Friday, August 6அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

“ராணா” படம் கைவிடப்பட்டதா? – கே.எஸ். ரவிக்குமார்

தலைவருக்கு உடம்பு சரியில்லை. அதை விட அதைப் பற்றி வரும் வதந்திகளால் அவரது ரசிகர்கள் மன தளவில் பாதிக்கப்படுகிறார்கள்.

போன சில வாரங்கள் முன்பு தான் ரஜினி “ராணா” படத்தில் மூன்று வேடங்களில் நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளி யிடப் பட்டது. இதற்கான பட பூஜையும் ஏ.வி.எம். ஸ்டூடியோவில் நடந்தது. ரஜினியும் தீபி கா படுகோனேயும் நடித்த சீன்கள் படமாக் கப்பட்டன.

அப்போது ரஜினிக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் “ராணா” படப் பிடி ப்பு தொடர்ந்து நடக்குமா? என்று கேள்விக் குறி எழுந்தது.

படம் கைவிடப்பட்டதாகவும் செய்திகள் பர வின. ரூ.100 கோடிக்கு மேல் செலவிட்டு இப்படத் தை எடுக்க இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ராணா படம் கைவிடப் பட்டதா? என்று அப்படத்தை டைரக்டு செய்யும் கே.எஸ். ரவிக்குமாரிடம்   இன்று காலை கேட்ட போது மறுத்தார்.

ராணா படத்தை நிறுத்தவில்லை. தள்ளிப் போடவும் இல்லை. படத்தை கைவிட்டு விட்டதாக வெளியாகும் வதந்தியை நம்ப வேண்டாம். ஜூலையில்தான் இதன் படப்பிடி ப்பை துவங்க திட்டமிட்டு இருக்கிறோம். தற் போது அதற்கான ஆயத்த பணிகள் நடந்து வரு கின்றன.

தாய்லாந்து சென்று லொக்கேஷன் பார்த்து வந்து ள்ளேன். அடுத்து லண்டன் செல்ல இருக் கிறேன். படத்தை கைவிட்டு விட்டதாக வெளி யான செய்திகள் தவறானவை. அதை நம்ப வேண் டாம்.  ரஜினி விரைவில் குணமடைவார். குறிப்பிட்ட நாளில் திட்டமிட்டபடி படப்பிடிப்பு துவங்கும்  என்று  ரவிக்குமார் கூறினார். நன்றி  திரு ரவிக்குமார் அவர்களே..

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: