பாரதிராஜாவின் “கண்களால் கைது செய்” படத்தின் மூலம் அறிமுகமான நடிகை ப்ரியாமணி, “பருத் திவீரன்” படத்தில் முத்தழகு கேரக்டர் மூலம் பட்டிதொட்டி யெல் லாம் பிரபல மானார். அதன்பின்னர் நிறைய படங்க ளில் நடித்த ப்ரியா மணி பரத்துடன் “ஆறு முகம்” படத்திற்குபிறகு காணாமல் போ னார். தற்போது தெலுங்கு பக்கம் முகா மிட்டு இருக்கும் ப்ரியா மணி ”ஷேத்திரம்” என்ற படத்தில் ஜெகபதிபாபு, ஷாம் ஆகி யோர் நடித்து வருகிறார்.
தமிழ் படங்களில் ஏன்..? உங்களை பார்க்கமுடியவில்லை என்று கேட்டபோது கொட்டி தீர்த்துவிட்டார். இது குறித்து அவர் கூறிய தாவது, வழக் கம் போல ஒரு சினிமா என்றால், டூயட், ஆடி பாடி, அழுது நடிப்பதில் ஆர்வம் இல்ல, கதை நல்ல இருக்கனும், ஒரு பீல் வரனும் படத்தை பார்த்து மக்கள் ரசிக் கனும், இப்ப சமீபத்தில் வெளிவந்த யதார் த்தமான சில படங்கள் எல்லாம் நன் றாக வந்துள்ளன. படம் ரொம்ப நல்லா இருக்கு, மக்களிட த்தில் நல்லா ரீச் ஆகி ருக்கிறது என்றெல்லாம் செய்திகள் வெளிவருகின்றன. எனக்கும் அந்தமாதிரி படங்கள் எல்லாம் வந்தால் நான் ஏன்…? நோ சொல்லப் போறேன். தமிழ் சினிமா வில் இருக்கும் நல்ல நல்ல டைரக்டர்கள் இயக்கத்தில் நடிக்க ஆசையாக இருக்கிறது. குறிப்பாக டைரக்டர் தரணி, முருகதாஸ், கே.எஸ். ரவிக்குமார் ஆகியோரது படங்களில் நடிக்க ஆர்வமாக இருக்கிறது என்று கூறினார்.
இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.
தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்