Friday, August 6அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சோனி டேப்ளட் பிசி

மொபைல் கம்ப்யூட்டிங் பிரிவில், ஆப்பிள் நிறுவனம் தன் ஐ-பாட் டேப்ளட் பிசிக்களுடன் முதல் இடத் தைப் பிடித்திருக்கும் நிலை யில், இரண்டாவது இடத்தையாவது முத லில் கைப்பற்ற வேண்டும் என்ற ஆவலில், சோனி நிறுவனம், சென்ற மாதம் இரண்டு டேப் ளட் பிசிக்களை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. கூகு ள் ஆண்ட்ராய்ட் பதிப்பு 3 ஆப்பரேட்டிங் சிஸ்டம் இதில் பயன் படுத்தப் படுகிறது.

ப்ளே ஸ்டேஷனில் பயன்படுத்தப் படும் விளையாட்டுக்களை இதில் விளையாடலாம். இந்த வகையில், சோனியின் பட்டயக் கம்ப்யூட்டர்களே முதலில் இந்த வசதியைத் தரும் கம்ப்யூட்டர் களா கும். இந்த இரண்டு டேப்ளட் பிசிக்களும் S1 மற்றும் S2 என அழைக்கப்படுகின்றன. இவை வை-பி மற்றும் 3ஜி/4ஜி நெட் வொர்க் இணைப்பினை எளிதாக மேற்கொள்கின்றன. இவற்றின் திரை 9.1 அங்குல அகலத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. S2 என அழைக்கப்படும் டேப்ளட் பிசியில், இரண்டு 5.5 அங்குல திரைகள் உள்ளன.

காலம் கழித்து இந்த பிரிவில் சோனி நிறுவனம் நுழைந்தாலும், பல வகைகளில் இவற்றின் டேப்ளட் பிசிக்கள், மற்றவற் றிடமிருந்து வேறுபட்டு இரு க்கின்றன.

ஜப்பானில் விற்பனைக்கு அறிமுகமான இந்த டேப்ளட் பிசிக்கள், தொடர்ந்து மற்ற நாடுகளிலும் வர இருக்கின் றன. அவற்றில் இந் தியா முதலிடம் பெறும் வாய்ப்பு கள் உள்ளன. தற்போது, இந்தி யாவில் ஆண்டொன்றுக்கு ஒரு லட்சம் டேப்ளட் பிசிக்கள் விற்ப னையாகி வருகின்றன. 3ஜி சே வை பரவும் பட்சத்தில், டேப்ளட் பிசிக்கள் விற்பனை மேலும் அதிகமாகலாம்.

சோனி இன்னும் இந்த டேப்ளட் பிசிக்களுக்கான விலையை அறிவிக்கவில்லை.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: