Sunday, May 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

தனிநபர் கடன் வேண்டுமா!

பர்சனல் லோனின் மிகப் பெரிய சிறப்பே, எதற்காக அதை வாங் குகி றோம் என்கிற காரணம்கூடச் சொல்ல வேண் டாம். பொதுவாக, கார் அல்லது வீடு வாங்க சில லட்ச ரூபாய் குறையும் போது மீதிப் பணத்துக்காக கடன் கேட்டு வங்கியை அணுகினால் கார் அல்லது வீட்டை அடமா னமாகக் காட்ட வேண்டி வரும்.

கடனைச் சரியாக கட்டவில்லை என்றால் அடமானம் வைக்கப் பட்டிருப்பதை வங்கி தன் வசம் எடுத்துக் கொள்ளும். இதைத் தவிர்க்க விரும்புபவர்கள் பர்சனல் லோ னைப் பயன்படுத்திக் கொள்ள விரும்பு கிறார் கள். காரணம் சொல்லத் தேவையில்லை என்ப தால் எடுத்த தெற்கெல்லாம் பர்சனல் லோன் வாங்குவது சரியல்ல. காரணம் மற்ற கடனைவிட இதற்கு வட்டி மிக அதிகம். என வே பர்சனல் லோன் வாங்குவதை கடைசி முயற்சியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

வங்கிகள் தயார்!

வங்கிகள் தற்போது தாராளமாக பர்சனல் லோன் தரக் காத்திருக்கின்றன. பொது வாக, இந்தக் கடனுக்கு 14-22% வட்டி வசூலிக்கப்ப டுகிறது. இந்தியன் வங்கி, யுனைடெட் பேங்க் ஆஃப் இந்தியா, தமிழ்நாடு மெர்க் கன்டைல் வங்கி போன்ற வை

1 லட்சம் வரைக்கும்தான் பர்சனல் லோன் தருகின்றன. ஐ.சி.ஐ.சி.ஐ. பேங்க், ஆக்ஸிஸ் பேங்க், எஸ்.பி.ஐ. போன்றவை 10 லட்சம் வரைதான் கடன் தரும். அதற்கு மேல் தேவைப்பட்டால் சிட்டி பேங்க், ஹெச்.டி.எஃப்.சி., ஆர்.பி.எஸ். போன்றவற்றைத் தொடர்பு கொள்ளலாம்.

பர்சனல் லோன் வாங்கக் குறைவான ஆவணங்கள் கொடுத்தால் போதும். இருப்பிடம், அடையாளம், வருமானம் போன்றவற் று க்கு ஆதாரம் கொடுக்க வேண் டும். மூன்று நாட்களில் கடன் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. 12-48 மாத ங்களில் கடனைத் திரும்பக் கட்ட லாம்.

பேரம் பேசலாம்!

உங்களின் சம்பளம் மற்றும் திரும் பக் கட்டும் தகுதி அதிகமாக இரு க்கும் பட்சத்தில் வட்டியில் பேரம் பேசிக் குறைக்கலாம். பரிசீலனை க் கட்டணத்திலும் பேரம் பேசலாம். பர்சனல் கடன் வாங்கும் வங்கியிலேயே உங்கள் சம்பளக் கணக்கோ, கிரெடிட் கார்டோ இருந்தால் இந்தப் பேரம் நிச்சயம் கை கொடுக்கும். வட்டியைப் பொறுத்த வரையில் கடன் தொகை, திரும்பச் செலுத் தும் ஆண்டுகள், வேலை யின் தன்மை, சம்பளத் தொ கை, சம்பளம் வாங்குபவரா /தொ ழில் செய்பவரா, வாங்கு ம் நபரின் கடன் வரலாறு போன் றவற்றைப் பொறுத்து மாறுப டும். வங்கி கொடுக்கும் சலு கை அல்லது வாக்கு றுதியை எழுத்து மூலம் பெற் றுக் கொள்வது அவசியம். 2 நபர்கள் கேரண்டி கையெழுத்துப் போட வேண்டி இருக்கும்.

வட்டியைக் கவனிங்க!

ர்சனல் லோனில் வட்டி எந்த முறையில் கணக்கி டப்படுகிறது என்பது மிக மிக முக்கியம். ஃபிளாட் வட்டியா? (Flat Rate) அல் லது குறையும் வட்டியா? என்பதைக் கவனிக்க வேண் டும். ஃபிளாட் முறையில் மொத்தக் கடனுக்கும் மொ த்த ஆண்டுக்கும் வட்டி கண க்கிடப்படும். உதாரணத்துக்கு ஒருவர் 15% வட்டியில் 1 லட்சம் கடன் வாங்கி அதனை மூன்றாண்டுகளில் திரும்பச் செலுத் துவதாக வைத்துக் கொள்வோம். ஃபிளாட் வட்டி என்றால் மாதத் தவணை 4,028-ஆக இருக்கும். அந்த வகையில் மூன்றாண்டு களில் வட்டி மட்டும் 45,000 கட்டி இருப்பீர்கள். இதுவே குறையும் வட்டி முறை என்றால் கடன் தொகை குறையக் குறைய அசலில் அந்தத் தொகையைக் கழித்துக் கொண்டு மீதிக்கு மட்டும் வட்டி யைக் கணக்கிடுவார்கள். மாதத் தவணை 3,476 -ஆக இருக்கும். இம்முறையில் மொத்த வட்டி 24,795. அதாவது, குறையும் வட்டி முறையில், ஃபிளாட் வட்டியைவிட 20,205 குறைவாகக் கட்டி னால் போதுமானது.

முன்கூட்டி அடைக்கலாமா?

பர்சனல் கடனை முன்கூட்டியே அடைக்க பெரும்பாலான வங்கி கள் அவ்வளவு எளிதில் ஒப்புக் கொள்வதில்லை. இடையில் கடனை அடைப்பதாக இருந்தால் அபராதம் கட்ட வேண்டி வரும். இது பாக்கியுள்ள கடன் தொகையில் சுமார் 5% ஆக இருக்கும். சில வங்கிகள் மீதமுள்ள தொகையில் 25% வரை ஓராண்டில் அபராதம் இல்லாமல் கட்ட அனுமதிக்கின்றன. சில வங்கிகள் 6-12 மாதங்களுக்குப் பிறகே கடனை முன் கூட்டியே மொ த்தமாக அடைக்க ஒப்புக் கொள்ளும். இந்த விவரம் லோன் அக்ரிமென்டில் இருக்கும்.

நேரம் இருக்கும் பட்சத்தில் ஒன்று க்கு மூன்று வங்கிகளில் வட்டி விகி தம், வட்டி கணக்கிடும் முறை, பரி சீலனைக் கட்டணம், முன் கூட்டியே கட்டுவதற்கான அபராதம் போன்றவற்றை விசாரித்து முடிவு செய்வது நல்லது.

‘கிளீன் லோன்’

சில வங்கிகள் தனி நபர் கடனை ‘கிளீன் லோன்’ என்ற பெயரில் வழங்கி வருகின்றன. அரசு மற்றும் பொதுத் துறை பணி யாளர்கள், முன்னணி தனி யார் நிறுவனங்களின் நிரந்த ரப் பணியாளர்கள் மட்டும் இக்கடனைப் பெற முடியும். கடன் தொகை, 10 மாதச் சம்பளமாக இருந்தால், 60 மாதங்களிலும், 5 மாத சம் பளமாக இருந்தால் 36 மாத ங்களிலும் கடனைத் திரும்பக் கட்டலாம். இதற்கு மூன்றாம் நபர் கேரண்டி இருவர் கொடுக்க வேண்டும். மேலும், கடன் தொகை யை சம்பளத்தில் பிடித்துக் கொள்ள தொழில் நிறுவனத்தின் அனுமதி அளிக்கும் கடிதமும் கொடுக்க வேண்டும்.

கிரெடிட் கார்டு கடன்..!

சிலர் கிரெடிட் கார்டு மூலம் வீட்டு உபயோகப் பொருட்கள், பைக், சிறிய கார் போன்றவற்றை வாங்குகிறார் கள். கிரெடிட் கார்டை பொறுத் தவரை எடுக்கப்பட்ட பணத்துக்கு உடனடியாக வட்டி போடத் தொடங்கிவிடுகிறார் கள். இந்த வட்டி ஒரு ஆண்டுக்கு 40-45% இருக்கும். அந்தக் கடனை உங்களால் கட்ட முடியாத பட்சத்தில் அதனை இ.எம்.ஐ. கடனாக மாற்றிக் கொண்டால், வட்டி 25-30% ஆகக் குறையும்!

இன்றைக்கு டூ வீலர் என்பது நடுத்தர குடும்பத்தின் அடையாள மாக மாறிவிட்டது. வாகனக் கடன் என்பது ‘செக்யூர்டு கடன்’ (Secured Loan) வகையைச் சார்ந்தது. ஒருவர் வாங்கும் கடனுக்கு அவரின் வாகனமே ஜாமீன் அல்லது செக்யூரிட்டியாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. கடனை முழு க்க திருப்பிச் செலுத்தும் வ ரை, வங்கி அல்லது நிதி நிறுவனத் துக்கு கார் மீதான முழு உரிமை யும் இருக்கிறது.

பொதுவாக 5,000 முதல் ஒரு லட்சம் வரை டூ வீலர் கடன் கிடை க்கும். வண்டியின் மதிப்பில் 15-20% கையிலிருந்து போட வே ண்டி வரும். இந்தக் கடனை மாதச் சம்பளக்காரர்கள், சுய தொழில் செய்பவர்கள், வியாபாரிகள், விவ சாயிகள் யார் வேண்டுமானாலும் வாங்க முடியும்.

கடனை 60 மாதங்களில் திரும்பக் கட்டலாம். கடன் தொகை 50 ஆயிரத்துக்கு மேலே செல்லும் போது மூன்றாம் நபர் கேரண்டி அல்லது என்.எஸ்.சி., சொத்து போன்றவற்றை அடமானமாகக் கொடுக்க வேண்டும். கார் கடன் வாங்குபவர் மாதச் சம்பளக்காரர் எனில், அவ ரின் மாதச் சம்பளத்தைப் போல் 24-36 மடங்கும், சுயதொழில் செய்பவர் என் றால், ஆண்டு வருமானத் தைப் போல் சுமார் 6 மடங் கும் கடனாகக் கிடைக்கும். கார் வாங்குபவரின் சம்ப ளம் போதாத பட்சத்தில், மனைவி அல்லது உறவினர் வரு மானம் ஈட்டுபவராக இருந்தால், அவரின் சம்பளத்தையும் சேர் த்துக் கொள்ளலாம்.

புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையின் நகல், வீட்டு முகவரி மற்றும் அலுவலக முகவரி, வருமானம் போன்ற வற்று க்கான ஆதாரம், சம்பள ரசீது, ஃபார்ம் 16, ஆறு மாதத்துக்கான வங்கிக் கணக்கு விவரம், கையெழுத்துக் கான ஆதாரம் போன்ற ஆவண ங்களை மாதச் சம்பளம் பெறுப வர்கள் கொடுக்க வேண் டும்.

சுய தொழில் செய்பவராக இருந் தால், வருமானத்துக்கு ஆதார மாகக் கடந்த இரு ஆண்டுகளு க்கான வங்கிக் கணக்கு விவரத் தைக் கொடுக்க வேண்டும். கடனுக் கான வட்டி வங்கி களைப் பொறுத்து 9.5-15% ஆக இருக்கக்கூடும்.

கட்டணங்கள்

கார் கடன் வாங்கும்போது சில கட்டணங்களைச் செலுத்த வே ண்டி வரும். பரிசீலனைக் கட்டணம் 1-3% இருக்கும். இது தவிர, முத்திரைக் கட்டணம், நிர்வாகக் கட்டணம் என சில ஆயிரம் ரூபாய் செலவு இருக் கிறது. ஆவணக் கட்டணம் ( 300-600) வேறு தனியாக இருக் கிறது.

பயன்படுத்தப்பட்ட பழைய கார்களை வாங்கவும் கடன் கிடை க்கிறது. அதன் மதிப்பில் 60-70% கடன் கிடைக்கும். 5-7 ஆண்டு களுக்கு உட்பட்ட கார்களுக்குத்தான் கடன் கிடைக்கும். பழைய கார் கடனுக்கான வட்டி, புது காருக்கான கடனைவிட 2-3% அதிக மாக இருக்கும்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

2 Comments

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: