தேர்தல் வெற்றிக்குப் பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்துப் பேசிய ஜெயலலிதா : தேர்தல் வெற்றிக்காக தமிழக மக்களுக்கு முதலில் தமது நன்றியை உரித்தாக்குவதாக தெரிவித்தார். இந்த தேர்தல் வெற்றி ஜன நாயகத்துக்கு கிடைத்த வெற்றி என்றார். தேர் தலில் பண பலம் தோற்கடிக் கப் பட்டுள்ளது.
தி.மு.க., ஆட்சியின் மீது வெறுப்பு : தி.மு.க., ஆட்சியின் மீது மக்கள் கடும் அதிருப்தியில் இருந்தனர். மக்கள் தேர்தலுக்காக காத்திருந் தனர். வாய்ப்பு கிடைத்ததும் தி.மு. க., ஆட்சியை தூக்கி எறிந்து தங்க ளது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
பொருளாதாரம் சீரமைக்கப்படும்: தமிழகத்தின் பொருளாதார நிலையை அ.தி.மு.க., ஆட்சிப் பொறுப்பு ஏற்ற பிறகு சீரமைக் கும். தமிழக த்தில் அ.தி.மு.க., ஆட்சியின் போது பொருளாதார நிலை சீர் தூக்கியே இருந்திருக்கிறது.
தேர்தல் கமிஷனுக்கு பாராட்டு: தமிழக சட்டசபை தேர்தலை நேர்மை யாகவும், நியாயமாகவும் நடத்திய தேர்தல் கமிஷனுக்கு மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்வதாக கூறி னார்.
வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும்: தேர்தல் வாக்குறுதிகள் அனை த்தும் 18 மாதங்களில் நிறைவேற்றப்படும் என்றார். அ.தி. மு.க., தேர்தல் வாக்குறுதிகள் நலத்திட்டங்கள் மற்றும் நல்லா ட்சிக்கு வித்தி டும் வாக்குறுதிகளை கொண்ட ஒரு முழுமையான தேர்தல் அறிக்கையாக இருந்தது என்பதை இந்த தருணத்தில் நினைவு கூறுகிறேன். அனைத்து வாக்குறுதிகளும் 1.5 ஆண்டு களில் நிறைவேற்றப்படும். தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு நிலை நிறு த்தப்படும்.
இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.
தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்