Thursday, September 29அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஆளுங்கட்சிக்கு எதிரான அலையா?

தி.மு.க., தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்பட்டிருந்தும், மக்களிடையே காணப்பட்ட, ஆளுங்கட்சிக்கு எதிரான அலை யால், அ.தி.மு.க., தனிப்பெரும்பான் மையுடன் ஆட்சி அமைக்கும் வகை யில், மகத்தான வெற்றி பெற்றுள் ளது. ஸ்பெக்ட்ரம் ஊழல், மின் தடை, விலைவாசி உயர்வு, குடும்ப ஆதிக் கம், கட்டப் பஞ்சா யத்து ஆகிய வை, தி.மு.க., தோல்விக்கு வழி வகுத்து ள்ளது.

கடந்த ஆட்சியில் வழங்கப்பட்ட இல வச திட்டங்கள், கூட்டணி கட்சியின் பலம், திருமங்கலம் பார்முலா ஆகி யவை தங்களுக்கு வெற்றி வாய்ப் பை உறுதியாக பெற்றுத்தரும் என, தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சிகள் நம்பி வந்தன. அ.தி.மு.க., தலைமையிலான கூட்டணி யில், விஜயகாந்த்தின் தே.மு.தி.க.,- கம்யூனிஸ்ட் கட்சிகள், சமத்துவ மக்கள் கட்சி உள்ளிட்டவை கூட்டணி அமைந்தது. தேர்தலுக்கு முன்னும், பின்னும் வெளி யிடப்பட்ட கருத்துக் கணிப் புகளிலும், இரு கூட்டணிகளும் சம அளவுக்கு வெற்றி பெற வாய்ப்புள்ளதாகவே தெரிவிக் கப்பட்டன. ஆனால், கருத்துக் கணிப்புகளை தோற்கடித்து, அரசியல் பார்வை யாளர்களையும், பொதுமக்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தும் வகையில், அ.தி. மு.க., கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெற்று ள்ளது. தமிழகத்தின் அமைச்சர் கள் பலரும் தோல்வியை தழு வியுள்ளனர். காங்கிர ஸ் மற்றும் பா.ம.க., கட்சிக்கும் மிகப்பெரிய தோல்வியாக இத்தேர்தல் அமைந்துள்ளது.

இத்தேர்தலில் பல்வேறு பிரச்சனைகள் எதிரொலித்தன. ஸ்பெக் ட்ரம் விவகாரத்தில், 1.76 லட்சம் கோடி ரூபாய் ஊழல், அதன் விளைவாக, தி.மு.க., கொள்கைபரப்பு செயலாளர் ராஜா கைது செய்யப்பட்டது, தமிழக முதல்வர் கருணாநிதியின் குடும்பத் தினரிடம் இந்த ஊழல் தொடர்பாக விசா ரணை உள்ளிட்டவை, தி.மு.க.,வினரின், பி.பி.,யை எகிற வைத்தன. காங்கிரஸ் கட்சியுடன் போராடி பெற்ற கூட்டணி ஒப்பந்தமும், ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் மத்திய அரசு நடந்து கொண்ட விதமும், தி.மு.க., கட்சியின ருக்கும், காங்கிரஸ் கட்சியின ருக்கும் இடையே நீருபூத்த நெருப்பாக பகை வளர்ந்து வந்தது.

அதே போல் தமிழகத்தில், 2008 முதல் நடைமுறையில் உள்ள மின்வெட்டு பிரச்சனை, மக்களின் மனநிலையை மாற்றியமைக் க முக்கிய காரணமாக இருந்தது. “தி.மு.க., தோல்வியடைந்தால், அதற்கு மின் தடையே காரணம்’ என, முழங்கிய, மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராச் சாமி, இந்த தேர்தலில் போ ட்டியிட முன்வரவில்லை. உட ல்நிலை காரணமா அல் லது தோல்வியை முன்கூட் டியே கணித்தது காரணமா என்பது அவருக்கு மட்டுமே வெளிச்சம்.

தமிழகத்தின் கொங்கு மண்ட லமான கோவை, ஈரோடு, நீலகிரி, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங் களை பொறுத்தவரை ஜவுளித்தொழில் மிக பிரதானமாக இருந்து வருகிறது. மின் தடையால் இப்பகுதியில் தொழில் வளம் கடுமையாக பாதிக்கப்பட்டதால், இம்மாவட்டங் களில் ஓரிரு இடங்களை மட்டுமே, தி.மு.க., கூட்டணி பிடிக்க முடிந்தது. கொ ங்கு மண்டல பகுதிகளில் வெற்றி பெற, கொங்குநாடு முன்னேற்ற கழகம் கட்சியியை கூட்டணியில் வளைத்து போட்ட, தி.மு.க., வின் ராஜதந்திரம் என கூறியதும், பொய்த்து போனது.

மின் தடையுடன், விலை வாசி உயர்வும், அனைத்து தரப்பு மக்களிடையேயும், கடும் கொந்தளிப்பை ஏற்ப டுத்தியது. ஒரு ரூபாய்க்கு, ஒரு கிலோ அரிசி ரேஷ னில் வழங்கப்பட்டாலும், ஒரு கிலோ கத்திரிக்காய், 60 ரூபாய் என்பதை ஏழை எளிய, நடுத்தர மக்களால் ஜீரணிக்க முடியவில்லை என்பதையும் இத்தேர்தல் காட்டி யுள்ளது. இதுமட்டுமின்றி, ஒவ்வொரு மாவட்டத்திலும், அந்தந்த உள்ளூர் அமைச்சர்கள் குறுநில மன்னர்கள் போல நடந்து கொண்டது, பொதுமக்கள் நிலம் வாங்குவது, விற்பது என்பது உயிரை பணயம் வைக்கும் விவகாரமாக மாறியது. போலீசார் உதவியுடன் கட்டப் பஞ் சாயத் தில் ஈடுபடும் தி.மு. க.,வின ரால், ஏற்பட்ட பாதிப் பை, பொது மக்கள் வெளிப் படுத்த உதவி யதாகவே இத்தேர் தல் அமைந் துள்ளது.

தி.மு.க., ஆட்சி காலத்தில் வேறு எப்போதும் இல்லாத அள வு க்கு, கருணாநிதியின் குடும்ப உறுப்பினர்களின் ஆதிக்கம், சில ஆண்டுகளாக தமிழகத்தில் தலைதூக்கியது. குடும்ப தொலைக் காட்சிகளின் ஆதிக்கம், வாரிசுகளின் சினிமா தயாரிப்பு, வினி யோகம், தியேட்டர்களுக்கு கட்டுப்பாடு உள்ளிட்ட ஆதிக்க நிலை, சினிமா தொழிலில் உள்ளவர்களை மட்டுமின்றி, பொது மக்க ளையும் முகம் சுளிக்க வைத்தது. திருமங் கலம் உள்ளிட்ட இடைத்தேர்தல்கள் தந்த வெற்றி பார்முலாவை, சட்ட சபை தேர்தலி லும், தி.மு.க., கூட்டணியினர் பின் பற்றினர். 

தி.மு.க. அதன் கூட்டணி கட்சிகளுக்கும் ஒரு பெரும், “சுனாமி’ என்பதை மட்டும் யாறும் மறுக்க முடியாது.

NEWS IN THINAMALAR

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: