Monday, September 20அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

“மா” விவசாயிகள் கிருஷ்ணகிரியில் தவிப்பு

மகாராஷ்டிராவில் உள்ள ரத்னகிரி மற்றும் சிந்து துர்க் மாவ ட்டங்களில் நமது நாட்டில் உற்பத்தியாகும் ஆல்போன்சா மாம் பழங்களின் அளவு சுமார் 50 சதவீத அளவாகும். தமிழ் நா ட்டின் உற்பத்தி அளவு 25 சதவீதம்தான். மீதமுள்ள உற் பத்தி கர்நாடகா, ஆந்திராவி லிருந்து கிடைக்கிறது. ஆல் போன்சாவில் காய்ப்பு சீசன் துவங்கும்போது மழை, பனி காரணங்களால் உற்பத்தி கடு மையாக பாதிக்கப்பட்டுள் ளது. ஆல்போன்சா சாகுபடி யாளர் கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். தமிழ்நாட்டில் கிருஷ்ண கிரிமை மா மாவட்டம் என்கிறார்கள். இங்கு 36 ஆயிரம் எக்டேர் பரப்பில் சுமார் 3 லட்சம் டன் மாம்பழங்கள் உற்பத்திஆகின்றது. இங்கு தோத்தாபுரி, ஆல்போன்சா, செந்தூரா, நீலம், பங்கனபள்ளி போன்ற வியாபார ரகங்கள் சாகுபடியில் உள்ளன. இவை களில் தோத் தாபுரி யில் கிடைக்கும் உற்பத்தி மட்டும் 80 சதவீத உற்ப த்தியாகும். இந்த வருடம் கிருஷ்ணகிரி பகுதியில் சீசன் சரியி ல்லாமல் விவசாயிகள் கவ லையில் உள்ளனர். கிருஷ்ண கிரியில் வியாபார மா ரகங் களை விட தோத் தா புரி ரகம் இது வரை நல்ல பலனைக் கொடுத்துவந்தது. ஏனெனில் தோத் தாபுரி ஒரு சிறந்த பழக்கூழ் ரகம். இது ஏற்றுமதி செய்வதற்கு மிக ஏற்றது. இதனால்தான் கிருஷ்ணகிரி மற்றும் சித்தூர் போன்ற பகுதி களில் பழக்கூழ் தொழிற்சாலைகள் அதிகரிக்க முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றது.

மா பழக்கூழ் சவுதி அரேபியா, பர்ஷியன் கல்ப், ஐரோப்பா போன்ற நாடுகளுக்கு அனுப்பப்பட்டு வந்தது. விற்பனையில் நூறு கோடி மதிப்புள்ள அந் நிய செலாவணி கிடைத்து வந்தது. எகிப்து, லிபி யா, ஜப்பான் போன்ற நாடுக ளில் ஏற்பட்டுள்ள துன்பங்க ளால் இந் நாடுகளுக்கு பழக்கூழ் அனுப்ப இயலாத நிலையில் கிருஷ்ணகிரி விவ சாயிகள் உள்ளனர். தயாரிக்கப்பட்ட பழக்கூழ்கள் இருப்பில் வைக்கப்பட்டுள்ளன. நம் நாட்டிலுள்ள பழக்கூழ் தொழிற் சாலை களில் அதிக அளவில் பழக் கூழ் கையிருப்பில் உள்ளது. விற்க இயலவில்லை. இத னால் தொழிற்சாலை களை இயக்க இயலாத சூழ்நிலை யில் சிரமம் தோன்றியுள் ளது. பழக்கூழ் தயாரிப்பவர் கள் கடும் நஷ்டத்தில் சிக்கிக் கொண்டுள்ளனர். சென்ற வரு டம் மா உற்பத்தி குறைந்து விவசாயிகள் பாதிக்கப்பட்ட னர். இந்த வருடம் தொழிற்சாலைகள் கஷ்டப் படுகின்றன.

கிருஷ்ணகிரி பகுதியில் மா ரகங் களில் வியாபார ரகங்கள் சாப்பிடு வதற்கு ஏற்றது. ஓரளவு பழங்கள் காய்ப்பில் உள்ளன. தற்போது நல்ல விலையில்லை. மேலும் இந்த பழ ங்கள் கைக்கு வருமாவென்று தெரி யவில்லை. ஆலங்கட்டி மழை வந் தால் என்னவாகும் என்று தெரிய வில்லை. கிருஷ்ணகிரி விவசாயி கள் தவித்துக்கொண்டு இருக்கின் றனர். இன்றைய சூழ்நிலையில் மாம்பழ விலை நிதானமாக உள் ளது. ஒரு வேளை மழை இல்லாவி டில் உற்பத்தி பாதிக்காது. உடனே மாம்பழ விலை கிடுகிடு வென்று ஏறிவிடும். மா விவசாயம் அடிக்கடி பருவக் கோளா றினால் பாதிக்கப் படுகிறது. இதோடு விற்பனை பிரச்னை யும் ஏற்படுகின்றது.                                              -எஸ்.எஸ்.நாகராஜன்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: