பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகளில், விண்ணப்பங் கள் இன்று முதல் விநியோகிக்கப்படுகின்றன.
மருத்துவ விண்ணப்பங்கள்
தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகள், தனியார் மருத் துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். பட்டப்படிப்பிற்கான அரசு ஒதுக்கீடு இடங்கள் மற்றும் அரசு பல் மருத்துவக் கல்லூரி, தனியார் பல் மருத் துவக் கல்லூரிகளில் பி.டி.எ ஸ். பட்டப்படிப் பிற்கான அரசு ஒதுக்கீடு இடங்கள், கவுன் சிலிங் மூலம் நிரப்பப்பட உள்ளன. இவற்றுக்கான விண்ணப்பங்கள் திங்கள் முதல் அனை த்து அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் வழங்கப்படுகின்றன.
இவ்விண்ணப்ப விற்பனையை, சென்னை மருத்துவக் கல்லூரி டீன் கனகசபை, கல்லூரி கருத்தரங்கில் திங்கள் காலை 10 மணிக்கு துவக்கி வைக்கிறார். விண்ணப் பங்களை பெற விரும் பும் மாணவர்கள், கல்லூரி முதல்வருக்கு ஒரு விண் ணப்பம் எழுதி, அத்துடன் 500 ரூபாய்க்கான டிடி -ஐ இணைத்து பெற்றுக் கொள் ளலாம்.`The Secretary, Selection Committee, Kilpauk, Chennai10&’ என்ற பெயரில், ஏதாவதொரு தேசியமய வங்கியில் டிடி -ஐ எடுக்க வேண்டும்.
எஸ்.சி. – எஸ்.டி. – அருந்ததியர் விண்ணப்பங்களை இலவசமாக பெற, தங்கள் சாதி சான்றிதழின் இரு நகல்களை விண் ணப்பத்துடன் இணைக்க வேண்டும். விண்ணப்பங்களை சமர்பிக்க ஜூன் 2ம் தேதி கடைசி நாள். சென்னை மருத்துவக் கல்லூரி டீன் கனகசபை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப் பட்டுள்ளது.
பொறியியல் விண்ணப்பங்கள்
தமிழகத்தில், 486 இன்ஜினியரிங் கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் உள்ள 1 லட்சத்து 90 ஆயிரம் இடங்களில், 65 சதவீத இடங்கள் அரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. ஆண்டுதோறும், இந்த இடங்களுக்கான மாணவர் சேர்க்கையை, அண்ணா பல் கலை நடத்தி வருகிறது. இன்ஜி னியரிங் சேர்வதற்கான விண்ணப்பம் திங்கள் (16-05-11) முதல் மே மாதம் இறுதி வரை, வழங்கப்பட உள்ளது.
கடந்தாண்டு, 2 லட்சத்து 5 ஆயி ரம் விண்ணப்பங்கள் அச்சடிக் கப்பட்டு வழங்கப்பட்டன. இந்தா ண்டு, கூடுதலாக 15 ஆயிரம் விண்ணப்பங்கள் அச்சடிக் கப்பட் டுள்ளன. மேலும், விண்ண ப்பங் கள் தேவைக்கு ஏற்ப கூடுதலாக அச்சடிக்கப்படும். மாணவர் சேர்க் கைக்கான விண்ணப்பம், சென்னை அண்ணா பல்கலை, அனைத்து அண்ணா தொழில்நுட்ப பல்கலை, அரசு உதவி பெறும் இன்ஜினியரிங் கல்லூரிகள் ஆகியவற்றிலும் விண்ணப்பம் வழங்கப்படும் என அண்ணா பல்கலை துணைவேந்தர் மன்னர் ஜவகர் தெரிவித்தார்
இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.
தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்