சென்ற மாதம் நோக்கியா நிறுவனம் பல கூடுதல் வசதிகள் கொண்ட மொபைல் ஒன்றை பட்ஜெட் விலையில் வழங் கியுள்ளது. நோக்கியா X1- 00 என அழைக்கப்படும் இந்த போன், இசைப் பிரியர் களின் தேவைகளுக்கென வடிவ மைக்கப்பட்டுள்ளது. அத்து டன் முதன் முதலாக மொ பைல் போனைப் பயன்படுத் தும் வாடிக்கையாளர்களுக் கு உதவும் வகையிலும் அமைக்கப்பட்டுள்ளது. ஹெட்செட் இல்லாமலே யே, இசையைக் கேட்கும் வகையில், பெரிய ஸ்பீக்க ர்கள் இதில் தரப்பட்டுள்ளன. இதிலிருந்து வெளிப் படும் அலைவரிசை, நுணுக்கமாகக் கட்டுப்ப டுத்தப்படுவதால், அதிக அளவிலான வால்யூ மில் பாடலைக் கேட்கும் போதும், துல்லியமான இசை நமக்குக் கிடைக்கிறது.
இதன் திரை 1.8 அங்குல வண்ணத்திரை; 128 x 160 பிக்ஸெல் திறன் கொண்டது. 16 மிமீ தடிமனில், 91 கிராம் எடையுடன் உள் ளது. நியூமெரிக் கீபேடுடன் நேவிகேஷன் கீயும் தரப்பட் டுள்ளது. இசைக்கு மட்டுமென தனியாக மூன்று கீகள் உள்ளன. ஒரே கீயில் மியூசிக் பிளே லிஸ்ட் ஒன்றை உருவாக்கலாம். எப். எம். ரேடியோ, 3.5 மிமீ ஆடியோ ஜாக் இசை கேட்பதை எளி தாக்குகின்றன. ஐந்து தனித்தனி அட்ரஸ் புக்குகளை இதில் அமை த்துக் கொள்ளலாம். மைக்ரோ எஸ்.டி. கார்ட் போர்ட் மூலம், இதன் மெமரியை 16 ஜிபி வரை அதிகப்படுத்தலாம். இவ ற்றுடன் பேசும் அலாரம் கடிகாரம், கால்குலேட்டர், டார்ச், ஐந்து கேம்ஸ் ஆகியவை தரப்படுகின்றன. அதிகத் திறனுடன் கூடிய 1320 mAh பேட்டரி வழங்கப் பட்டுள்ளது. இதனைப் பயன்படுத்தி, 13 மணி நேரம் பேசலாம்; 38 மணி நேரம் பாடல் களைக் கேட்கலாம்; ஒருமுறை சார்ஜ் செய்தால் 61 நாட்கள் மின் சக்தி தங்கும்.
இந்த போன் ஆரஞ்ச் மற்றும் கடல் நீலத்தில் தயாரிக்கப்பட்டு ள்ளது.
இதன் அதிக பட்ச விலை ரூ.1,600 முதல் ரூ.2,000 வரையில் அறிவிக்கப்படலாம்.
இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.
தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்