Sunday, June 11அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அதிமுக, காங்கிரஸ் கூட்டணியா!? அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து திமுக ஆலோசனை

முதல்வர் ஜெயலலிதாவுக்கு வாழ்த்து கூறி தேநீர் விருந்துக்கு வருமாறு காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி அழைப்பு விடுத்தால் பெரும் அதிருப்தி அடைந் துள்ள திமுக, மத்திய அமைச்சரவையிலிரு ந்து விலகி வெளியிலிருந்து ஆதரவு தருவது குறித்து ஆலோசித்து வருவதாக கூறப்படு கிறது.

காங்கிரஸ் கட்சியின் பச்சோந்தித்தனம் உலகம் அறிந்த ஒன்று தான். இருப்பினும் சட்டசபைத் தேர்தலில் அதிமுக பெரும் வெற்றி யையு்ம், திமுக பெரும் தோல்வியையும் சந்தித்ததைத் தொடர்ந்து அப்ப்டியே அந்தர் பல்டி அடித்தது காங்கிரஸ். திமுகவின் தோல்விக்கு காங்கி ரஸும் ஒரு காரணம் என்பதை வசதி யாக மறந்து விட்ட அந்தக் கட்சி, அவசரம் அவசரமாக ஜெயலலிதா வுக்கு வாழ்த்து கூறி யது. மேலும் சோனியா காந்தியோ, ஜெயலலிதாவுடன் 2 முறை போ னில் பேசி வாழ்த்து கூறினார். தேநீர் விருந்து க்கும் வருமாறு அழைப்பும் விடுத்தார்.

இதுகுறித்து ஜெயந்தி நடராஜனிடம் செய்தி யாளர்கள் கேட்ட போது இன்னும் திமுக எங்களது கூட்டணிக் கட்சிதான். ஜெயலலி தாவுக்கு சோனியா காந்தி அழைப்பு விடுத் ததும், வாழ்த்து கூறியதும் ஜனநாயக நடை முறைதான் என்று கூறினார். காங்கிரஸ் கட்சியின் இந்த செய லால் திமுக கடும் அதிருப்தி அடைந் துள்ளது. மேலும், மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள மு.க.அழகிரி உள்ளிட்ட திமுக அமைச்சர்களும் இனிமேல் டெல் லிக்கு சென்று என்ன பயன் என்று கூறி வருவதாக தெரி கிறது.

இதையடுத்து மத்திய அமைச்சரவையிலிருந்து மட்டும் வெளி யேறி வெளியிலிருந்து ஆதரவு தரும் முடிவை எடுப்பது குறித்து திமுக சிந்தித்து வருவதாக கூறப்படுகிறது. அதேசமயம், கூட்ட ணியை விட்டு வெளியேறாது திமுக என்று தெரிகிறது. குறிப்பாக கனிமொழி விவகாரத்தில் ஒரு முடிவு தெரியும் வரை காங் கிரஸுடனான கூட்டணியை திமுக தானாக முறிக்காது என்றும் கூறப்படுகிறது.

தேர்தல் முடிவால் சோர்ந்து போய் வீட்டோடு முடங்கியுள்ள கருணாநிதியை, திமுக முன்னணித் தலைவர்கள் கடந்த 2 நாட்களாக சந்தித்துப் பேசி வருகின்றனர். காங்கிரஸ் கட்சியின் போக்கு குறித்து அவர்கள் கருணா நிதியிடம் ஆலோசனை நடத்தி யுள்ளனர்.

வேண்டும் என்றே திமுகவை சீண் டுவது போல காங்கிரஸ் நடப்பதாக மூத்த தலைவர்கள் கருணாநிதி யிடம் கூறியதாக தெரிகிறது.

இருப்பினும் தற்போது ஆட்சி அதிகாரம் கையில் இல்லாத நிலையில், 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் கருணாநிதி வீடு வரை வந்து விட்ட நிலையில் அவசரப்பட்டு முடிவெடுக்க திமுக தயாராக இல்லை என்று கூறப்படுகிறது. எனவே அமைச்சரவையிலிருந்து மட்டும் விலகிக் கொண்டு, வெளியிலிருந்து ஆதரவு தருவதாக அறிவிக்கலாமா என்பது குறித்து திமுக தரப்பு யோசித்து வருவதாக தெரிகிறது.

தற்போது மத்திய அமைச்சரவையில் அழகிரி உள்பட 6 அமைச்சர்கள் திமுக வுக்கு உள்ளனர்.

மேலும் 2014ல் நடைபெறவுள்ள லோக் சபா தேர்தலுக்குள் கட்சியை வலுப்படுத்த வேண்டிய அவசியம், அதற்கான நடவடிக் கைகள் குறித்தும் கருணாநிதி, கட்சித் தலைவர்களுடன் ஆலோசி த்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து திமுக தரப்பில் கூறுகையில், பிரதமர் மன்மோகன் சிங், ஜெயலலிதாவை வாழ்த்துவது என்பது வேறு, சோனியா காந்தி வாழ்த்து கூறுவது என்பது வேறு. சோனியாவுக்கும், ஜெய லலிதாவுக்கும் எப்போதும் நல்லுறவு இருந்ததில்லை. மேலும் திமுகவின் பரம விரோதி அதிமுக என்பது சோனியா காந்தி க்குகத் தெரியாததல்ல. திமுக வுடன் கூட்டணி வைத்து ள்ள நிலை யில் அதிமுக தலைவரை அவர் வாழ்த் துவது என்பது சீரிய ஸான ஒரு விஷயம்.

அதிமுகவுடன் கூட்டணி அமைக்க காங்கிரஸ் தயாராகி விட்ட தாகவே தலைவர் கருதுகிறார். அவரது கருத்தே எங்களது கரு த்தும். 2014 லோக்சபா தேர்தலை இணைந்து சந்திக்க காங்கி ரஸும், அதிமுகவும் முடிவு செய்துள்ளதாக நாங்கள் கருதுகி றோம் என்றனர்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்



Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: