Saturday, June 3அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

கர்நாடக கவர்னர் எடியூரப்பாவுக்கு திடீர் புகழாரம்!

கர்நாடக வளர்ச்சிக்காக முதல்வர் எடியூரப்பா நாள்தோறும், 18 முதல், 20 மணி நேரம் பாடுபடுகிறார். எனக்கும், அவருக்கும் இடை யில் எந்தவித பிரச்னையும் இல்லை,” என, கர்நாடக கவர் னர் பரத்வாஜ் தெரிவித்தார்.

தகுதி நீக்கம் செய்யப்பட்ட 11 எம்.எல்.ஏ.,க்கள் தொடர்ந்த வழக் கில், அவர்களுக்கு சாதகமாக சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்பு, கர்நாடக அரசியலில் திடீர் திருப்பத்தை ஏற்படுத்தியது. 11 எம். எல்.ஏ.,க்களும், முதல்வர் எடியூரப்பாவுக்கு ஆதரவு தெரிவித் தனர். இந்த தகவலை கவர்னர் பரத்வாஜிடம் தெரிவிக்கச் சென்ற போது, அவர்களை பார்க்க கவர்னர் மறுத்து விட்டார். அன்று இர வோடு இரவாக கர்நாடக பா.ஜ., அரசை கலைத்து, ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்துமாறு மத்திய அரசுக்கு கவர்னர் பரத் வாஜ் கடிதம் அனுப்பினார். இந்த கடிதத்தால், கர்நாடக பா.ஜ., தலைவர்கள் கடும் கோபமடைந்து போராட்டம் நடத்தினர். டில்லி சென்று ஜனாதிபதி முன், 114 எம்.எல்.ஏ.,க்களை ஆஜர்படுத்தினர். தங்களுக்கு மெஜாரிட்டி பலம் இருப்பதாக வெளிப்படுத்தினர். இதேநேரத்தில், கர்நாடக பா.ஜ., அரசை கலைக்க வலியுறுத்தி, காங்கிரசார், கர்நாடகா முழுவதும் போராட்டம் நடத்தினர். இத ற்கு பதிலடியாக பா.ஜ.,வினரும் போராட்டத்தில் குதித்தனர். கர் நாடகாவில் என்ன நிகழுமோ என்ற எதிர்பார்ப்பில் டில்லி சென் றிருந்த பா.ஜ., அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், தலைவர்கள் பெங்களூரு திரும்பினர்.கர்நாடக பப்ளிக் கமிஷன் வைர விழா, பெங்களூரில் நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற கவர்னர் பரத் வாஜும், முதல்வர் எடியூரப்பாவும் ஒருவருக்கொருவர் சிரித்து பேசிக் கொண்டனர். முன்னதாக விழாவிற்கு வந்த கவர்னரை, முதல்வர் நேரடியாகச் சென்று வரவேற்றார்.

இவ்விழாவில் கவர்னர் பரத்வாஜ் பேசியதாவது:கர்நாடக கவர் னராக நான் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டேன். என்னை ராஜி னாமா செய்யச் சொல்ல யாருக்கும் உரிமையில்லை. என்னை பதவியிலிருந்து எடுக்க வேண்டுமென்றால், ஜனாதிபதியால் மட்டுமே முடியும்.கர்நாடக மாநில வளர்ச்சிப் பணிகள் திருப் தியாக உள்ளது. எனக்கு கர்நாடகத்தில் யாரும் விரோதிகள் கிடையாது. கவர்னர் அதிகாரத்திற்கு உட்பட்டு, என் கடமையை செய்து வருகிறேன். அதிகாரத்தை மீறி எதையும் செய்யவில் லை. நியாயமாக எதைச் செய்ய வேண்டுமோ, அதை செய்துள் ளேன், செய்தும் வருகிறேன்.கர்நாடக மாநிலத்தில் கெங்கல் ஹனுமந்தய்யா, நிஜலிங்கப்பா, ஜாட்டி உட்பட சக்தி வாய்ந்த முதல்வர்கள் பணிபுரிந்துள்ளனர். அந்த வரிசையில், எடியூரப் பாவும் கர்நாடக வளர்ச்சிக்காக பாடுபட்டு வருகிறார். தினமும், 18 முதல், 20 மணி நேரம் வரை உழைக்கிறார்.கர்நாடக மக்களால் முதல்வராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பெரும்பான்மை பலத் தை அவர் பெற்றிருப்பதால், எந்த பிரச்னையும் இல்லை. தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் பிரச்னை தேவையற்றது, பொறுத்தமற்றது. நாங்கள் அரசியல் சட்டத்தை மதித்து நடந்து வருகிறோம். என் கைகள் சட்டத்தினால் கட்டப்பட்டுள்ளது. ஒரு விருந்தினர் கடவுளுக்கு சமமானவர். அந்த வகையில், கர் நாடகாவுக்கு விருந்தினராக வந்துள்ளேன்.எனக்கு கர்வமோ, ஆசை யோ கிடையாது. அரசியலில் தலையிட்டு பெயர் வாங்கும் எண்ணமும் கிடையாது.கர்நாடக கவர்னர் பதவி வகிப்பதில் சந்தோஷப்படுகிறேன். மாநில காவல் துறை, மாவட்ட நிர்வாக ங்கள் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றன.எனக்கும், எடியூரப் பாவுக்கும் எந்த பிரச்னையும் இல்லை. யாரையும் வேறு பாட்டு டன் பார்ப்பது கிடையாது. என் அலுவலக பியூன் முதல், செயலர் வரை அனைவரிடமும் அன்புடனும், பாசத் துடனும் பழகி வருகி றேன். இதையே நானும் எதிர்பார்க் கிறேன். குறிக்கோளுடன் வாழ்ந்து, ஒருவருக்கொருவர் அனுசரணையாக நடந்து கொள்ள வேண்டும். நான் எந்த தவறும் செய்யவில்லை. ராஜினாமா செய்ய வேண்டிய அவசியமும் இல்லை. சட்ட சபையில் ஓட் டெடுப்பு நடந்தபோது, கொஞ்சம் அவசரப்பட்டு விட்டனர். அப் போது, சபாநாயகர் எடுத்த முடிவு சரியாக அமைய வில்லை என்றார்.

இதற்கு பதிலளித்து முதல்வர் எடியூரப்பா பேசியதாவது:நான் அரசியலுக்கு வருவதற்கு முன், அரசு துறையில் சாதாரண பணி யாளராக பணிபுரிந்துள்ளேன். முதல்வரான பின், நான் நிறைய பாடம் கற்றுள்ளேன். வரும் இரண்டு ஆண்டுகளில், மாநில நிர்வாகத்தில் முழு கவனம் செலுத்துவேன். இந்த வகை யில், அனைவருடனும் ஒத்துழைப்புடன் பணியாற்றுவேன் என்றார்.

கவர்னர் பேசும்போது, முதல்வரும், முதல்வர் பேசும்போது கவர்னரும் மாறி மாறி கைதட்டி தங்களுடைய மகிழ்ச்சியை வெளி ப்படுத்திக் கொண்டனர்.

இதையடுத்து, நேற்று மாலை, கர்நாடக ராஜ்பவனுக்குச் சென்று கவர்னர் பரத்வாஜை, முதல்வர் எடியூரப்பாவும், அமைச்சர்களும் சந்தித்து பேசினர். ஜூன் 2ம் தேதி, சட்டசபை கூட்டத்திற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: