Monday, August 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஹோம் லோன் வாங்க…, வாங்க…

ஹோம் லோன் வாங்க…

1. ஹோம் லோன் வாங்கப் போறீ ங் களா..? அதுக்கு முன்னால கொ ஞ்சம் ஹோம் வொர்க் செய்யலா மா…?

2. இன்னொரு முக்கியமான விஷ யம்… உங்களுக்கு 21 வயது நிரம் பியிருக்க வேண்டும். அதற் கான சான்றிதழ் மிகவும் அவசியம்.

3. ஏதேனும் ஒரு பேங்குல அக்க வுண்ட் வைச்சிருக்கணுமே… பாஸ்புக் கைவசம் இருக்கா..? இது ரொம்ப முக்கியம்ங்க.

4. வங்கி மேலாளரை அணுகும்போது இருப்பிடச் சான்றிதழ், ரேஷன் கார்டுன்னு எதையாச்சும் காண்பிச்சே ஆகணும். வாக் காளர் அடையாள அட்டை, டிரைவிங் லைசென்ஸ் இருக்கிறதா..? அதை யும் மறக்காம கொண்டு போங்க. மாத வருமானம் பெறு வதற்கான சாலரி ஸ்லிப் இருந்தால் உத் தமம்.

5. விவசாயம் செய்யறது. விசைத் தறி ஓட்டறதுன்னு ஏதோ பொழ ப்பு ஓடிட்டிருக்கு. இதுல நிலை யான மாத வருமானத்தை நினை ச்சுக் கூட பார்க்க முடியாதே…? உங்களின் கவலை நியாயமானது தான். ஆனா, அதுக்கும் வழி இருக்கே… ஏதேனும் ஒரு வங்கியில் ஒரு குறிப்பிட்ட தொகை யை நீங்கள் தொடர்ந்து சேமிப்பவராக இருந்தால் அதையே நிலையான வருமானமாக காட்ட முடியும்.

6. ஃபாரின் வங்கி, தனியார் வங் கி, தேசிய வங்கின்னு இப்படி ஏகப் பட்ட வங்கிகள்… என்னங்க தலை சுத்துதா..? தடுமாறாம யோ சிங்க. எந்த பேங்குல வட் டி விகிதம் குறைவு? தவணை முறை சுலபமாக இருக்கிற தா…? இதையெல்லாம் கொஞ்ச ம் நிதான மாத்தான் அலசணும்.

7. சில குறிப்பிட்ட வங்கிகள்ல 10 வருடங்களுக்கு தாராளமாக கா லக் கெடு கொடுப்பாங்க. ஆனா, திடீர்ன்னு அதை 8 வருஷமா குறைச்சு நீங்கள் வாங்கின வீட்டுக் கடன் தொகையை உடனே திருப்பிச் செலுத்துவது நல் லது என்ற பகீர் அறிவிப்பு உங் கள் வீடு தேடி வரலாம். உஷா ரா கலந்தாலோசியுங்க.

8. ஒவ்வொரு பேங்குலயும் இவ்வளவு நாளைக்குள் பணம் கட்டலாம்ன்னு ஒரு லிமிட் இருக்கு. ஐந்து வருடங் களில் ஆரம்பித்து, பதினை ந்து, இருபது வருடங்கள் வரை காலக்கெடுவை நீட்டிப்பார்கள். இதுவும் கூட உங்கள் சாய் ஸ்தான்.

9. காலி நிலத்துல வீடு கட்டப் போறீங்களா…? அது உங்களோட சொந்த நிலம்தான் என்பதற்குரிய அத்தனை அத்தாட்சிகளும் வேண்டும். கார்ப்பரேஷன் அ னுமதி, கிராமமாக இருந்தால் சம்பந்தப்பட்ட அதிகாரியின் முறையான சான்றுன்னு இ தையெல்லாம் வாங்கி வைச் சுக்கோங்க. நீங்க வீடு கட்ட ப்போகிற இடமானது விளை ச்சல் நிலமாகவோ அல்லது அரசுக்குச் சொந்தமா னதாக வோ இருக்கக் கூடாதில்லை யா..? அதனால, நிலத்திற்கு ரிய பத்திரங்கள். வில்லங்கச் சான்றிதழ்கள் கட்டாயம் கவ னிக்கப்படும்.

10. உடனே கடன் கிடைச்சுடுமா….? அதான் நடக்காது. வங்கியின் சார்பில் ஒரு வழக்கறிஞர் வ ருவார். எல்லா சான்றிதழ் சமாச்சாரங்களையும் அலசி விட்டு வில்லங்கம் ஏதுமில் லை என்று அவர் விளக்கம் கொடுத்தால்தான் மேற்படி வேலைகள் நடக்கவே ஆரம் பிக்கும்.

11. தொகையை நீங்களே நிர் ணயித்தால் போதுமா..? போ தாது. வங்கியின் சார்பில் ஒரு இன்ஜினீயரை அனுப்புவார்கள். அவர் வந்து பார்வையிட்டு இடத்தின் அளவு, மதிப்பு விவகா ரங்களை ரிப்போர்ட் செய்யும் பட்சத்தில் உங்களின் கடன் தொ கையை, சம்பந்தப்பட்ட வங்கி பரிசிலிக்கும்.

12. ஏற்கெனவே கட்டப்பட்ட வீடு அல்லது அடுக்குமாடி குடியி ருப்பில் ஏதேனும் ஒரு ஃப்ளாட்டை வாங்குவதா னாலும் இதே விதிமுறை கள்தான். ஃப்ளாட்டின் சதுர அடி, அது அமைந்தி ருக் கும் இடம். தற்போதைய விலை மதிப்பு, முறை யான அனுமதி என அத்த னையும் பரிசோதிக்கப் படும்.

14. மதிப்பீடுகளெல்லாம் முடிந்து, இவ்வளவு தொகையை இவரு க்கு கடனாக அளிக்கலாம் என ஒரு முடிவுக்கு வந்துவிட்டாலும் முழுத்தொகையையும் வங்கிகள் கொடுப்பதில்லை. மொத்த மதிப்பில் 80 சதவீதத் தொ கை மட்டுமே உங்களின்கை க்கு வந்து சேரும், ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்.

15. எனக்குன்னு சொந்தமா நிலமும் இல்லை… வீடும் கிடையாது வாடகை வீட்டு லதான் வாழ்ந்திட்டிருக்கேன் … அடடா எதுக்குங்க இந்தப் புலம்பல்..? உங்களுக்கும் வங் கிக்கடன் பெற வழி இருக்கே. முறையான, அரசு அனுமதிபெற்ற காலி நிலத்தை விலைக்கு வாங்க தாராளமாக கடன் தரப்படுகிறது. அப்படியே அதில் ஒரு வீடும் கட்டிக்கொள் ளலாம்.

நம்முடைய மாத வரும்படி என்ன…? குடும்பச் செலவு, ஏற்கெ னவே வாங்கிக் குவித்திருக்கும் கடன், வேறுவகையில் பணம் கட்ட வழி இருக்கிறதா…? நம்மைத் தவிர நம் உறவில் மகன் களோ, மனைவியோ நல்ல ஊதியத்தில் வேலை பார்க் கின்றனரா…? இந்தக் கேள்விகளையெல்லாம் உங்களுக்குள் நீங்க ளே பலமுறை கேட்டுக் கொள்ளுங்கள். பதில்கள் சரியாக வரு கிறதா…? இப்போது சுமக்க ஆரம்பியுங்கள்… உங்களின் கடன் சுமை யை….

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


Leave a Reply