Sunday, May 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ரஜினி ஜாதகம் சொல்வது என்ன?

http://www.astrosuper.com/2011/05/blog-post_9594.html 

என்ற இணையத்தில் வெளிவந்த இடுகை

 ரஜினி ரசிகர்களுக்கு வேண்டுகோள்;

ரஜினி தீவிர சிகிச்சை பிரிவில் அனு மதிக்கப்பட்டிருக்கிறார் என்ற செய்தி வந்தது முதல் கவலையாக இருந் தது… ரஜினி ஜாதகத்தை பார்த் தால் என்ன என்று தோன்றியது.. அதன் முடிவுகள் என்னை அதி ரவே செய்த ன…. ரஜினி ரசிகர்கள் மனம் தளர வோ.. கோபப்படவோ வேண்டாம்.. நான் கற்ற ஜோதிடத்தின் பார்வையில்,ஒரு ஜோதிட னாக… இந்த பதிவை எழுதியிருக்கிறேன்…ரஜினி ரசிகனாக அல்ல.. உங்கள் மனம் வருந்தும்படி இப்பதிவில் நிறைய தகவல்கள் இருக்கி ன்றன… அதற்காக உண்மையில் நான் வருந்துகிறேன்…. ரஜினி ரசிகனாக!.
ரஜினி ஜாதகம்;
தேதி;12.12.1950
நேரம்;11.45 இரவு.
இடம்;பெங்களூர்
ராசி;மகரம்
நட்சத்திரம்;திருவோணம்
ரஜினி ஜாதக கட்டம்;
ஜினி ஜாதகம் மிக சக்தி வாய்ந்தது..தெய்வ அருள் நிரம்பியது… ஐந்தாம் இடத்தில் சுக்கிரன்,புதன் இணைந்து ஸ்ரீவித்யா யோகம் அமைந்துள்ளது.. இது லட்சுமி,சரஸ்வதி யோகம்…அருள் ஒருங்கே அமைவதாகும்.. இதன் மூலம் செல்வம்,ஞானம் இரண்டுமே கிட்டும்….

4க்குடையவன் செவ்வாய் வலுத்ததால் நிறைய சொத்துக்கள் சேர்க்கையும் உண்டானது….7ல் குரு நின்றதால் புலிப்பாணி பாட லின் படி,சகல தோசங்களும் நிவர்த்தி…..
7க்குடையவன் ஞானக்காரகன் கேதுவுடன் கூடியதால்… ஞானக் குருவாக மனைவி அமைந்தார்.
சுக்கிரன், புதன் இணைவு கலைத்துறையின் உச்சம் தொட்டார்… அதுவும் வெற்றி ஸ்தானமாகிய ஐந்தாம் இடத்தில் இணைவு. இருவரும் இணைந்து 11 ஆம் இடத்தில் பார்வை செய்ததால் உலகப் புகழ் .இரண்டுக்கு அதிபதிக்கு இரண்டில் செவ்வாய் உச்சம்.. பணத்துக்கு மேல்..பணம்..புகழுக்கு மேல்..புகழ்….
7ல் குரு நின்றதால் மனைவி வந்தப்பிறகுதான் மனிதன் ஆனார்…. அவ்வளவு கெட்டப்பழக்கங்களுக்கு காரணம் நாலில் சூரியன்.. இரண்டில் சனி,கேது…ஆறில் செவ்வாய்….சந்திரன்…..
ஜாதகத்தின் இன்றைய நிலை;
எண்ணிய ஒண்ணின் கோள்
ஆறாமிடத்து கோளுடன் 
உன்னிய ராகு கேது
ஒரு தளத்தில் நிற்க,கண்டம்
தன்னுடல் சுகமில்லாமல்
சஞ்சல மனதனாகி
மின்னலாய் வியாதியஸ்தன்
என விளம்பலாமே..!
-துய்ய கேரள ஜோதிடம் என்னும் பழைய ஜோதிட நூலில் இருந்து….
இந்த பாடல் சொல்லும் விளக்கம் ரஜினி ஜாதகத்திற்கு பொருந்தி போகிறது.
ரஜினிக்கு இப்போது சனி திசையில் சந்திர புத்தி வரும் 2.7.2011 வரை நடக்கிறது.
இந்த பாடலின் படி ஆறாம் அதிபதியுடன் ராகுவோ,கேதுவோ சேர்ந்திருந்தால் ,6,8,12 க்குடையவன் திசையில் மின்னலாய் நோய் தாக்கி முடங்குவான் என்கிறது….
ரஜினி ஜாதகத்தில் ஆறாம் அதிபதி சனியுடன் கேது இணைந்து இரண்டாம் இடத்தில் உள்ளது….
நடப்பது ஆறுக்குடையவன் திசை..நடப்பது 12க்குடைய விரயா திபதி சந்திரன்..புத்தி.
சனி-முடக்கும் கிரகம்
ஆறாம் இடம்-வயிறை குறிக்கிறது…நோயை குறிக்கிறது…
இவர் ஜாதகத்தில் ஆறாம் இடத்தில் செவ்வாய் உள்ளது…இது ரத்தம் மற்றும் மர்ம உறுப்பை குறிக்கிறது…ஆறில் உள்ள செவ்வாய் மற்றும் சந்திரன் தனது புத்தியில் இந்த உறுப்புகளை முடக்குகிறது..சிறுநீரகம் பாதிப்பு கிட்னி பாதிப்பையும் குறிக்கும்….
சந்திரன் விரயாதிபதி மட்டுமல்ல..உடல்,மனக்காரகன்…ஆக உடலும் மனமும் முடங்கி இருக்கிறது.
பாதிப்பு;சிறுநீரகத்தில்….காரணம்..செவ்வாய் ஆறில்.
ரஜினி இப்போதைய நிலை;
கோட்சாரப்படி சனி கன்னி வீட்டில் இருக்கிறது…ரஜினி பிறக்கும் போது சனி கன்னியில்தான் இருந்தது!…சனி ஒரு முறை சுற்றி தன் ஸ்தானத்திற்கு வர முப்பது வருடம் ஆகும்…இது இரண்டாம் சுற்று…
ஒரு தீய கிரகம் ஒரு ஜாதகன் பிறந்த ஸ்தானத்தில் எங்கு இருக்கிறதோ..அங்கு மீண்டும் வரும்போதெல்லாம் ஒரு கெடுதல் நடந்தே தீரும் என என் குரு சொல்லியிருக்கிறார்..அதன்படி இந்த ஜாதகத்திற்கு பிறந்தபோது இருந்த இடத்திற்கு வந்திருக் கிறார்…இது கெடுதலே தரும்….
ரஜினி மருத்துவமனையில் எப்படி இருக்கிறார்;
ஜோதிட பாடல் குறிப்பிடுவதை பார்த்தால் மின்னலாய் நோய் தாக் கி, வியாதியஸ்தன் ஆவான்… தன்னுடல் சுகமில்லாமல்,சஞ்சல மனதனாகி என்கிறது..ரஜினி முடங்கி இருக்கிறார்…அவர் சிரித்து பேசினார் என்பதும்,டிஃபன் சாப்பிட்டார் என்பதும் பொய்.அவர் தாள முடியாத வயிற்று வேதனையில் இருக்கிறார்..மனதில் அதிக கவ லையும் குழப்பமும் இருக்கிறது…..அதன் படி ரஜினி மருத்துவ மனையில் மோசமான நிலையில்தான் இருக்க வேண்டும்.
கிட்னி பாதிப்பிற்காக அவசர சிகிச்சை நடப்பதாக சொல்கி றார்கள்…மருத்துவமனையில்.. சந்திர புத்தி முடியும் வரை கண்டம் என்கிறது ஜாதகம்.இதை வேதனையுடன்தான் சொல்கிறேன்.
நோய் அகலும் என ஜாதக கணிப்பு சொல்ல வில்லை..அதிகம் தான் ஆகிறது….கேட்டை..பூரட்டாதி,உத்திரட்டாதி,திருவாதிரை, மிருக சிரீடம் நட்சத்திரங்கள் இவருக்கு கெடுதல் செய்யும் நட்சத்திரங்கள்.
நடந்து முடிந்த குருப்பெயர்ச்சி இவருக்கு சாதகம் இல்லை.இவர் லக்கினபடி…குரு…அஷ்டமாதிபதி..கெட்டவன்..இவர் ஜாதகத்தில், உயிர் ஸ்தானமாகிய லக்கினத்தை இப்போது பார்ப்பது.. சரியில் லை… வரும் ஐப்பசி மாதம்…சனிப்பெயர்ச்சி தாண்டிவிட்டால் உயிருக்கு கண்டம் இல்லை..ஆனால் சிகிச்சை தொடரும்..அதிக செலவில்…
ரஜினிக்கு தெய்வ பலமுண்டு..ராகவேந்திரர் ஆசி உண்டு…இன்று வியாழக்கிழமை..ராகவேந்திரர் அருளால்…இவருக்கு எதுவும் நடக்காமல்…மீண்டும் அந்த சிரித்த முகத்தை பார்க்க துடிக்கிறேன் ரஜினி ரசிகனாக……அமைதியாக பிரார்த்திப்போம்…

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

3 Comments

  • கிருஷ்ணமூர்த்தி செல்வராமன்: நானும் டிசம்பர் 12ம் தேதி(12-12-1980 4.00AM) பிறந்தேன் திருவோணம் நட்சத்திரம், மகர ராசி, துலாம் லக்னம், என்னுடை எதிர்காலம் எப்படி இருக்கும்னு சொல்லுங்க.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: