Friday, November 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

நோக்கியாவை வாங்குது மைக்ரோசாப்ட்

மொபைல் உலகின் முன்னணி நிறுவனமான நோக்கியாவை வாங்குகிறது மைக்ரோ சாப்ட் என தகவல்கள் வெளியாகியு ள்ளதால் கார்ப்பரேட் உலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள் ளது.

நோக்கியாவின் ஹேண்ட் செட் யூனிட்டை வாங்கும் பேச்சுக்களில் மைக்ரோ சாப் ட் நிறுவனம் ஈடுபட்டுள்ள தாக, மொபைல் ரிவியூ பத்தி ரிகை ஆசிரியர் தனது ப்ளாகில் தெரி வித்துள்ளார்.

இந்த ஆண்டின் இறுதிக்குள் இது குறித்த டீல் எட்டப்படும் எனத் தெரிகிறது. மார்க்கெட்டில் ஆதிக்கம் செலுத்தும் ஆப் பிள் ஐபோ னுடன் போட்டி போட வேண்டிய கட்டாயத் தில் உள்ளது விண் டோஸ் மொபைல். அதற்கு நோக்கி யாவை வாங்குவது உத வும் என நம்புகிறது.

மேலும் மொபைல் ஹேண் ட்செட் வடிவமைப்பில் இன்னும் அழகிய வடிவமைப்பைக் கொடு க்கவும் இந்த முயற்சியில் இறங்கி யுள்ளது மைக்ரோசாப்ட்.

நோக்கியாவும் மைக்ரோசாப்டும் தொழில்நுட்ப ரீதியில் இணை ந்து செயல்படப் போவதை முன்கூட்டியே கணித்துச் சொன்னது இந்த மொபைல் ரிவ்யூ பத்திரிகைதான் என்பதால், இப்போது அவர்கள் வெளியிட்டுள்ள இந்த புதிய செய்திக்கும் முக்கியத்து வம் கிடைத்துள்ளது.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply