காங்கிரஸ் தலைமையகமான சத்தியமூர்த்தி பவனில் தங்கபாலு ஆதரவாளர்களுக்கும், இளங்கோவ ன் ஆதரவாளர்களுக்கும் இடையே இன்று பயங்கர மோதல் நடந்தது. அதில் பலருக்கு ரத்தக் காயம் ஏற் பட்டது. வேட்டிகள் கிழிந்தன. சட்ட சபை தேர்தலில் காங்கிரஸ் படு தோல்வி அடைந்ததால் தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியில் இரு ந்து தங்கபாலு ராஜினாமா செய்தார். இது குறித்துக் கேள்விப்பட் டதும் இளங்கோவன் உள்ளிட்ட பிற கோஷ் டித் தலைவர்களின் ஆதரவா ளர்கள் சத்தியமூர்த்தி பவனுக்கு வந்து இனி ப்பு வழங்கி கொண்டாடினர். பட்டாசுகளும் வெடித் தனர்.
இந்த கொண்டாட்டங்களில் பங்கேற்க இளங்கோவன் ஆதரவாளர் களான முன்னாள் கவுன்சிலர் மணிப்பால், கோபி, பூக்கடை வேலு ஆகியோர் சத்தியமூர்த்தி பவனுக்கு வந்தனர். ஆனால், அவர் களை உள்ளே விடாமல் தங்கபாலு ஆதரவாளர்களான சந்திரன் உள்ளிட்டோர் தடுத்தனர். இதனால் அவர்களிடையே வாக்கு வாதம் ஏற்பட்டு அடி தடியாக மாறியது. இளங்கோவன் ஆதர வாளர்கள் சந்திரனை அடித்து உதைத்தனர். இதையடுத்து தங்க பாலு ஆதரவாளர்கள் பதிலுக்கு திருப்பித் தாக்கினர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே பயங்கர அடிதடி ஏற்பட்டது. ஒருவரையொருவர் அடித்து கீழே தள்ளி மிதித்துக் கொண்டனர்.
சிலர் தப்பி சத்தியமூர்த்தி பவனுக்குள் ஓட, அவர்களை உள்ளே யும் விரட்டிச் சென்று தாக்கினர். இதில் கட்சி அலுவலகத்தில் இருந்த நாற்காலி, மேஜைகளும் உடைக் கப்பட்டன. இதையடு த்து பிற நிர்வாகிகள் தலையி ட்டு அவர்களை சமாதானப்ப டுத்தினார். இதைத் தொடர் ந்து இளங்கோவன் ஆதரவா ளர்கள் அங்கிருந்து புறப்பட் டுச் சென்றனர்.
இந்த சண்டை நடந்தபோது தங்கபாலு சத்திமூர்த்தி பவனுக்குள் தான் இருந்தார். அவர் வெளியே வரவில்லை.
தங்கபாலு ராஜினாமா செய்ததை கேள்விபட்டதும் அவரது எதிர் கோஷ்டியை சேர்ந்த காங்கிரசார் சத்திய மூர்த்தி பவனுக்கு வந்து இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்தனர்.
இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.
தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்