இரண்டு சிம் இயக்கம் மற்றும் சமுதாய தளங்களுக்கான தொ டர்ந்த இணைப்பு வசதிக ளோடு, பட்ஜெட் விலையி ல் மொபைல் போன் ஒன்று தேடும் வாடிக்கையாளர்க ள், சாம்சங் நிறுவனம் வெ ளியிட்டுள்ள, சாம்சங் சேட் 322 என்ற மொபைல் போ னை வாங்கலாம்.
பிரிமியம் மொபைல் போன் கள் பலவற்றை (சாம்சங் கேலக்ஸி எஸ்/எஸ்.எல். மற்றும் கேலக்ஸி டேப்) வடிவமைத்து விற்பனை செய்து வரும் சாம்சங் நிறுவனம், அந்த அனுபவ த்தின் பேரில், வாடிக்கையாள ர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவு செய்திடும் வகையி ல், கூடுதல் வசதிகளுடன் பட்ஜெட் விலையிலும் சில போன்களை விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளது. அந்த வகையில் சேட் 322 இடம் பெறுகிறது.
இது நான்கு பேண்ட் அலை வரிசை களில் இயங்குகிறது. இதன் பரிமாணம் 109.5 x 60 x 12.3மிமீ. எடை 95 கிராம். ஆப்டிகல் ட்ரேக் பேட், குவெர்ட்டி கீ போர்ட், 3.5 மிமீ ஆடியோ ஜாக், 2.2 அங்குல வண்ண த்திரை, 45 எம்பி உள் நினைவகம், மைக்ரோ எஸ். டி. கார்ட் மூலம் 8 ஜிபி வரை அதிகப்படுத் தும் வசதி, ஜி.பி.ஆர்.எஸ். மற்றும் எட்ஜ் தொழில் நுட்பப் பயன்பாடு, A2DP இணைந்த புளுடூத் பயன் பாடு, மைக்ரோ யு.எஸ்.பி., வீடியோ பதிவு மற்றும் இயக்கம் கொண்ட 1.3 மெகா பிக்ஸெல் கேமரா, எப்.எம். ரேடியோ, வாய்ஸ் மெமோ, வாய்ஸ் மெயில், மியூசிக் பிளேயர், 1000 mAh திறன் கொண்ட லித்தியம் அயன் பேட்டரி ஆகியன உள்ளன. இந்த பேட்டரி மூலம் தொடர்ந்து 13 மணி நேரம் வரை பேசலாம். ஒரு முறை சார்ஜ் செய்தால், 588 மணி நேரம் மின்சக்தி தங்குகிறது. இதன் அதிக பட்ச விலை ரூ. 4,290. இதனை சாம்சங் சி 3222 எனவும் அழைக்கின்றனர்.
இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.
தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்