நடிகர் விஜய் – ஹன்சிகா மோத்வானி, ஜெனிலியா நடித்து வரும் புதிய படம் வேலாயுதம். விஜய் யின் முந்தைய படமான காவ லன் படத்திற்கு அப்போதைய ஆளும் கட்சி, தொந்தரவுகளை கொடுத்தது. படத்தை திரையிட விடாமல் தடுத்ததில் தொடங்கி, கட்-அவுட் கட்ட விடாமல் தடுத் தது வரை சிக்கல்களை சந்தித்த காவலன், எதிர்பார்த்ததை விட வெற்றி யும் பெற்றது. அதனைத் தொடர்ந்து வேலாயுதம் பட
சூட்டிங்கில் விஜய் பங்கேற்று வந்த நிலையில்தான் தமிழகத்தில் சட்ட சபை தேர்தல் நடந் தது. தேர்தலில் அதிமுகவுக்கு விஜய் ரசிகர் மன்றம் பகிரங்க ஆதரவு தெரி வித்தது. விஜய்யின் தந்தை டைரக் டர் எஸ்.ஏ.சந்திரசேகர், அராஜக திமுக ஆட்சியை முடி வுக்கு கொண் டு வர விஜய் ரசிகர்கள் தேர்தல் பணி யாற்ற வேண்டும், என்று வேண்டுகோள் விடுத்தார்.
இந்நிலையில்தான் தேர்தல் முடிவு அதிமுகவுக்கு சாதகமாக வந்துள்ளது. முன்னணி நிலவரம் வெளியாக ஆரம் பித்ததில் இருந்தே ஜெயா டிவியில் விஜய்யின் வேலாயுதம் படத்தின் டிரைலர்கள் வெளியிடப்பட்டன. இறுதிகட்ட படப் பிடிப்பில் வேலாயுதம் என்ற விள ம்பர வரிகளுடன் வெளியான அந்த விளம்பரம் ரசிகர்களை கவ ரும் வகையில் இருந்தது. வேலா யுதம் படத்தினை வாங்க பலரும் முயற்சி செய்து வந்த நிலையில் அந்த படம் ஜெயா டிவிக்கு கைமாறியிருப்பதா கவும் தகவல்கள் வெளியாகியுள் ளன.
இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.
தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்