Sunday, May 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

இந்தியர்கள், செக்ஸ் வாழ்க்கையில் திருப்தி

வாழ்க்கையில், இந்தியர்கள் தான் மிகவும் திருப்தியுடன் இருப்பதாக ஆய்வு ஒன்றில் தெரிவிக் கப்பட்டுள்ளது.

இந்தியர்கள் உலக அளவில் பல துறை களில் வெளுத்துக் கட்டிக் கொண்டிருக் கிறார்கள். அதேபோல படுக்கை அறை யிலும் அவர்களே ‘கிங்’ ஆக உள்ளனர் என்று கூறுகிறது அந்த ஆய்வு.

இந்தியா வில் 70 சதவீதம் பேருக்கு திருப்திகரமான செக்ஸ் வாழ் க்கை இருப்பதாகவும் அந்தக் கருத்துக் கணிப்பு ஆய்வில் தெரி விக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்த ஆய்வை ஃபிஸர் பார்மச்சூட்டிகல் நிறுவனம் நடத்தியது. இந்தியா உள்பட மொத்தம் 13 நாடுகளில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இதில் செக்ஸ் வாழ்க்கையில் திருப்தியுடன் இருப்பவர்கள் பட்டியலில் இந்தியர்களே முதலிடத்தில் உள்ளனர்.

இருப்பதிலேயே மிகவும் மோசமான செக்ஸ் வாழ்க்கை வாழ் பவர்கள் ஜப்பானியர்கள் தானாம். 10 சதவீதம் ஜப்பானியர் களுக்கே செக்ஸ் வாழ்க்கை திருப் திகரமாக உள்ளதாம் (‘செக்ஸில்’ வீக் ஆக இருந்தாலும் ‘சென் செக்ஸில்’ நம்மை விட ஜப்பானி யர்கள் டாப் என்பதை மறக்கக் கூடாது).

மலேசியர்களைப் பொறுத்தமட்டில், 3 ஆண்களில் 2 பேருக்கும், நான்கு பெண்களில் 3 பேருக்கும் செக்ஸ் வாழ்க்கை மகிழ்ச்சியாக இல்லையாம்.

திருப்திகரமான செக்ஸ் வாழ்க்கை வாழ்வோரின் பட்டியலில் மலேசியர்களுக்கு 6வது இடம் கிடைத்துள் ளது.

இந்த ஆய்வை நடத்திய குழுவின் தலை வரான டாக்டர் ரோசி கிங் கூறுகையில், திருப்திகரமில்லாத செக்ஸ் வாழ்க்கை குறித்த ஒட்டுமொத்த ஆசியா- பசிபிக் முடிவு களின் சதவீதத்தை விட மலேசியாவின் சதவீதம் அதிக மாக உள்ளது.

மலேசியர்களில், ஆண்களில் 57 சதவீதம் பேரும், பெண்களில் 64 சதவீதம் பேரும் திருப்திகரமில்லாத செக்ஸ் வாழ்க்கை வாழ் வதாக தெரிவித்துள்ளனர்.

இந்த செக்ஸ் குறித்த கருத்துக் கணிப்பில் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன.

அதில் முக்கியமானது ‘எரக்ஷன்’ குறித்த கேள்வி. அதை பல்வேறு அளவீடுகள் மூலம் நாங்கள் ஆராய்ந்தோம்.

ஆண் குறிகளின் அளவுகளை வைத்து அவற்றை நான்கு மட்டங்களாகப் (Level) பிரித்து அவற்றின் அடிப்படையில், செக்ஸ் திருப்தி குறித்து தீர்மானிக்கப்பட்டது.

இந்த அளவீடுகள் குறித்து ஆண்களிடம் விளக்கி அவர்களாகவே அதை பரி சோ தித்து எங்களிடம் முடிவைத் தெரிவிக் குமாறு கேட்டுக் கொண்டோம்.

செக்ஸ் வாழ்க்கையில் திருப்தியுடன் இருப்பவர்களுக்கே தனிப் பட்ட வாழ்க் கையிலும் திருப்தி அதிகம் உள்ளதும் இந்த கருத்துக் கணிப்பில் தெரிய வந்தது.

மேலும் செக்ஸ் வாழ்க்கையில் திருப்தி கரமான மன நிலையில் இருக்கும் ஆண் களும், பெண்களும் எதையும் பாசிட் டிவாக சிந்திக்கும் மனோ பக்குவத்தையும் பெற்றுள்ளனர் என்றார் ரோசி கிங்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: