இணையம் வழியாக வங்கி பரிமாற்றங்களை மேற்கொள்வதில், எச்.டி.எப்.சி. வங்கி முதல் இடம் பெற்றுள்ளதாக, இந்தப் பிரிவில் ஆய்வு மேற்கொண்டு வரும் விஸி சென்ஸ் (ViziSense) என்ற அமைப்பு தெரிவித் துள்ளது. இரண்டாவது இடத்தில் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியும், அடுத்த இடத்தில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவும் வருகின்றன.
பயனாளர் ஒருவர் ஒரு மாதத்தில், சராசரியாக ஏழு முறை எச்.டி.எப்.சி. வங்கியின் இணைய தளத்தைப் பயன்படுத்துகிறார். ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் தளம் ஒருவரால் ஐந்து முறை யும், ஐ.சி.ஐ.சி.ஐ. பேங்க் தளம் நான்கு முறையும் பயன் படுத்தப் படுகிறது.
ஒருவர் அதிக நேரம் பயன்படுத்துவது எச்.சி.எப்.சி. வங்கியின் தளத்தையே. இதற்கு அந்த வங்கி பயனாளரை வழி நடத்தும் முறையின் அடிப்படையில் இருக்கலாம். தகவல்கள் தரவிற க்கம் செய்யப்படும் அடிப்படையிலும் இருக்க லாம்.
பெரு நகரங்கள் தவிர, மற்ற நகரங்கள் மற்றும் கிராமப் புறங் களில் உள் ளவர்கள் அதிகம் பயன்படுத்துவது ஸ்டே ட் பேங்க் ஆப் இந்தியாவின் தளத் தையே. பெரிய நகரங்களில் அதிகம் பயன் படுத்தப்படுவது சிட்டி பேங்க் இணைய தளத்தினையே.
இணைய தளப் பயன்பாடு ஆண்டு தோறும் 30% அதிகரித்து வருகிறது. கடந்த பன்னிரண்டு மாதங்களில், வங்கிகளின் இணைய தளங்களைப் பயன்படுத் துவது குறிப்பிடத்தக்க வகை யில் முன்னேறி வருகிறது. இன்டர்நெட் பயனாளர் எண்ணிக்கை வளரும் வேகத்தைக் காட்டிலும், வங்கிக ளின் தளங்களைப் பயன்ப டுத்து வோர் எண்ணிக்கை அதிகரிப்பது கூடுதலாகவே உள்ளது. இது 35% ஆக உள்ளது. இந்த கூடுதல் பெரும் பாலும் நகரமில்லாத இடங்களிலிருந்து பயன்படுத்துவோரால் ஏற்படுவ தாக விஸி சென்ஸ் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.
தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்