Tuesday, August 3அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பக்கவாதம் வருவதை உணர்த்தும் அறிகுறிகள்

திடீரென முகம், கை, கால் ஆகியவற்றில் தோன்றும் விறைப்புத் தன்மை அல்லது செயலிழப்பு மிக முக்கியமான அறிகுறியாகும். பொது வாக உடலின் ஒரு பக்கத்தில் மட்டும் இது தோன்றுவ துண்டு.

திடீரென ஏற்படும் மாறாட்டம் மற்றும் பேசமுடியாதிருப்பது, மற்றவர்கள் பேசுவதை புரிந்து கொள்வதில் சிரமப் படுவது, சடுதியாக ஏற்படும் பார்வை க் கோளாறு அல்லது முற்றாக பார்வைத் திறனை இழத்தல் இன்னு மொரு முக்கிய அறிகுறியாகும். ஒரு கண்ணில் அல்லது இரண்டு கண் களிலும் இது தோன்றலாம்.

சடுதியாக ஏற்படும் வேறு அறி குறிகளான நடப்பதில் சிரமம், உடற் சமநிலை தளம்புதல், ஈடா ட்டம், தலைச்சுற்று, உடல் உறு ப்புகளின் செயற்பாட்டை ஒருங் கிணைத்து செயலாற்று வதில் சிரமம் ஆகியவற்றிற்கும் முணு முணுக்கும் பக்கவாதமே கார ண மாகலாம்.

காரணம் சொல்ல முடியாத மிகக் கடுமையான தலைவலி மற்று மொரு முக்கிய அறிகுறியாகும்.

இத்தகைய அறிகுறிகள் ஏற்பட்டால், அவை மிகக் குறைந்த நேர ம் மட்டுமே நீடித்தாலும் இலேசாக எடுத்து, கவனத்தில் கொள்ளா மல் விடவேண்டாம். உடனடியாக பாதிப்புற்றவர் வைத்திய ஆலோசனை பெறுவது அவசியமாகும்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: