“காதல், காதல், காதல்
காதல் போயின் சாதல் சாதல் சாதல்”
பாரதியையே பாடாய் படுத்தி யுள்ளது இந்த மூன்றெழுத்து வார்த்தை.
கவிஞர்கள் எல்லோ ருக்கும் பாடு பொருளாய் உள்ள இந் த காதல் அப்படி என்ன மந்தி ரத்தை தன்னுள் கொண்டிரு க்கிறது?
`காதல் என்பது பசி, தாகம், கோபம் போன்ற ஓர் இயல் பான உணர்வு! உடல் ரீதி யாக பார்த்தால் காதல் என்பது சுரபிகளின் விளையாட்டு . ஆண்ட்ரோஜன், ஈஸ்ட்ரோஜன், அட்ரினலின் போன்ற சுரப்பி களின் இயக்கத்தில் ஏற்படும் மாற்றங்கள் என்கின்றனர் அறிஞ ர்கள்.
அன்பு, நட்பு, நம்பிக்கை, பொறுப்பு ஆகிய நான்கு தூண்களின் மீது கட்டப்படும் அழகிய மாளிகை. இயல்பான காதல் என்பது முதலில் நம்பிக்கையில் தொடங்கும். பொறுப்புணர்வு முழுமை யாக இருக்கும். அதன் பின்னரே காமம் வரும். நம்பிக்கை, பொறுப்புணர்வு, காமம் இவை முன்றும் சரியான விகிதத்தில் கலந்திருப்பதே உண்மையான காதலாகும்..
காதல் என்பது பாலியல் ரீதியான தாகவே இருக்க வேண்டும் என்ப தில்லை. பெற்றோர்கள், குழந் தைகள், உறவினர்களுடன் நீங்க ள் மன ரீதியாக சாதகமான தொடர்புகளைக் கொண்டிருக்கும் போது, மதிப்புக்கு உரியவராக உணர்வீர்கள். இத்தகைய மதிப்பு வாய்ந்த காதலால் கிடைக்கும் நன்மைகள் இங்கே பட்டியலிடப் பட்டுள்ளது.
மனவிரக்தி:
காதல் சூழலில் வாழ்பவர்களுக்கு மன விர க்தி மற்றும் உள ரீதியான துன்பங் கள் வரு வது குறைவு என்கின்றன ஆய்வுகள். மாறாக தனியே வாழும் பலரும் விரக்தியுறுவதும், மது, போ தை போன்றவற்றை நாடுவதும், அவற்றிற்கு அடிமையாவதும் அதி கம். அதே போல தனிமைப்பட்டவர்கள் மனவிரக்திக்கு ஆளாவது அதிகம் என்பதை பல ஆய்வுகள் தெளிவாகச் சொல்லியிருக் கின்றன.
மனப்பதற்றம்:
புதிதாக காதல் வயப்பட்டவர்களைவிட நீண்ட காலமாக நேசமான உறவில் இருப்பவர்களுக்கு மனப் பதற்றம் ஏற்ப டுவது குறைவு என கண்டறியப்பட்டு ள்ளது. MRI பரிசோதனைகள் மூலம் மூளையின் பகுதிகளை பரிசோதித் ததில் இது தெரிய வந்துள்ளது.
வலிகளைத் தாங்கும் தன்மை:
மகிழ்ச்சியாக வாழும் தம்பதிகளுக்கு உடல்வலி, தலைவலி ஆகியன ஏற்படு வது குறைவாம். MRI பரிசோதனைகள் மூலம் வலிகளைத் தாங்கும் மூளையின் பகுதி அதிகமாகச் செயற்பட்டு வலி தோன்றுவதைக் குறைக்கிறது என்பதை ஆய் வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
ரத்த அழுத்தம்:
மணமுடித்து மகிழ்ச்சியாக வாழும் தம்பதிக ளின் இரத்த அழு த்தம் மற்றவர்களை விடக் குறைவாக இருக்கிறது. தனியாக இருப்பவர் களுக்க சற்று அதிகமாகவும் உள்ளது. மண முடி ப்பதால் மட்டும் இரத்த அழுத்தம் குறைந்து விடுவதில்லை. மகிழ்ச்சியாக வாழ்வதே முக் கியம் என் பதை இந்த ஆய்வுகள் தெரிவித் துள் ளன.
காய்ச்சல் அதிகம் வராது:
காதல் வயப்பட்டவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இதனால் காய்ச்சல், போன்ற தொல் லைகள் அடிக்கடி ஏற்படாது. சிறிய காயங்கள் தாமாகவே விரைவில் குணமாகி விடும் என்றும் ஆய்வில் தெரியவந்துள்ளது.
நீண்ட ஆயுள்:
தனித்து இருப்பவர்களை விட திருமணம் முடித்தவர்கள் நீண்ட காலம் வாழ்கி றார் கள். திருமண உறவால், பரஸ்பர ஆதர வும், பிள்ளைகளின் உதவியும், நிதி தட்டுப்பாடின்மையும் காரணமாக இருக்க லாம். ஆனால் அதற்கு மேலாக தாம் காதலிக் கப்படு கிறோம், ஆதரவுள்ள வர்கள் என்ற உணர்வு அவர்களுக்கு உடல் நலத் தையும் நீடித்த வாழ்வையும் கொடுக்கிறது.
காதலின் மிகப் பெரிய கொடை:
குடும்ப வருமானத்தையும் வாழ்க்கை வசதிகளையும் விட பரஸ்பர அன்பும், நெருக்கமான உறவும், மனமொத்த காத லும் முக்கியமானது. அது ஆரோக்கிய த்துடனும் தொடர்புடையது.
இவை வெற்று வார்த்தைகள் அல்ல விஞ்ஞானபூர்வமாகவும் நிறுவப்பட்டு ள்ளது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.
ஆதலினால் காதல் செய்வீர் – இதுவும் பாரதி சொன்னதுதான்!
இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.
தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்