தனிமையிலே இனிமை காண முடியுமா என அந்தக் காலத்தில் பாட்டு எழுதி வைத்தார்கள். திருமண உறவு தான் ஒரு ஆண் அல்லது பெண் ணின் முழுமை என்பதும் பலமாக நம் பப்பட்டு வந்தது.
ஆனால் இன்றைய நிலைமை என்ன ..? திருமண பந்தத்தை உதற விட்டு அல் லது மறுத்து விட்டு தனிமை வாழ்க் கையை விரும்புபவர்களின் எண்ணி க்கை அதிகரித்து விட்டது.
ஆணோ, பெண்ணோ திருமணம் செய்வ தற்கு இப்போது அவசரப் படுவதில்லை. காரணம், பற்பல இருக்கலாம்.
சரி, தனிமையில் இனிமையாக இருக்க முடியுமா..? முடியும் என்கிறது ஒரு ஆய்வு. அதற்கு சில கார ணங்களையும் அது அடுக்குகிறது.
நமது உடலிலிருந்து அந்தக் காரணங்க ளை தொடங்குகிறது அந்த ஆய்வு..
திருமணமாகாதவர்களுக்கு உடல் எடை கட்டுக்குள் இருக்குமாம். கார்ன் வெல் பல்கலைக்கழகம் இதுதொடர்பாக நடத்தி சமீபத்திய ஆய்வில், திருமணம் ஆகாத பெண்களுக்கு பொதுவாக எடை அதிகரிப்பதில்லை. ஆனால் திருமணமான பெண்களுக்கு முதல் சில ஆண்டுகளில் ஐந்து முதல் எட்டு பவுன்டு வரை எடை கூடி விடுகிறதாம். முதல் பத்து ஆண்டுகளில் திருமண மான பெண் களின் எடை சராசரியாக 54 பவுன்டுகள் கூடி விடுகிறதாம்.
திருமணமாகாத பெண்களுக்கு தங்க ளது உடல் அழகு, எடை உள்ளிட்ட வற் றில் கூடுதல் அக்கறையும், கவன மும் இருக் கிறதாம். அதேபோல அவர்களின் மனமும் புத்துணர்ச் சியுடன் இருப்ப தால் மிகவும் இளமை யாக உணர்கி றார்களாம் – வயதா னாலும் கூட.
மற்ற பெண்களை விட தாங்கள் எப்போதும் அழகாக காட்சி தர வேண்டும். மற்றவர்களை கவ ரும் வகையில் நடந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் திரு மணமாகாத பெண்களுக்கு நிறை யவே இருக்கிறதாம். ஆனா ல் கல்யாணமான பெண்களுக்கு இரு க்கும் கவலையே வேறு.
கணவருக்குப் பிடித்த மாதிரியாக தோன்ற வேண்டும். கணவ ரைக் கவரும் வகையில் நடந்து கொ ள்ள வேண்டும் என்ற ‘குறு கிய’ வட்டத்துக்குள் அவர்கள் மாட்டிக் கொள்கிறார்களாம். குடும் பக் கவலை உள்ளிட்ட பல்வேறு எக்ஸ்ட்ரா விஷயங்களும் சேர் ந்து திருமணமான பெண்களின் மனப் பளுவை அதிகரித்து விடு கிறதாம். இத னால் அவர்களது எடை உயர வாய் ப்பு ஏற்படு கிறதாம்.
2வது காரணமாக கூறப்படுவது சாத னை மனப்பான்மை. எதையாவது சாதி க்க வேண்டும். மற்றவர்களை விட நாம் ஒரு படி மேலே இருக்க வேண்டும் என்ற எண்ணம் திருமணமான பெண்களை விட ஆகாத பெண்களுக்கே அதிகம் இருக் கிறதாம். இது ஆண்களுக்கும் கூட பொருந்துமாம்.
திருமணமாகாதவர்களுக்கு குடும்பப் பொறுப்புகள் இருப்பதில்லை. சுதந்திர மாக இருக்கிறார்கள். கட்டுப்பாடு கிடையாது. எனவே சாதிக்கும் ஆர்வம் இவர்களிடம்தான் அதிகம் இருக் கிறதாம்.
இதுகுறித்து லண்டன் பொருளா தாரவியல் மற்றும் அரசியல் விஞ் ஞானப் பள்ளி நடத்திய ஒரு ஆய் வில், கல்யாணமாகாத ஆண் விஞ் ஞானிகள், திருமணமான ஆண் விஞ்ஞானிகளை விட சிறப் பாக செயல்படுவதாக தெரிவித் துள் ளது.
திருமணமாகாத விஞ்ஞானிகளின் சிந்தனைத் திறன், கல்யா ணமானவர்களை விட அதிகம் இருக்கிறதாம். ஷார்ப் ஆகவும் இருக்கிறதாம்.
கல்யாணமாகாத ஆண்கள் பெரும் பாலும், தங்களது திறமை யைப் பயன்படுத்தி பெண்களைக் கவர முயலுகிறார்கள். பெண் களைக் கவர்ந்து அவர்களை காதலித்து மணந்து கொண்ட பின்னர் அவர் களது கிரியேட்டிவிட்டி படிப்படி யாக குறைந்து விடுகிறதாம். வழக் கமான சராசரி ஆண்களாகி விடுகிறார்கள் என்றும் அந்த ஆய்வு கூறுகிறது.
மேலும், கல்யாணமாகி, தந்தையும் ஆன பின்னர் ஆண்களுக்கு டெஸ்டோஸ்டிரான் அளவு குறைந்து விடுகிறதாம். இது தான் சுறுசுறுப்பான செயல்பா டுகளுக்கு முக்கிய காரணம் என்ப து குறிப்பிடத்தக்கது.
3வது காரணம், வீட்டு வேலை களில் அசமஞ்சமாக இருக்க லாம். திருமணத்தைத் தவிர்த்து தனிமையில் இருப்பவர்களுக்கு வீட்டு வேலைகளில் படு சுதந் திரம் கிடைக்கிறது.
நமக்கு தோன்றினால் மட்டுமே வீட்டைக் கூட்டலாம், பாத்திர ங்களைத் துலக்கலாம். துணி களைத் துவைக்கலாம். நினைத்த நேரத்தி்ற்கு எந்த வேலையையும் செய்யலாம். யாரும் கேள்வி கேட்க முடியாது.
தனிமையில் இருக்கும் பெண் களுக்கு இந்த விஷயத்தில் நிறை ய சுதந்திரம் கிடைக்கிறது. திரு மணம் மற்றும் குடும்ப வாழ்க்கை குறித்த ஒரு பத்திரிக்கை ஆய் வில், திருமணமான பெண்களை விட திருமணமாகாத பெண்கள்தான் குறைந்த அளவில் வீட்டு வேலை செய்கிறார்களாம்.
ஆனால் ஆண்கள் அப்படியே தலைகீழ். திருமணத்திற்கு மு ன்புதான் அவர்கள் நிறைய வீட்டு வேலை செய்கிறார்க ளாம். ஆனால் கல்யாணத்திற் குப் பின்னர் அப்படியே தலை கீழாக மாறிவிடுகிறார் களாம்.
இன்னொரு முக்கியமான சமா ச்சாரத்தை இங்கு சொல்லி யாக வேண்டும். அது செக்ஸ். இந்த விஷயம் நம்ம ஊருக்கு எந்த அளவுக்குப் பொருந்தும் என்று தெரியவில்லை. ஆனால் வெளி நாடுகளுக்கு இந்த விஷயம் சர்வ சாதாரணம்.
அதாவது, கல்யாணமான ஆண், பெண்களை விட சிங் கிள்ஸ் ஆக இருக்கும் ஆண் களும், பெண்களும்தான் செக்ஸில் அதிக நாட்டம் உடையவர்களாக, அதை அ திகம் அனுபவிப்பவர்களாக உள்ளனராம்.
திருமணமானவர்கள் ஆண்டுக்கு சராசரியாக 98 முறை செக்ஸ் உறவை வைத்துக் கொள் வதாக ஒரு புள்ளி விவரக் கணக்கு கூறு கிறது (இது கூடவும் இருக்கலாம்). அதே சமயம், தனிமையில் இருப் பவர்கள் சராசரியாக ஆண் டுக்கு 49 முறை செக்ஸ் உற வை மேற்கொள்கிறார் களாம் (இதுவும் கூடக் குறை ய இருக்கலாம்).
திருமணமானவர்களுக்கு செக்ஸ் என்பது சாதாரணமான விஷ யம். கணவனும், மனைவியும் என்றான பின்னர் பரீட்சார்த் தமோ, வித்தியாசமோ அவர்களிடம் இருக்க முடியாது. ஆனால் தனிமையில் இருப்ப வர்களுக்கு ஒவ்வொரு உற வும் வித்தி யாசமானதாக, புதுமையானதாக இருப் பதாக ஆய்வு ஒன்று கூறுகி றது.
இதுகுறித்து பிரிட்டிஷ் மெ டிக்கல் ஜர்னல் என்ற இதழி ல் கூறுகையில், திருமண மாகாத ஆண், பெண்களுக்கு செக்ஸ் உறவு ஒவ்வொரு முறை யும் புதிதாக தோன்றுகிறது. அதை அவர்கள் அனுபவிக்கத் தவறு வதில்லை. இதனால் ஒவ் வொரு உறவும் அவர்களுக்கு முக்கி யமானதாக மாறி விடு கிறது என்கிறது அந்த செய்தி .
இத்தாலியின் பிசா நகர பல் கலைக்கழகம் வெளியிட்டு ள்ள ஒரு ஆய்வறிக் கை யில், திருமணமான முதல் இரண்டு ஆண்டுகளுக்கு மட்டுமே ஆண் மற்றும் பெண்களின் உடலில் டெஸ்டோஸ்டிரான் அளவு அபரிமிதமாக இருக்கிறது. இதனால் அந்த இரண்டு ஆண்டு களுக்கு அவர்கள் செக்ஸில் பூரணமாக ஈடுபடுகிறார்கள்.
ஆனால் அதன் பின்னர் டெஸ்டோஸ்டிரான் அளவு குறைந்து, ஆக்ஸிடாசின் போன்ற ஹார் மோன்களின் அளவு அதிகரித்து விடு கிறது. இதனால் வேகம் குறைந்து போய் விடுகிறது.
எனவே செக்ஸ் உறவுக்கும், திரு மணத் திற்கும் ஏழாம் பொருத்தம் என்று கூடச் சொல்லலாம்.
இது தவிர மன அழுத்தம் என்ற விவ காரமே சிங்கிள்ஸ் மனிதர்களுக்கு இருப்பதில்லையாம். திருமணமானவ ர்களுக்கு பல கவலைகள். ஆனால் திரு மணமாகாதவர்களுக்கு ஒரே கவலை தான் – அது பொழுதை எப்படியெல்லாம் போக்குவது என்பது. மன அழுத்தம் இவர்களுக்கு மிக மிக குறைவு என்பதால் உடல் ஆரோக் கியமும் தானாகவே சிறப்பாக இருக்கிறதாம்.ட
இப்படி தனிமையில் இருப்பவர்க ளுக்குத்தான், திருமணமானவர்க ளை விட நிறைய சந்தோஷமும், நிம்மதியும், சுதந்திரமும் இருக் கிறது என்கின்றன மேற்கண்ட ஆய் வுகள்.
அதற்காக ஒற்றை மரமாகவே இருந்தால்தான் உருப்படுவோம் என்று நாம் கூற வரவில்லை. இனிமைக்கு தனிமை மட்டுமே முக்கியம் என்றில்லை. இனிய காதலும், அருமையான இல்ல றமும் கூட இனிப்பான விஷயங்கள்தான், இல்லையா?
இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.
தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்