மரம் நடும் குழி குறைந்த பட்சம் இரண்டடி ஆழம் ஒன்றரை அடி அகலம் இருத்தல் அவசியம்.
பொடியாக்கிய சாண வரட்டி, காய்ந்த இலை சருகுகள் எறித்த சாம்பல் கல வை ஆகியவற்றை குழியில் இட்டு அதன் பிறகு மரக்கன்றை நட வேண் டும். தேவைப்பட்டால் மண் புழு உரம் அல்லது மக்கிய குப்பைகளை மரக் கன்று நட்ட இடத்தில் சேர்க் கலாம்.
மரக்கன்றின் அடிப்பகுதியில் தேங்காய் நார் கொண்டு சுற்றி மூடி நீர் ஊற்று வதன் மூலம் அதிக நீர் சத்து கொண்ட சூழலை உருவாக்கி மரகன்று காய்ந்து போகாமல் காக் கலாம்.
ஒன்றுக்கு மேற்பட்ட மரக்கன்று நடுவ தாக இருந்தால் குறைந்த பட்சம் பத்து அடி அதிகபட்சம் 30 அடி தொலைவு இருத்தல் அவசியம்.
கட்டிட சுவர் அல்லது மதில் சுவர்களுக்கு அருகே நடவு செய்யா மல் குறைந்த பட்சம் 5 அடி தொலைவில் நடவு செய்தல் நலம்.
இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.
தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்