Tuesday, June 6அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

காதலிப்பதை காட்டிலும் காதலிக்கப்படுவது . . .

காதல்…. ஒரு மென்மையான உணர்வு. அதை உணர்வது பிரத்யே கமான ஒன்று. காதலிப்ப தை காட்டிலும் காதலிக் கப் படுவது அனைவரு க்கும் பிடித்தமானது. நம்மை நேசிக்க ஒருவர் இருக்கிறார், என்ற நினைவே உற்சாகத்தை யும், தன்னம்பிக்கையும் ஏற்படுத்தி நம்மை சாதி க்க வைக்கும்.

காதலிக்கும் தருணங் கள் மிக இனிமையான வை. சின்ன சின்னதாய் அழகிய பரிசுப் பொருட் கள், மாலை நேர சந்திப் புகள், பட்டும் படாமலும் அருகாமையில் பயணிக்க நேரும் தரு ணங்கள், கண நேர சந்திப்புகளிலும் காவியம் பேசும் பார்வைகள், எதிர்பாராது நிகழும் ஸ்பரிசங்கள் என்று ஒவ்வொரு நாளும் எதிர் பார்க்க வைக்கும்.

காதல் மொட்டாக மலர்ந்து, திருமண பந்தத்தில் மணம் வீசும் மலராகி, வருடங்கள் ஆன பின் னும் என்றும் உதிராது நிரந்தர மாக இருக்க வேண்டும். அந்த காத ல்தான் உண்மையானது. அத்த கைய காதலை வெற்றியாக்கி திரு மண வாழ்க்கையிலும் சாதிக்க சில

யோசனைகள்:

மனதளவில் தயாராகவேண்டும்

திருமணத்திற்கு மனதளவில் தயாரான பிறகே காதலை திரு மணத்திற்குரிய கட்டத்திற்கு நகர்த்த வேண்டும். அதுவரை காதலிப்பதில் தவறில்லை.

தைரியமாகவும், தன்னம்பிக்கையுடனும் வாழ்க்கைத்துணையை தேர்ந்தெடுக்க வேண்டும். மற்றவ ர்களின் நிர்பந்தத்திற்கு பயந்து வாழ்க்கைத் துணையை தேர்ந்தெ டுக்க வேண்டாம்.

வாழ்க்கைத்துணையின் பழக்க வழக்கங்கள், குணாதிசயங்கள், ரச னைகள் இவையெல்லாம் கடைசி வரை ஒத்துப்போகுமா? என்று பார்க்க வேண்டியது அவசியம்.

இயல்பாய் இருங்கள்

காதலிக்கும் நபர்கள் இயல் பான குணத்துடன் பேசிப்பழகு ங்கள். முதலில் இயல்பை மறைத்துவிட்டு திருமணத் திற்குப்பின்னர் இயல்பான குணம் வெளிப்படும்போது தான் பிரச்சினை உருவா கிறது.

வாழ்க்கை பந்தத்தில் இவரு டன் இணைந்தால் சரிவராது என்று மனதில்பட்டால், உடனே பக்குவமாக பேசி உறவை முறி த்துக் கொள்வதில் தவறில்லை.

நீங்கள் எதை எதிர்பார்க்கிறீ ர்கள் என்பதை உங்கள் து ணையுடன் திருமணத்திற்கு முன்பே பேசிவிடுவது சிறந் தது. திருமணத்திற்கு பிந்தை ய குழப்பங்கள் ஏற்படுவதை இது தவிர்க்க உதவும். குடும்ப உறுப்பினர்கள் பற்றியும், அவர்களின் குணாதிசயங்க ளைப்பற்றியும் காதலிக்கும் போதே பேசிவிடுவது மிகவு ம் முக்கியம்.

காதல் என்பது எதுவரை

தன்னை விரும்பும் ஆண் உலகத்திலே யே தன் மீது மட்டும்தான் அதிக அள வில் காதல் கொண்டவனாக இருக்க வேண்டும் என்பது பெண்களின் அதிக பட்ச எதிர்பார்ப்பு.

காதலில் பெண்கள், உள்ளத்திற்கே முதலிடம் தருகிறார்கள். ஆண்கள், அழகிற்கே முக்கியத்துவம் தருகின் றனர்.

காதலிக்கும் பொழுது இருந்த ஆத்மார் த்தமான நெருக்கம், கல் யாணமாகி இரு குழந்தைகள் பிறந்ததும், குறைந் து விடுகிறது. எனவே காதலை உடல் ரீதியாக அணுகுவதை விட உள்ள ரீதி யாக அணுகுவது வெற்றிக்கு வழிவகுக்கும்.

யாராக இருந்தாலும் நூறு சதவிகி தம் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய முடியாது. நம்முடைய எதிர்பார்ப் பிற்கு ஏற்ற வகையில் எண்பது சத விகிதம் ஒத்துப்போகும் நபர் நமக்கு துணையாய் அமைந்தால் மணம் முடித்து வாழ்க்கைப் பயணத்தை இனி தாக தொடங்குவதில் தவறில்லை.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: