டி.வி.எஸ்., குழுமத்தை சேர்ந்த டி.வி.எஸ்., மோட்டார் கம்பெனி, இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகனங்கள் தயாரிப்பு மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வருகிறது.இந்நிறுவனம், கிளட்ச் இல் லாத, ‘ஜைவ்’ என்ற பைக் விற் பனையை, 2010ம் ஆண்டு ஜன வரி மாதம் தொடங்கியது. அன் றைய தேதியிலிருந்து இது வரை யிலுமாக, 1 லட்சத்து 50 ஆயிரம் ‘ஜைவ்’ பைக்குகள் விற் பனை செய்யப் பட்டுள்ளன.
110 சிசி திறன் கொண்ட இந்த பைக்குகள், ஆட்டோமேட்டிக் கிள ட்ச் மற்றும் ரோட்டரி கியர் அம்சங்களை கொண்டுள்ளன. 3 அல் லது 4வது கியரில் கூட, வண்டியை ஸ்டார்ட் செய்யலாம். டாப் கியரில் மெதுவான வேகத்தில் பைக் ஓடும் போது கூட, இன்ஜி னிலிருந்து சத்தம் எழுவதில்லை. மேலும், எந்த கியரில் வா கனம் செல்கிறது என்பதை, வாகன ஓட்டுனர் தெரிந்து கொள்வதற்காக, கியர் இண் டிகேட்டர் பொருத்தப்பட்டு ள்ளது. சிக்னல் மற்றும் போ க்குவரத்து அதிகம் உள்ள பகுதிகளில், அடிக்கடி கிள ட்ச் மற்றும் கியரை மாற்றி சலித்து போ னவர்களுக்கு, இது ஒரு புதிய அனுபவத்தை தருகிறது.
இதன் பயனாக, வாகனத்தை ஓட்டுபவர் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகளில் கூட பதற்றம் இல்லாமல், ஜாலியாக பய ணம் செய்யலாம். மூன்று வண்ணங்களில் (நீலம், சிவப்பு, கருப்பு) கிடைக்கும் இந்த ‘ஜைவ்’ வகை பைக்கின் விலை, சென்னையில் (ஷோரூம் விலை) 43 ஆயிரத்து 35 ரூபா#க்கு விற்பனை செய் யப்படுகிறது.
டி.வி.எஸ்., மோட்டார் நிறுவனத்திற்கு உள் நாட்டில், ஓசூர், மை சூர் மற்றும் இமாச் சலப் பிரதேசத்தில் தொழிற்சாலைகள் உள்ளன. இந்தோனேஷி யாவிலும் நிறுவனத்திற்கு வாகன தயாரிப்பு தொழிற்சாலை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.
தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்