Tuesday, July 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

வாட்டர் தெரபி!?

உடல் இளைப்பது முதல் புற்றுநோய் பாதிப்பு குறைவது வரை செலவே இல்லாத மருந்து ஒன்று இருக்கிறது தெரியுமா? அது தான் தண் ணீர். என்ன சிரிக்கிறீங்க? உண்மை தான். இந்த செலவே இல்லாத தண் ணீரின் மகிமை பற்றி நமக்கு தெரிந்தும் அலட்சியப் படுத்துவது தான் வேத னையான வேடிக்கை.

செலவே இல்லாத தண்ணீரா? என்று திரு ப்பி கிண்டல் அடிக்கா தீர்கள். சென் னையில் உள்ளவர்கள் பெரும்பா லோர், ஏதோ தனி யாரிடம் வாங்கி சாப் பிடும் “கேன் வாட்டர்’ தான் நல்ல பாது காக்க ப்பட்ட குடிநீர் என்று நினைக்கின்றனர். இப்போது மெட்ரோ வாட் டர் தண்ணீர் வர ஆரம்பித்து விட்டது. அதை குடித்தாலே போ தும், ஆனால், காய்ச்சிக் குடிக்க மறந்து விடக்கூடாது.

அதென்ன “வாட்டர் தெரபி?.’ நாம் சாப் பிடும், குடிக்கும் எதுவாக இருந்தா லும், அதில் உள்ள நல்ல சத்துக்களை திரவமாகவும், திடமாகவும் பிரித்து பிரித்து வெளியேற வேண்டிய சமாச் சாரங்களை வெளியேற்றி, சத்துக் களை, திரவ வடிவில் ஏற்று உட லின் பாகங்கள் பிரித்துக் கொள்கின்றன. இப்படித் தான் கால் சியம், இரும்பு, கார்போஹைட்ரேட் என்று எல்லாம் உடலில் சேர் கிறது.

தொண்டை வரை காரமாகவோ, இனி ப்பாகவோ இருக்கும் எதுவும் உடலில் சத்துக்களை சேர்ப்பதில்லை. நாம் வாய் ருசிக் காக சாப்பிடும் பல வேண்டாத சமாச்சாரங்களும், கழிவுப் பொரு ளாக நேரடியாக சிறுநீராகவும், மலமாகவும் தான் வெளியேறு கின்றன.

நம் வீட்டில் எப்படி சமை யல் அறை, படுக்கையறை, ஹால், பாத்ரூம், டாய் லெட் உள்ளதோ அது போல நம் உடலிலும் உள் ளது. எல்லாவற்றையும் கழுவி, நல்லதை “டெட் டால்’ ஊற்றி சுத்தம் செய்ய வேண்டாமா? அப்போது தானே உடல் என்ற வீடு, நாறாமல் இருக்கும்.

அதற்காக தான் அவ்வப்போது நாம் தண்ணீர், திரவ உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டியிருக் கிறது.

முன்பு இருந்த உணவு முறையில் இப்படி ஆரோக்கியத்தை கரு த்தில் கொண்டு வகுத்து வைத்தனர். இப் போது “லைப் ஸ்டைல்’ எவ்வளவோ மாறி விட்டது.

உடலை எப்படியெல்லாம் பாதிக்க வைக்க வேண்டுமோ, அதற்கு நாமே தேவையான கெட்ட சத்துக்கள் அனைத்தையும் நம் உண வுகளின் மூலம் தருகிறோம். கொழுப்பு, ஷûகர், ஆயில் என்று எல்லாவற்றையும் சேர்த்து, கடைசியில் ரத்த அழுத்தம், சர்க் கரை, ஹார்ட் பிராப்ளம் என்று எல்லாவற்றையும் உடலில் ஏற்றி விடு கிறோம்.

இந்த புது “லைப் ஸ்டைலில்’ எதையும் யாரும் கேட்பதாக இல் லை. இந்த லைப் ஸ்டைல் காரணமாக தான், இளைய வயதினர், குழந்தைகள் எல்லா ரிடமும் பழங்கள் போன்ற திரவ சம்பந்தப்பட்ட உணவு களை எடுத்துக் கொள்ளும் பழக்கமே போய் விட்டது. அது வும், தண்ணீர் குடிப்பது என்பது அரிதாகி விட்டது. இது பெரும் தவறு.

ஏதோ உணவு, சிற்றுண்டி சாப் பிடும் போது மட்டும் தண்ணீர் குடிப் பது போதாது. தண்ணீர் குடிப்பதை பழக்கப்படுத்த வே ண்டும். தண்ணீர் தொடர்பான பழங்கள், காய்கறிகளை அதி கம் சேர்க்க வேண்டும். பல ஆயிரக்கணக்கில் பணம் கற ந்து சொல்லித் தரப் படும் “வாட்டர் தெரபி’ உட்பட மூலிகை தெரபிகளை நாம் ஏன் இப்போதே ஆரம்பிக்கக் கூடாது? நீங்கள் ஆரம்பியுங்கள். உங்கள் பிள்ளைகளுக்கும் தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை கற்றுக் கொடுங்கள்.

இது தான் “வாட்டர் தெரபி’ பயிற்சி. இனியும் நீங்கள் தண்ணீர் குடிக் காமல் இருக்க மாட்டீர்களே? என்ன பாட் டிலை வாங்கி டேபிளில் தண்ணீருடன் வைத்தி ருங்கள். வீட்டிலாகட்டும், ஆபீ சிலாகட்டும் மணிக்கொரு தரம் தண்ணீர் குடிங்க, பாரு ங்க, உடல் “கும்ம்ம்’ன்னு இரு க்கும்.

வெயிட் குறைய தண்ணீர் முக்கியம்: என்ன தான் உடற்பயிற்சி செய்தாலும், டானிக் சாப்பிட்டாலும், உடல் எடை குறையாது. ஆனால், தொடர்ந்து தண்ணீர் குடித்து வாரு ங்கள், ஒரு மாதத்திலேயே ரிசல்ட் தெரிந்து விடும். உடல் எடையை அதிகப் படுத்திக் காட்ட இளைஞர்கள், இன்டர்வியூவுக்கு செல்லு முன் கண்டபடி தண்ணீர் குடித்துச் செல்வர். இது சரியல்ல. உண்மையில், உடல் எடையை கூட்டிக் காட்ட தண்ணீர் பய ன் படாது. உண்மையில், அது உட லை பாதிக்கும். தினமும் குறிப் பிட்ட அளவு சாப்பிட்டு வந்தால் உடல் எடை அதிகரிப்பை கட்டுப்படுத்தும் என்பது தான் உண்மை.

உடலில் கலோரியை கட்டுப்படுத்த மருந்து தேவையல்ல, தண் ணீர் தான் முக்கிய தேவை. தண்ணீர் சாப்பிட் டால், உடலில் வயிற்றில் இருந்து ஆரம் பித்து, குடல், சிறுநீரகம் என்று எல்லா இடத் தையும் சுத்தப்படுத்தி, எலும்பு, தசைகளையும் எந்த பாதிப்பும் இல்லாமல் சீராக்கி சென்று கடைசியில் வெளியேறி விடுகிறது. இப்படி செய் வதால் தான் சிறுநீரக பிரச்னை, குடல் பிரச்னை என்று எதுவும் வராமல் இருக்கிறது சிலருக்கு.

ஒரு நாளைக்கு எட்டு முதல் பத்து டம்ளர் வரை தண்ணீர் குடிக்கலாம். ஆப்பிள், சாத்துக்குடி, ஆரஞ்சு என்று பழங்களாகவும் சாப்பிட லாம். அவற்றில் 70 சதவீதம் வரை தண்ணீர் சத்து தான் உள்ளது. தினமும் ஏதாவது ஒரு சமயம், பழங்களாக சாப்பி ட்டால் நல் லது. கண்ட கண்ட நொறுக்குத் தீனியை சாப்பிடுவதை விட, பழங் கள் நல்லது.

“அப்பா விடட்டும் முத லில்; நான் அப்புறம் விட றேன்!’

இருபது வயதில் ஆரம்பித்த உணவு, பழக்கவழக்கங்கள், நாற்ப துக்கு மேல், உடலில் தங்கள் வேலையை செய்து, எல்லா வியாதி களையும் வரவழைத்து விடு கிறது. அப்புறம், ஐம்பதில் தான் நமக்கு “விழிப்புணர்வே’ வருகிறது. நம் பிள்ளைக ளுக்கு தான் “அட்வைஸ்’ சொ ல்ல வேண்டியிருக்கிறது. ஆனால், மகனாவது கேட்கி றானா? “போப்பா, நீ தானே ஓட்டலுக்கு அப்பப்போ அழை ச்சிக்கிட்டு போய் ப்ரைடு ரைஸ் சாப்பிடு, நுõடுல்ஸ் சாப்பிடு, பனீர் பட்டர்… அது இதுன்னு சாப்பிட வச்சே…’ என்று பிள்ளைகள் திருப்பி கேட்பார்கள் தானே.

அதனால், இன்றைய முப்பதில் இருப்பவர்களா நீங்கள்? வேண் டா மே, இந்த உணவுப் பழக்கங் களில் தவறான சமாச்சா ரங்கள். நீங்க விட்டா தான், உங்க பிள்ளைகள் விடுவா ர்கள். இன்னிலேர்ந்து விட்டு விடுங்கள், ப்ளீஸ்.

நீச்சல் பயிற்சி நல்லது: நீச்சல் சேம்பியனாக வர வேண்டும் என்றால் தான் நீச்சல் பயிற்சி செய்ய வேண்டுமா? உடல் பயிற் சியில் நீச்சல் பெரும்பங்கு வகிக்கிறது.

முன்பெல்லாம் மாவட்டங் களில் இருப்பவர்களுக்கு நீச் சல் முக்கியம். கிராமங்க ளில் பிறந்தவர்களுக்கு இதெல்லா ம் இல்லாமல் இளமை வாழ்க் கை நகராது. நகரங்களில் உள் ளவர்களை பற்றி கேட்கவே வேண்டாம். பாத்ரூம் குளிய லில் கூட ஏதோ காக்காய் குளியல் தான். இதனால் பல ருக்கு தண்ணீர் அலர்ஜி கூட வரும். பெரும்பாலோர் வெந்நீரில் குளிக்க இதுவும் காரணம். நல்ல குளிர்ந்த நீரில் குளித்துப் பாருங்கள், அதன் மணமே, தன் மையே தனி. ரிலாக்ஸ் செய்ய, மருத்துவரீதியாக தண்ணீரில் நிற்பதும் ஒன்று. அதனால், தான் பலரும் டென் ஷனாக, பிசியாக இருந்து வீடு திரும் பினால், உடனே குளிக்கின்றனர். முடி ந்த வரை டென்ஷனை போக்கும் தன் மை, குளிர்ந்த நீருக்கு உண்டு.

பாதிக்கு பாதி தண்ணீர் வேணும்!: நாம் எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும்? இது தான் பலரின் கேள்வி.

பொதுவாக நம் உடல் எடையில் பாதி அளவு அவுன்ஸ் தண்ணீர் குடிக்க வேண் டும். அதாவது உதாரணமாக 120 பவுண்டு எடை இருப்பதாக வைத்தால், பாதி அளவு, 60 அவுன்ஸ் தண்ணீர் குடிக்க வேண்டும்.

இதை ஒரு நாளைக்கு எட்டு முதல் 10 டம்ளர் என்று பிரித்துக் கொண்டு தண்ணீர் சாப்பிடலாம்.

ஒரு பக்கம் தண்ணீர் குடித்து விட்டு, இன்னொரு பக்கம் காபி குடித்தால் பலனே இல்லை. குடித்த தண்ணீரை வற்றவைத்து விடும் காபியில் உள்ள காபின்.

ஆல்கஹாலும் அப்படித்தான். தண்ணீர் வேண்டிய அளவு குடித்து விட்டு, மதுப் பழக்கம் இன்னொரு பக்கம் இருந்தால், நாக்கு வறண்டு தான் போகும். உடலில் தண்ணீர் ஏறவே ஏறாது.

தண்ணீர் சாப்பிடுகிறேன் பேர்வழி என்று ஒரே மொடக்கில் அடிக்கடி கண்டபடி குடம் குடமாக குடிப்பதும் தவறு.

வெறும் தண்ணீர் குடிக்க பிடிக்காவிட்டால், அதில் தேயிலை பையை நனைத்தோ, எலுமிச்சை பிழிந்தோ சாப்பிடலாம்.

ஆப்பிள், ஆரஞ்சு, திராட்சை, பப்பாளி, மாம்பழம், சாத்துக்குடி, கேரட் ஜூஸ் போன்றவற்றையும் சாப்பிடலாம்.

தொண்டை கரகரப்பு இருந்தால்… வெந்நீர், அல்லது வெந்நீரில் தேன் கலந்து சாப்பிட்டால் கரகர… போச்சு.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: