Saturday, June 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

எதையும் தாங்கும் இதயம் வேண்டுமா?

பங்குச் சந்தை முதலீடு என்பது ஏற்ற இறக்கத்தைக் கொண்டது. இதில், புள்ளிகள் தடாலடியாக இறங்கி, போட்ட முதலீடு கணிச மாக கரையும் போது பலருக்கு அதிர்ச்சி ஏற்படக் கூடும். அதைத் தாங்கிக்கொள்ளும் வித மாக நம் உடலையும் உள்ளத்தையும் பக்குவ ப்படுத்திக் கொள்வது அவசியம்.

பக்குவத்துக்கான வழி சொல்கிறார் இதய சிகிச்சை நிபுணர் வி.சொக் கலிங்கம்.

”மனிதனின் மனமே அவனை வாழ வை க்கும் முக்கிய அம்சமாக இருக்கிறது. ஐம்புலன்களின் உணர்வுகளை மூளைக்கு எடுத்துச் சென்று, எண் ணங்களாக மாற்றி ஒருவரை அறிவுடையவனாக மாற்றுவது மனதின் செயலாக இருக்கிறது. இந்த மனம் மூன்று கூறுகளை உள்ளடக்கியது. அவை உணர்வு, எண்ணம், அறிவு ஆகியவை களாக இருக்கின்றன. மனதின் தன்மைதான் ஆளுமை என்கிற பர்சனாலிட்டியை நிர்ணயம் செய்கிறது.

மனிதர்கள் பலவித குணங்களை க் கொண்டவர்கள். ஒருவகையி னர் எதிலும் தீவிரம் மற்றும் கோபம் கொள்பவர்கள். அடுத்த வகை யினர் தங்களுக்கு ஏற்படும் உணர் வுகள், எண்ணங்களை வெ ளிப்ப டுத்தாதவர்களாக – முக மூடி அணி ந்தவர்களாக இருக்கி றார்கள். இப்பிரிவில் பெண்கள் அதிகம் இருக்கிறார்கள். அடுத்து அறிவு, பதவி, பணம் படைத் திருந்தும் மன அழுத்தம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். எந்த ஒரு மனிதனும் இந்த மூன்று வகையாக இருக்கக் கூடாது!” எனச் சொல்லும் சொக்கலிங்கம், அப்படிபட்டவர் களுக்கு என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் என்பது குறித்தும் விளக் குகிறார்.

”இந்த மூன்று வகையினருக்கும் உயர் ரத்த அழுத்தம் (ரத்தக் கொதிப்பு), ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கும் அபாயம் (நீரிழிவு) அதிகமாக இருக்கிறது. இவர்களுக்கு உருவாகும் மன அழுத்தம் மூலம் கொலஸ்ட்ரால் அதிகரிக்கும். இந்தப் பாதிப்பு இருப்பவர்கள் நெய், முட்டை யின் மஞ்சள் கரு, கல்லீரல், மூளை போன்ற கொலஸ்ட்ரால் அதிகம் கொ ண்டவற்றை சாப்பிடவில்லை என் றாலும், ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கும். காரணம், மன அழு த்தம் காரணமாக கொலஸ்ட்ராலை கல்லீரல் தானே உற்பத்தி செய்து விடும். இது போன்ற பாதிப்பு உள்ள வர்களைத்தான் திடீர் அதிர்ச்சி அதிக மாக பாதிக்கிறது.

அதிர்ச்சி என்பது மனதின் வெளிப்பாடு. அதிர்ச்சியால் இதயம் மற்றும் உடல் நலம் பாதிப்புக்கு உள்ளாகிறது. எக்காரணம் கொ ண்டும் மன அழுத்தம் ஏற்படக் கூடாது. உடலில் கொலஸ் ட்ரால் அளவு அதிகரித்தால் இதயத் துடிப்பு வழக்கமாக 70-லிருந்து படிப்படியாக 100, 120 என அதிகரித்து 200-ஐ கூடத் தாண்டக் கூடும். மேலும், ரத்த அழுத்தமும் கூடிவிடும். அதா வது, மன அழுத்தத்தின் மூலம் உருவாகும் கொலஸ்ட்ரால் அனைத்தையும் அதிகரித்து மனிதனை ஆபத்தில் கொண்டுபோய் விட்டுவிடும்.

சிகரெட், பீடி, மதுபானங்களில் மகிழ்ச்சி இருப்பதாக எண்ணுவது மாயை! இப்போது 20-25 வயது இந்திய இளைஞர் களைக்கூட மாரடைப்பு அதி கம் தாக்குகிறது. இது அமெரிக்கர்களை விட 4 மடங்கு, சீனாவைவிட 10 மடங்கு, ஜப்பானைவிட 20 மடங்கு அதிக பாதிப் பாகும். இந்தியாவில் ஒரு மணி நேரத்தில் 90 பேர் மாரடைப்பால் மரணம் அடைகிறார்கள்!

மாரடைப்பைத் தடுக்க மன மகிழ்ச்சி முக்கியம். மலையே கவிழ்ந்தாலும் மகிழ்ச்சியைக் கைவிடக் கூடாது. வெற்றி அடை வது என்பது மகிழ்ச்சியான நிகழ்ச்சி. ஆனால், உண்மையில் மகிழ்ச்சியுடன் இருப்பதுதான் வெற்றி.

தொழிலை சுமையாக நினைக்கக்கூடாது. 20 மணி நேரம் மன மகிழ்ச்சியுடன் வேலை பார்த் தாலும் பாதிப்பு இருக்காது. இதையே கஷ்டப்பட்டு 2 மணி நேரம் சுமையாக நி னைத்து வேலை பார்த்தால் இதய பாதிப்பு நிச்சயம் வரும்.

மன அழுத்தம் அல்லது அதி ர்ச்சி ஏற்படும்போது இதய த்துக்கு ரத்தத்தை எடுத்துச் செல்லும் குழாய் வேக வேகமாக சுருங்கி விரியும். அப்போது தான்  மாரடைப்பு ஏற்படுகிறது. மூளைக்கு ரத்தத்தை எடுத்துச் செல்லும் குழாய் வேகமாக சுருங்கி விரியும் போது பக்கவாதம் ஏற்படு கிறது. 

மேலும், புற்றுநோய், ஆஸ்துமா போன்ற பாதிப்புகள் வரவும் மன அழு த்தம் காரணமாக இருக்கிறது.   

மன அழுத்தத்தைக் குறைக்க தியான மும் யோகாசனமும்  நல்ல வழிகள். உடம்பில் எல்லா உறுப்புகளுக்கும் சக்தியைக் கொடுப்பது யோகாசனம். மூளைக்கு வலிமை சேர்ப்பது தியானம்.

மன அழுத்தம் மற்றும் மன அதிர்ச்சி இல்லாமல் உலகில் யாரும் வாழ முடியாது.  பாசிடிவ் ஆக நினைக்கும்போது மூளை என்டா க்ரின் மற்றும் மெலட்டோனின் ஆகிய திரவங்களையும் கல்லீரல் நல்ல கொழுப் பையும் அதிக அளவில் சுரந்துவிடும். மன அதிர் ச்சி ஏற்படும்போது அதை உடல் தாங்கிக்கொள்ள வேண் டும். அதற்கு உடற்பயிற்சி அவசியம். குறிப்பாக, நடை பயிற்சி, நீச்சல், சைக்கிள் ஓட்டுதல் போன்றவற்றை மேற் கொள்ளலாம். புகைப்பது மட்டும் அல்ல, புகைப்பவர் அருகில்கூட இரு க்கவேண்டாம். வாழ்க்கை என்பது இனிய பயணம். அது பந்தயம் அல்ல. பந்தயம் என்றால் போட்டி பொறாமை வந்து விடும். பங்குச் சந்தை சார்ந்த முதலீட்டாளர்கள், டிரேடர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் அதிகமாக உடல் உழைப்பு இல்லா தவர்களாக இருக் கிறார்கள். மேலும், நீண்ட நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்து பணி புரிபவர் களாக இருக்கிறார்கள். இவை தவிர்க் கப்பட வேண்டும்.

100 வருடங்கள் வாழ ஒரு மனிதன் வருடத்துக்கு 100 மணி நேரம் யோகாசனம், உடற்பயிற்சி செய்தால் போதும். அதாவது தினசரி 15-20 நிமிடம் இவ ற்றை மேற்கொண்டால் போ தும். ரத்த அழுத்தம் 100-ஐ தாண்டாது. சர்க்கரை அளவு 100, கொலஸ்ட்ரால் அளவு 100-ஐ தாண்டாது. 100 வய தைத் தாண்டி வாழ வேண்டும் என்றால் உடம்பிலும் பாரம் இருக்கக் கூடாது. மனதிலும் பாரம் இருக்கக் கூடாது!” – முத்தாய்ப்பாக முடிக்கிறார் டாக்டர் சொக்கலிங்கம்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: