Sunday, August 1அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஆண்மை என்பது என்ன?

பரந்து விரிந்த தோள்கள், வலுவான புஜங்கள், தடித்த அடர்த் தியான மீசை. உறுதியான உடல். இவ்வாறு பலவற்றைச் சொல் லிக் கொண்டு போகலாம்.
ஆனால் இவை எல்லாவற் றையும் விட உறவின் போது துணையைத் திருப்பதிப்படு த்துவது ஒன்றேதான் ஆண் மை என ஒவ்வொரு ஆணும் எண்ணுகிறான்.
முடியாதபோது இவன் ஆண் மையற்றவன் எனத் துணை யும் தூற்று கிறாள்.   
ஆனால் ஒரு ஆணின் ஆண்மைத் தன்மைக்கு அத்தாட்சியாக இருப்பது அவனது விந்திலுள்ள (Sperm Count) விந்தணுக்களின் எண்ணிக்கையும் ((Seminal fluid) அதன் தரமும்தான்.

விந்திலுள்ள கோடிக்கான விந்தணுக்களில் ஒன்று மட்டுமே ஏனையவை களுட ன் நீச்சல் போட்டியிட்டு மு ந்திச் சென்று பெண்ணின் சூல கத்திலிருந்து வெளி வரும் முட்டையுடன் இணை ந்து கருவை உண்டாக்கும்.
விந்தணுக்கள் தரமானதாக வும் அதிக எண்ணிக்கையிலு ம் இருந்தால்தான் அவனால் தகப்பன் ஆகக் கூடிய வாய்ப்பு இரு க்கிறது. மலடன் ஆகாது தப்பி ஆண்மையுள்ளவன் என நிரூபிக்க முடியும்.
‘மலடி மலடி என வையகத்தார் ஏசாமல்..’ என்றொரு திரைப் பாடல் முன்பு பிரபலமாக இருந்தது.
ஆனால் இன்றைய நிலையில் ‘மலடன் மலடன் என வைய கத்தார் ஏசாமல்..’ என தங் களது ஆரோக்கியத்தை யும் ஆண்மையையும் காத்துக் கொள்ள வேண்டிய நிலையி ல் ஆண்கள் இருக்கிறார் கள். 
விந்தணுக்களின் வீழ்ச்சி
ஆரோக்கியமான ஆணின் விந்தணுக்களின் எண்ணிக்கையானது ஒரு மில்லிலீட்டர் விந்தில் 40 மில் லியன் இருக்க வேண்டும். பொது வாக ஆண் உறவின்போது வெளிப் படுத்தும் விந்து 2-6 மில்லிலீட்டர் அளவாக இருக்கும். 1940 களில் இந்த எண்ணிக்கை 100 மில்லியனுக்கு மேல் இருந்தது. ஆயினும் இன்று சராசரியாக 60 மில்லியனாகக் குறை ந்து விட்டது. 
ஆனால் மிகவும் கவலைப்பட வே ண்டிய விசயம் என்னவெனில் இன் றைய இளம் வயது ஆண்களின் விந் தணுக்களின் எண்ணிக்கை மேலும் மேலும் குறைந்து வருவதுதான்.
இன்றுள்ள வாலிபர்களில் 15 முதல் 20 சதவிகி தமா னவர்களின்  விந்த ணுக் களின் எண்ணிக்கை 20 மில்லியனுக்கு குறைவா க இருப்பது நல்ல செய்தி யல்ல.
அத்துடன் அவர்கள் உற்ப த்தி செய்யும் விந்தணுக்களில் தரமும் தாழ்ந்துவிட்டது.
5 முதல் 15 சதவிகிதமானவை மட்டுமே சாதாரண (Normal) நிலையில் இருக்க மிகுதியாவும் அசாதாரண (Abnormal) விந்தணுக்களாக இருக்கின்றன. இது இனவிருத்திக்குப் போதாது.
ஏனைய பாலூட்டிகள்
னைய பாலூட்டி மிருங்கங்களுடன் ஒப்பிடும்போது இயற்கை யாகவே மனிதனின் விந்தணு எண்ணிக்கை குறைவாகவே இருக்கிறது.
உதாரணமாக எருதுகளின் விந்தணு க்களின் எண்ணிக்கை மில்லியன்க ளாக அன்றி பில்லியன் கணக்கில் இருக்கின்றன.
அத்துடன் மனிதரில் சாதாரண விந்தணு எண்ணிக்கை 5 முதல் 15 சதவிகிதமாக இருக்க எருதுகளிலோ அது 90 சதவிகிதத்திற்கு மேல் இருக்கிறது.
மலட்டுத்தன்மையை நோக்கி
இத்தகைய காரணங்களால் மனிதர்க ளில் இனவிருத்தி குறைந்து கொண்டு போகிறது. ஏழு தம்பதிகளில் ஒரு தம்பதி யினருக்கு குழந்தைப் பேறு கிட்டாது போய்விடுகிறது.
இதில் பெரும்பாலான தம்பதியினரக்கு ஆண்களின் குறைபாடே காரணமாக இருக்கிறது. போதியதும் தரமானதுமான விந்தணு க்குள் இல் லாமைக்கு பல காரணங்கள் சொல்லலாம். 
  • விதைப்பையிலுள்ள நாளங்கள் புடைத்திருப்பது (Varococele) முக்கிய காரணமாகும். இது கால்களில் ஏற்படும் நாளப்புடைப்பு (Varicose Veins) நோயை ஒத்தது.
  • பாலியல் தொகுதியில் உள்ள பிறவிக் குறைபாடுகள்,
  • பாலியல் நோய்த் தொற்றுகள். குpளாமிடியா, கொனரியா, சிபிலிஸ் போன்றவற் றால் விந்தணு பயணம் பண்ணும் குழாயில் தடிப் புகள் ஏற்பட்டு பாதை தடைப்படலாம்.
  • கூகைக்கட்டு (பொன் னுக்கு வீங்கி), புரஸ்ரேட் சுரப்பியில் கிருமித் தொ ற்று, சலக்குழாயில் தொ ற்று போன்றவையும் கார ணமாகலாம்.
  • ஆண்மைக் குறைபாடு மற்றொரு காரணமாகும். ஆண் ஹோர்மோன் ஆன டெஸ்டஸ்டரோன் குறைபாடு (testosterone Deficiency) முக்கியமானது.
  • வாழ்க்கை முறைகள் காரணமாகின்றன. உதாரணமாக மனஅழுத்தம், போசணைக் குறைபாடு, அதீத எடை, மதுவும் ஏனைய போதைப் பொருட்களும் ஆண் மலட்டுத் தன்மைக்கு இட்டுச் செல்கின்றன.
விந்தணுக்களின் எண்ணிக்கையும் தரமும் குறையக் காரணங்கள்
  1. இறுக்கமான உள்ளாடைக ளை தொடர்ந்து அணிதல், நீ ண்ட நேரம் தொடைகளை நெருக்கியபடி உற்கார்ந்தி ருத்தல் போன்ற வற்றால் விதைப்பையின் வெப்பம் அதிகமாகி விந்த ணுக்களின் எண்ணிக்கையும் தரமும் குறைகிறது. விதைகள் விதைப்பையுக்குள் இறங் காமை.
  2. தினமும் 4 மணித்தியால யங்களுக்கு மேல் செல்போனில் பேசுபவர்களின் விந்தணு க்களின் எண்ணிக்கையும் தரமும் குறைவதாகவும் சில ஆய்வுகள் தெரிவிக்கின்நன.
  3. வேலை நெருக்கடி, மன உளைச்சல் போன்ற பல்வேறு காரணங்களால் வாரத்திற்கு 2 -3 தடவைகளாவது உடலறவு வைக்க முடியாது போவது கூட குழந்தையின்மைக்கு ஒரு காரணம்தான்.
இவை எல்லாவற்றிக்கும் மே லாக மற்றொரு காரணம் இப்பொழுது முன் வைக்கப் படுகிறது.
மனிதனின் தவறான வாழ்க்கை முறை என்பதற்கு மேலாக
  • அவனது தாயின் அல் லது  பெற்றோரின் தவ றான வாழ்க்கை முறை தான் காரணமாகலாம் என்கிறார்கள் சில வல்லுணர்கள்.
கருவில் வளரும்போதே மலடாவதற்கான விதை விதைக்கப் படுகிறது என்பதுதான். 
விந்தணு உற்பத்தி
விந்தணுக்ளின் உற்பத்தி Spermato genesis பதின்ம வயதில்தான் ஆரம்பி க்கிறது. ஆனால் அதற்கான அத்தி வாரம் அவன் கருவில் இருக்கும் போதே ஆரம்பித்துவிடுகிறது.
அதாவது விதைகளின் விருத்தியா னது கருவாக இருக்கும்போதே ஆரம் பித்து 6 மாதக்குழந்தையாக இருக் கும் போதே முற்றுப் பெறு கிறது.
எனவே இந்தக் காலகட்டத்தில் அதன் விருத்திக்கு ஏதாவது இடையூறு நேர்ந்தால் பின்பு வாழ்நாள் முழு வதும்  அவனது குழந்தை பெறும் ஆற்றல் பாதிப்படையும்.
புகைத்தல்
விந்தணுக்கள் குறைவதற்கு வேறு காரணங்களும் உண்டா? புகைத்தல் ஒரு முக்கிய காரணமாகும். அண் மைய ஆய்வுகளில் புகைப்பவர்களது விந்தணு எண்ணிக்கை 15 சதவிகித த்தால் குறைவடையும் எனக்கண் டறியப்பட்டுள்ளது.
அடையும். ஆயினும் அவனது தாயா னவள் கருவுற்றிருக்கம் நேரத்தில் புகைத்திருந்தால் அது 40 சதவிகிதம் குறையும்.
இது முக்கிய கண்டுபிடிப்பு. ஆயினும் விந்தணு குறைந்த எல் லோரது தாய்மார்களும் புகைத்திருப்பார்கள் என்று சொல்ல முடியாது. தந்தை புகைப்பதால் அதன் பாதிப்பு தாயின் ஊடாக கருவிற்கும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்குமா என்பது பற்றி அந்த ஆய்வு எதுவும் கூறவில்லை. ஆயினும் அதற்கான சாத்தி யத்தைக் குறைத்து மதிப் பிட முடியாது.
வேறு காரணங்கள் இருக்க லாமா?
  • உணவு முறை மாற் றங்கள், 
  • உடல் உழைப்பற்ற வாழ்க் கை முறை,
  • இயற்கையோடு இசையாத வாழ்வு,
  • சூழல் மாசடைதல்,
  • காலநிலை மாற்றங்கள்
என எத்தனையோ விரும்பத்தகாத பல மாற்றங்கள் இன்று மனித குலத்தில் ஏற்பட்டிருக்கின்றன. இவற்றின் தாக்கங்கள் யாவை? இவை போன்றவற்றாலும் ஆண்மைக் குறைபாடு ஏற்பட்டி ருக்கலாமா என்பதை யிட்டும் ஆய்வுகள் அவசியம். 
பெண்களில்…
அதே நேரம் பல பெண்களும் மாதவிடாய்க் கோளாறுகளாலும் அதன் பலனாக கருத்த ங்கலில் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். அதீத எடை, இன்சுயிலின் செயற்பாடு பாதிப்பு, சூலக நோய்கள் போன்றவை இவற்றிக்கு காலாக உள்ளன. இவற்றில் பலவும் தவ றான வாழ்க்கை முறைகளின் பயனே.
எது எப்படி இருந்த போதும் மனித குலம் தொடர்ந்து வாழ இனப் பெருக்கம் அவசியம். அதற்கு ஆண்மைக் குறைபாடு அல்லது பெண்களின் நோய்கள் காரணமாக வந்துவிடக் கூடாது. 
ஆரோக்கியமான வாழ்க்கை முறைகளை கடைப்பிடிப்பதே அதற்கு வழிபோலத் தெரிகிறது.

குறிப்பு:

ஆனால் இக்குறையை தற்போதைய நவீன மருத்துத்தின் மூலம் சரிசெய்து குழந்தை பேறு பெறலாம், இக்குறையை சரிசெய்ய அதாவது சரியான சிகிச்சைக்கு சிறந்த பாலியல் மருத்துவர்கள் யாரென்று அடையாளம் கண்டு அவர்களிடம் தொடர்ந்து 3 முதல் 6 மாதகாலம் சிகிச்சை பெற்றால் இக்குறையை முற்றி லும் குணப்படுத்தலாம்.
உதாரணமாக பாலியல் மருத்துவர் திரு. காமராஜ் சென்னை கோயம்பேட்டிலும், மருத்துவர் நாராயண ரெட்டி அப்பல்லோ மருத்துவமனையிலும் உள்ளனர். இவர்களை போன்ற இன்னும் சிறந்த மருத்துவர்களை அணிகி பயன்பெறலாம்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: