Sunday, August 1அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

இளநீர் அருந்து, தேவையில்லை மருந்து!

இயற்கை நமக்குத் தந்துள்ள பரிசு இளநீர்

இளநீர் இயற்கை நமக்குத் தந்துள்ள புத்துணர்ச்சி தரும் இனிய பானம் தென்னை தரும் இளநீர் மிகவும் சுவையானது சத்தா னது கோடையின் கொடுமையைத் தணி க்க வெப்ப மண்டல மக்களுக்கு இயற் கை தந்துள்ள வரப்பிரசாதம்.

தாகத்தைத் தணிக்கும் பானம் மட்டு மல்ல தாதுபொருட்கள் அடங்கிய பல நோய்களைத் தீர்க்கும் தன்மை யும் கொண்டது.

மனித உடலில் அதிக அளவு நீர்ச்ச த்து விரயமானால் அவற்றைச் சரி செய்ய எளிதில் குறைந்த செலவில் கிடைப்பது இளநீர் மட்டுமே. இள நீரில் உள்ள புரதச்சத்து பசும்பாலில் உள்ளதைவிட அதிகமாகும்.

இளநீர் தரும் சத்தின் அளவு 17.4 கலோரி ஆகும். ஆகையால் சிறந்த மருத்துவ குணம் கொண்ட இளநீர் மனித உடல்நலத்தைப் பேணு வதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

இளநீரில் காணப்படும் முக்கிய சத்து சர்க்கரை சத்தாகும். இளநீரில் 5.5 விழுக்காடு சர்க்கரை சத்து அளவு உள்ளது. மற்றும் தாதுப் பொருட்களான பொட்டாசியம், சோடியம், கால்சியம், இரும்பு, செம்பு, கந்தகம், மெக் னீசீயம் போன்ற தாது உப்புக்கள் அடங்கியு ள்ளன. இளநீரில் ஊட்டச்சத்துக்கள் பின்வரு மாறு

இளங்காய்களில் நீர்;:
ஈரப்பதம்: 95.01, புரதம்: 0.13, கொழுப்பு: 0.12 மாவுப்பொருள்: 4.11, சாம்பல்: 0.63.

இளநீரின் பயன்கள்.

இளநீர் உடலை குளிர்ச்சியாக வைக்க உதவுகிறது.

இளநீர் குடல் புழுக்களை அழிக்கிறது.

இளநீர் முதியோர்களுக்கும். நோயாளிக்கும் சிறந்த ஊட்டச் சத்து பானமாகும்.

இளநீர் சிறுநீரக நோய்களைக் கட்டுப்படுத்துகிறது.

இளநீரை உடலில் பூசிக்கொண்டால் தட் டம்மை, சின்னம்மை., பெரியம்மை, ஆகி யவைகளால் ஏற்படும் உடல் அரிப் பைத் தடுக்கலாம்.

இரத்தத்தில் கலந்துள்ள நச்சுப் பொரு ட்களை அகற்ற உதவு கிறது.

உடலில் ஏற்படும் நீர் இழப்பை சரி செய் வதற்கு இளநீரை பருகுவது நல்லது.

இளநீரில் உள்ள உப்புத்தன்மை மற்றும் வழவழப்புத் தன்மை கார ணமாக காலரா நோயாளிகளுக்கு இளநீர் நல்லதொரு பானமாக விளங்குகிறது.

இளநீர் ஊட்டசத்து குறைபாடுகளை நிவர்த்தி செய்கிறது.

புகையிலை மற்றும் மது போன்றவை களினால் ஏற்படும் தீய விளைவுகளை நீக்கக்கூடிய நச்சு முறிவாக செயல் படுகிறது.

மனித குலத்திற்கு இயற்கை தந்துள்ள சத்தான இன்சுவை பானம் இளநீர் மட்டும்தான். மற்ற பானங்களுடன் ஒப்பி டுகையில் இளநீர் மட்டுமே அதிகமான பயன்களைத் தருகிறது.

இளநீர் மிகக் குறைந்த செலவில் அதிகப் பயன்களைத் தரவல்லது. எனவே தாகத்தைத் தணிக்க உடல்நலம் காக்க தினமும் ஒரு இளநீர் குடிப்போம் என்றும் நலமாய் இருப் போம்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

3 Comments

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: