Saturday, July 31அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஜெ., 3 வது முறை முதல்வராக இன்று பதவியேற்றார்.

தமிழகத்தின் முதல்வராக அ.தி.மு.க., பொதுசெயலர் ஜெ., 3 வது முறை முதல்வராக இன்று பதவியேற்றார். சென்னை பல்கலை க்கழக நூற்றாண்டு அரங்கில் நடந்த விழா வில் கவர்னர் சுர்ஜித் சிங் பர்னாலா, ஜெயல லிதாவுக்கு பதவிப் பிரமா ணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செ ய்து வைத்தார். சரியாக பிற்பகல் 12.45 மணி க்கு ‌ஜெயலலிதா பதவி யேற்றார். அவ ரை தொடர்ந்து நிதித்துறை அமைச்சராக ஓ. பன்னீர் செல்வம், விவசாயத்துறை அமைச் சராக செங்கோட்டையன், மின் துறை மற்றும் மது விலக்குத் துறை அமைச்சராக நத்தம் விஸ்வ நாதன், நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சராக கே.பி. முனுசாமி, தொழில்துறை அமைச்சராக சி.சண்முகவேலு, வீட்டு வசதி மற் றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சராக ஆர்.வைத்தியலி ங்கம், உணவுத்துறை அமைச்சராக அக்ரி கிருஷ்ண மூர் த்தி, கால் நடை பராமரிப் புத்து றை அமைச்சராக சோ.கருப்பசாமி, உயர்கல் வித்துறை அமைச்சராக பி.பழநியப்பன், பள்ளிக் கல்வித் துறை அமைச்சராக சி.வி.சண்முகம், கூட்டுறவுத் துறை அமைச்சராக செல்லூர் ராஜா, வனத்துறை அமைச்சராக பச்சமால், நெடுஞ்சா லைத் துறை மற்றும் சிறிய துறைமுகங்கள் துறை அமைச்சராக எடப்பாடி கே. பழனிச்சாமி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக எஸ்.பி. சண்முகநாதன், பொதுப்பணித்துறை அமைச்சாராக கேவி. ராமலிங்கம், சிறப்பு திட்ட அமலாக்க அமை ச்சராக வேலு, பிற்படுத்தப் பட்டோர் நலத் துறை அமைச்சராக டி.கே.எம்.சின்னையா, ஊரக வளர்ச்சித்துறை அமைச்ச ராக  ‌எம்.சி.சம்பத், வருவாய்த்துறை அமை ச்சராக பி.தங்கமணி, செய்தி மற்றும் விளம்பரத்துறை ஜி.செந் தமிழன், வணிகவரித் துறை அமைச்சராக எஸ்.கோகுல இந்திரா, சமூக நலத்துறை அமைச்சராக செல்வி ராமஜெயம், கைத்துறித்துறை அமை ச்சராக பி.வி.ரமணா, தகவல் தொழில்நுட்பத் துறை அமைச் சராக ஆர்.பி.உதயகுமார் ஆதிதிராவிடர் நலத் துறை அமை ச்சராக என். சுப்ரமணியம், போக்குவரத்து துறை அமைச்சராக வி.செ ந்தில் பாலாஜி, சுற்றுச்சூழல் துறை அமைச் சராக என்.மரியம் பிச்சை, மீன் வளத்துறை அமைச்சராக கே.ஏ.ஜெய பால், சட்டத்துறை அமைச்சராக இ.சுப்பையா, சுற்றுலாத் துறை அமைச்சராக புத்தி சந்திரன், தொழிலா ளர் துறை அமைச்சராக எஸ்.டி.செல்லபாண்டியன், சுகாதாரத்துறை அமைச்சராக வி.எஸ்.விஜய், விளையாட்டுத்துறை அமைச் சராக என்.ஆர். சிவபதி ஆகியோர் பதவியேற்றுக் கொண்டனர்.

சென்னை பல்கலை., நூற்றாண்டு அரங்கில் நடந்த பதவியேற்பு விழாவில் , தே.மு.தி.க., தலைவரும், எதிர்கட்சி தலைவருமான விஜயகாந்த், குஜராத் முதல்வர் நநேரந்திரமோடி, ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபுநாயுடு ( தெலுங்குதேசம்) , இடதுசாரி தலைவர்கள் ஏ.பி., பரதன், ராஜா, உள்பட பலர் திரளாக பங்கேற்றனர். தமிழ்த்தாய் வாழ்த்து நாட்டுப்பன்னுடன், 12. 45 க்கு பதவியேற்பு விழா துவங்கியது.

விழாவில் சிபிஎம் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், சிபிஐ செய லாளர் தா.பாண்டியன் மற்றும் சமத்துவ மக்கள் கட்சி மனித நேய மக்கள் கட்சி, பார்வர்ட் பிளாக், புதிய தமிழகம், மூவேந்தர் முன் னேற்ற முன்னணி உள்ளிட்ட தமிழக கூட்டணிக் கட்சித் தலைவர்கள் , பா.ஜ., மாநில தலைவர் பொன். ராதாகிருஷ்ணன், பத்திரிகையாளர் சோ, ஐகோர்ட் நீதிபதிகள் , போலீஸ் உயர் அதி காரிகள், உள்பட திரளானவர்கள் பங்கேற்றனர்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: