Tuesday, August 3அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஸ்பைஸ் எம்.ஐ.310

பட்ஜெட் விலையில் அதிக அளவில் மொபைல் போன்களை அறிமுகப்படுத்தி, இச்சந்தையில் நல்லதொரு இடத்தைப் பிடித்த ஸ்பைஸ் நிறுவனம், வளர்ந்து வரும் ஸ்மார்ட் போன் பிரிவி லும் தன் பாதத்தைப் பதித்து ள்ளது. அதிக பட்ச விலை ரூ. 7,305 எனக் குறிக்கப்பட்டு வந்து ள்ள ஸ்பைஸ் எம்.ஐ.310 மொ பைல், 3.5 அங்குல அகலத்தில் வண்ணத் திரையினைக் கொண் டுள்ளது. கீழாக ட்ரேக் பேட், வால்யூம் மற்றும் கேமராக்கள் இயக்கத்திற் கென தனி கீகள், மைக்ரோ யு.எஸ்.பி.போர்ட், 3.5 மிமீ ஆடியோ ஜாக் ஆகியவை தரப்பட்டுள்ளன.

திரையின் கீழாக, ஹோம், மெனு, சர்ச், பேக் என டச் சென்சிடிவ் பட்டன்கள் உள்ளன. இவற்றை வேறுபடுத்திக் காட்ட, ஒளிரும் தன்மையினை மாறுபாடாக வைத்துள்ளனர். மைக் மற்ற போன் களில் போல் இல்லாமல், போன் முகப்பிலேயே உள்ளது.

இந்த ஸ்மார்ட் மொபைல் போன் Google’s Android 2.2 FroYo ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கு கிறது. ஐந்து வகையான ஹோம் ஸ்கிரீன் தரப்பட்டு, இயக்கம் எளிமைப்படுத்தப் பட்டுள் ளது. ஒரே நேரத்தில் எட்டு புரோகிராம்களை இயக்கினாலும், வேகத்தில் தொய்வில்லை. வீடியோ மற்றும் போட்டோக்களுக்கு 2 மெகா பிக்ஸெல் திறன் உள்ள கேமரா தரப்பட்டுள்ளது.

நெட்வொர்க் இணைப்பிற்கு 3ஜி, புளுடூத் மற்றும் வை-பி தரப்பட்டுள்ளது. Facebook, Nimbuzz, Naukri போன்ற பல்வகை அப்ளிகேஷன்கள் தரப்பட்டு, இந்த போனை தன்னிறைவு பெற்ற போனாகக் காட்டுகின்றன.

டச் ஸ்கிரீனுடன், ஸ்மார்ட் போன் ஒன்றை விரும்புபவர்களுக்கு இது ஒரு சரியான மொபைல் ஸ்மார்ட் போன் ஆகும்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: