரும்ப வாங்குவது எப்படி?’’ என் றார். ‘‘நீங்க கவனக்குறைவா இருந்த தற்கு இந்தப் பத்தாயிரம் ரூபாய் அபராதம் என்று நினைத்து விட்டு விடுங்கள். இதைத் தெரிந்தோ தெரி யாமலோ வாங்கியதற்கே உங்கள் மீது திருட்டுப் பொருளைப் பெற்ற தாக வழக்குப் போடலாம். அட்லீஸ்ட், அந்த வழக் கிலிருந்து தப்பித்தோம் என்று மனதை தேற்றிக் கொள்ளு ங்கள்’’ என்று சொன்னேன். இந்தச் சம்பவம் பைக்குக்கு மட்டும் அல்ல, எல்லா வாகனங்களுக்கும் பொருந்தும்! நாம் ஒரு புது வாகனத்தை வாங்கும்போது எந்தப் பிரச்னைகளும் வராதபடி, பதிவுக்குத் தேவையான அனைத்து விவரங்களையும் டீலர் நம க்குக் கொடுத்து விடுகிறார். நாம் நேரடி உரிமையாளர் ஆகி விடுகி றோம். ஆனால், பழைய வாகனத்தை வாங்கும் போது எப்படி உரிமையை மாற்றிக்கொள்வது? ஆர்.சி. புத்தகம் இல்லா மல் அதை வாங்கலாமா? ஒரு வீட்டையோ, காலி மனையையோ விற்பவர் பத்திரப் பதிவு அலுவலகத்துக்குச் சென்று வாங்குபவ ரிடமிருந்து பணம் பெற்று க்கொண்டு, விற்பனை செய்ததற்கான பத்திரத்தில் கையெழுத்துப் போடு வதுடன் அவரது வேலை முடிந்து விடுகிறது. ஆனால், மோட் டார் வாகனச் சட்டப்படி தன் பெயரில் பதிவு செய்யப்பட்ட பழைய கார், பைக் மற்றும் இதர வாகனங்-களை விற்கும் போதும் வாங்கும்போதும் நாம் பதிவு அலுவலகத்துக்குச் செல்வதில்லை. அதே சமயம், அந்த விற்பனை பற்றி மோட்டார் வாகனப் பதிவு அலுவலகத்துக்கு தகவல் தர வேண்டியது இருவருடைய கடமை ஆகிறது. ஒருவர் தனது காரை பதிவு செய்யப்பட்ட அதே மாநிலத்துக்குள் இருப்பவருக்கு விற்பனை செய்திருந்தால், 14 நாட்களுக்குள் விற்பனை செய்யப்பட்ட நபரின் பெயர் மற்றும் முழு விலாச த்தையும் படிவம் 29&ல் பூர்த்தி செய்து, மோட்டார் வாகனப் பதிவு அலுவலகங்களுக்கு அக்னாலெட்ஜ்மென்ட் அட்டையுடன் பதிவுத் தபாலில் அனுப்ப வேண்டும். அதன் நகலை நம்மிடமிருந்து வாகனத்தை வாங்கிய வருக்கும் அனுப்ப வேண்டும். இது விற்ப னை செய்பவரின் கடமை. ஒரு வேளை நாம் வெளி மாநிலத்தில் இருப்ப வருக்கு வாகன த்தை விற்ப னை செய்து இருந்தால், விற்பனை செய்த 45 நாட்க ளுக்குள் எந்தப் பதிவு அலுவலக எல்லைக்குள் வாகனத்தை வாங்கியவர் இருக்கி றாரோ, அந்த அலுவலகத்துக்கு நாம் தகவல் தரவேண்டும். அப்படி வெளி மாநிலத்தில் விற்பனை செய்யும் போது, ஏற்கெ னவே பதிவு செய்யப்பட்ட அலுவலகத்திலிருந்து பெறப்பட்ட ‘தடை இல்லாச் சான்று’ (No objection Certificate) அல்லது தடை யில்லா சான்றுக்கு மனு செய்து 30 நாட்கள் ஆகியும் கிடை க்கவில்லை என்பதற்கான ஆதாரங்களை வைத்து அனுப்ப வேண்டும். வாகனத்தை வாங்கியவர், அவர் குடியி ருக்கும் அல்லது வியாபா ரம் செய்யும் இடத் தில், எங்கு அந்த வாகனத் தைப் பயன் படுத்துகி றாரோ அந்த மோட்டார் வாகனப் பதிவு அலுவல கத்தில் பதிவுப் புத்தகம், இன்ஷ¨ ரன்ஸ் அதற்குரிய கட்ட ணம் ஆகிய வற்றுடன் வெளி மாநிலமாக இருப் பின், தடையில்லா சான்று அல்லது அந்தச் சான்றுக்கு மனு செய்து 30 நாட்களுக்குள் கிடை க்க-வில்லை என்பதற்கான ஆதாரங்-களுடன் மனு செய்து, ஆர்.சி. புத்தகத்தை தங்கள் பெயரு க்கு 30 நாட்களுக்குள் மாற்றி க்கொள்ள வேண்டும். இப்படி வாங்குபவரோ, விற்பவரோ தங் கள் கடமைகளை குறிப்பிட்ட காலத் துக்குள் செய்யாவிட்டால், மோட்டார் வாகனச் சட்டப்படி அபராதம் செலுத் தக் கடமைப்பட்டவராவர். வாகனத் தை வாங்கியவர் பெயர் மாற்றம் செய் யாமல், பழைய உரிமையாளரின் பெயரி லேயே வாகனத்தை ஓட்டி ஏதா வது விபத்து ஏற்பட்டால், அதற்கு இன்ஷ¨ரன்ஸ் இருந்தாலும் இழப்பீடு தொகை பெற முடியாது. புதிய உரிமை யாளரின் பெயர் ஆர்.சி. புத்தகத்தில் மாற்ற ப்பட்டதும் அதன் நகலை இன்ஷ¨ரன்ஸ் கம்பெனியில் கொடுத்து, ஏற்கெனவே பழைய உரிமையாளர் பெயரில் உள்ள இன்ஷ¨ரன்ஸ் பாலிசி யையும் குறிப்பிட்ட கட்டணம் (டிரான்ஸ்ஃபர் பீஸ்) செலுத்தி அவர் பெயருக்கு மாற்றி விட்டால் சட்டப்படி எந்தச் சிக்கலும் வராது! ஒருமுறை பதிவு செய்த வாகனத்தை மறுபதிவு செய்ய முடியுமா? ஒருமுறை வாகனத்தைப் பதிவுசெய்துவிட்டால், மீண்டும் பதிவு செய்து புதிய எண் பெற முடியாது. அந்த வாகனத்தின் பதிவுக் காலம் காலாவதியாகும்போது, அதைப் புதுப்பிக்க மட்டும்தான் முடியும். எத்தனை உரிமையாளர்கள் மாறினாலும் மறு பதிவு செய்ய முடியாது. அந்த வாகனம் முழுவதும் பயன்படுத்த முடியாத காலம் வரையிலும் அதற்கு ஒரே பதிவு எண்தான். உரிமையாளரின் பெயர், விலாசம் மாறலாம். இந்தியாவின் எந்த மாநிலத்துக்கு எந்த மூலைக்குச் சென்றாலும் நமக்கு அதே பதிவு எண் தான். ஆனால், நாம் ஒரு மாநிலத்தில் பதிவு செய்த வாகனத்தை வேறு மாநிலத்தில் 12 மாதங்கள் வரைதான் பயன்படுத்த முடியும். அதற்கு மேல் பழைய பதிவு எண்ணுடன் பயன் படுத்த முடியாது. அப்படிப் பயன்படு த்துவது சட்டப்படி குற்றமாகும். நாம் சென்னையில் பதிவு செய்த வாகனத்தில் பெங்களூர் சென்று 12 மாதங்களுக்கு மேல் அங்கு பயன்படுத்த முடியாது. அவ்வாறு பயன்படுத்தும்போது கர் நாடகப் பதிவு ரீ&ரெஜிஸ்ட்ரேஷன் கட்டாயம் செய்ய வேண்டும்! திவை மறுக்க முடியுமா? ஒரு வாகனம் திருடப்பட்டது என்று சந்தே கிக்கக் காரணம் இருந்தாலும், வாகனம் சாலை யில் ஓடும் போது இயந்திரக் கோளாறு காரணமாக பிறர் உயிருக்கு ஆபத்து விளை விக்க வாய்ப்பு இருந்தாலும், மோட்டார் வாகனச் சட்டத் தில் குறிப்பிடப்பட்டிருக்கும் வரைமுறைகளுக்குள் அந்த வாகன த்தின் தன்மை, அமைப்பு போன்றவை இல்லை என் றாலும், பதிவுக்கு வரும்போது தேவையான அனைத்து விவரங் களையும் மனு தாரர் தரவில்லை என்றாலும், தவறான தகவல்களை மனுதாரர் கொடுத்திருந்தாலும், வேறு மாநில வாகனம் என்றால் அதன் முந்தைய பதிவு எண் விவரங்கள், சான்றுகள் ஆகிய வற்றை தரவில்லை என்றாலும் பதிவு செய் யும் அதிகாரி எழுத்து ப்பூர்வமாக, உத்தரவில் காரணங்கள் குறிப்பிட்டு பதிவு செய்ய மறுக்கலாம். இதன் ஒரு நகலை மனுதாரருக்கு அளிக்க வேண்டும்! வாகன உரிமையாளர் இறந்து விட்டால்… ஒரு வாகன த்தின் உரிமையாளர் இறந்துவிட்டால், அதனைப் பயன்ப டுத்தப்போகும் வாரிசுதாரர் சம்பந்தப்பட்ட மோட்டார் வாகனப் பதிவு அலுவலகத்துக்கு 30 நாட்களுக்குள் உரிமையாளர் இறந்து போனது பற்றியும், அதை தான் பயன் படுத்தப் போவதையும் தகவல் கொடுத்துவிட்டு, இறந்து போனவரின் பெயரிலேயே மூன்று மாதங்கள் வரை தொடர்ந்து உபயோகப்படுத்தலாம். இந்தக்காலகட்டத்துக்குள் ஆர்.சி.புத் தகம்,  இன்ஷ¨ரன்ஸ், உரிமை யாளரின் இறப்புச் சான்று மற்றும் அதற்குரிய கட்டணம் செலுத்தி, படிவம் 31&ல் இறந்து போன வரைப் பற்றிய முழு விவர ங்களையும், தற்போது பயன்படுத் துபவர் பெயர், விலாசம், உறவுமுறை ஆகியவற்றையும் குறிப் பிட்டு, இறந்துபோனவரின் வாரிசுதாரர் என்பதற்கான சான்று களுடன் மனு செய்து, தங்கள் பெயருக்கு பதிவை மாற் றிக்கொள்ள வேண்டும்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

8 Comments

 • M.Mohamed Iqbal

  நான் ஒரு பழைய பைக் மாடல் வாங்கலாம் என்று இருக்கிறேன். அந்த பைக்கின் Fc_Tax எல்லாம் 2011-ல் முடிந்து விட்டது. அதை என் பெயருக்கு மாற்றி Fc_Tax எல்லாம் திரும்ப எவ்வாறு புதிப்பிப்பது. ?

 • Pushparaj v

  நான் ஒரு ஷோ ரூமில் பைக் ஒன்றை வாங்கி 3மாதங்கள் ஆகியும் ,அதற்கான பதிவிற்காக அவர்கள் அழைக்கவும் இல்லை,நான் தொலைபேசியில் அழைத்தாலும் சரியான பதிலும் இல்லாமல் என்னை இந்த வாரம் ,அடுத்த வாரம்,என அலையவிட்டு சங்கட படுத்துகின்றனர்.இதற்கும் ,நான் select செய்த மாடலிலேயே சிவப்பு நிறம் கேட்டும் எடுக்க செல்லும் கடைசி நேரத்தில் ஏதேதோ காரணம் கூறி நிறம் மாற்றிதான் கொடுத்தார்கள்..நானும் நல்ல நேரம் முடிவதற்குள் எடுக்க வேண்டுமே எனும் எண்ணத்தில் மனசில்லாமல் வாங்கி கொண்டு வந்து விட்டேன்.ஆனால் இப்போது அவர்களின் சேவை பிடிக்காததனால் மன உளைச்சலால் தவிக்கிறேன். நான் தந்தது 89000/- ஆனால் bill 72000 க்கு மட்டுமே. நான் என்ன செய்யவேண்டும்? வண்டியை திரும்ப தந்துவிட்டு பணத்தை பெற்று கொள்ளவா? இல்லை நான் வழக்கு அவர்கள் மீது பதிய வாய்ப்பு உள்ளதா?

  • மீதித்தொகையை நீங்கள் வாங்கி விட்டீர்களா? வாங்க வில்லையென்றால் முதலில் அதனை திருப்பி வாங்குங்கள். அப்புறம் சொல்கிறேன்.

 • Pushparaj v

  இல்லை அந்த மீதி பணம் சாலை வரி,ஆர்.டி.ஓ.,இன்சூரன்ஸ் காக வசூலிக்கபடுவதாக கூறினார்கள்.ஆனால் பில் தரவில்லை

  • P. Senthilkumar

   2005 மாடல் டாடா ஏஸ் fc 2019 desember மாசம் முடிந்து விட்டது, 27/7/2020 வரை பசுமை வரி சான்று உள்ளது, 15/5/2019 இல் லைஃப் டாக்ஸ் 6000/ கட்டி விட்டேன், இந்த லைஃப் டாக்ஸ் காலம் எவ்வளவு காலம் செல்லுபடியாகும்? வண்டி முதன் முதலில் பதிவு செய்த நாள் முதல் 15 வருடங்களுக்கும் மட்டுமா? இல்லை வண்டி உடைக்கும் வரையுமா?

 • Raghu

  நான் பழைய வண்டிய 2 வருடங்களுக்கு முன் வாங்கினேன்.. அதில் rc book பெயர் மாற்றி விட்டேன்.. ஆனால் இன்சூரன்ஸ் book பெயர் மாற்றவில்லை… நான் 2 வருடமாக இன்சூரன்ஸ் கட்டி வருகிறான்.. இப்போது நான் எனது policy தொகையை கோர முடியுமா… pls reply me…… thank u sir

Leave a Reply