Wednesday, August 4அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

விந்தணுக்களுக்கு வீரியத்தைக் கொடுக்கும் நெல்லிக்கனி

வைட்டமின் `சி’ நிறைந்தது, நெல்லிக்கனி. அதன் அற்புதமான மருத்துவக் குணங்களைப் பார்ப்போம்…

* உமிழ்நீர் சுரப்பியைத் தூண்டி விடுகி றது. பற்களுக்கு உறுதியைத் தருகின் றன. கல்லீரல் குறைபாட்டை நீக்குகி றது. இரைப்பை அழற் சியை போக்கி அல்சர் வராமல் பாதுகாக்கிறது. மூல நோய்க்கு மிகச்சிறந்த மருந்தாக அ மைகிறது.

* சீரான ரத்த ஓட்டம் நடைபெறவும், இதயம் பலம் பெறவும் உதவு கிறது. ரத்த ஓட்டத்தின் போது நச்சுக்கிருமிகள் பரவாமல் பாது காக்கிறது. ரத்த நாளங்கள் சீராக இயங்கவும் உதவுகிறது. கொழுப் பைக் குறைத்து, ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துகிறது. ரத்த சிவப்பணுக் களின் உற்பத்தியை அதிகரிக்கிறது.

* விந்தணுக்களுக்கு வீரியத்தைக் கொ டுக்கிறது. பெண் இனப் பெருக்க உறுப் பிற்கு பாதுகாப்பையும், உறுதியையு ம் தருகிறது.

* சளியை வெளியேற்றி, சுவாச மண்ட லத்தை சீராக இயக்குகிறது. நீண்ட நாள் இருந்து வரும் இருமல், ஆஸ்துமா, எலும்புருக்கி நோய் போ ன்ற நோய்களுக்கு அருமருந்தாக உதவுகிறது.

* பக்கவாதம், நரம்புத்தளர்ச்சி போன்ற நோய்கள் ஏற்படுவதைத் தடுக் கிறது. மூளை பலம்பெறவும், ஐம்புலன்கள் சீராக இயங்கவும் உறுதுணை புரிகிறது. மனஇறுக்கத்தைப் போக்கி, நுண்ணறிவுடன் செயல் பட வழி வகுக்கிறது.

* சிறுநீரக கோளாறுகளை நீக்குகிறது. சரும ங்களில் ஏற்படும் சுருக்கங்கள், சொறி, சிர ங்கு உள்பட அனைத்து விதமான தோல் வியாதிகளையும் போக்கி, சருமத்திற்கு பள பளப்பைக் கொடுக்கிறது.

* தோல் வியாதிகளை குணப்படுத்தும் மூலிகை மருந்துகளில் நெல்லிக் கனியின் பங்கு முக்கி யத்துவம் வாய்ந்தது. இது ரத்த சுத்தி கரிப்பிற்கு பெரிதும் உதவு கிறது. அதனால், பருக்கள், கொப் புளங்கள் போன்றவை வராமல் தடுக்கிறது.

* தலைமுடி உதிர்வதை தடுத்து, அதன் வளர்ச்சிக்கு காரணமாக இருக்கும் செல்களைத் தூண்டுகி றது. எப்போதும் இளமையுடன் இருக்கச் செய்கிறது. பொடுகு, பேன் தொல்லை களைப் போக்கு கிறது. இந்தியப் பெண்கள் பொதுவாக நெல்லிக்கனி அடங்கிய மூலிகைப் பொடிகளையே தலைக்குத் தேய்த்து இயற்கையான அழகு டன் ஜொலிக்கின்றனர்.

* காய்ச்சல் உண்டாகாதவாறு தடுக் கிறது. காயங்கள், வீக்கம் போன் றவற் றால், உண்டாகும் வலிகளைப்போக்கி, உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிக ரிக்கிறது.

* கண் பார்வைத்திறனை அதிகரிக்கி றது. கண்எரிச்சல், கண்ணில் நீர் வடி தல், கண் சிவத்தல் போன்ற கண் சம்பந் தமான குறைபாடுகளை போக்குகிறது.

* ரத்தத்தில் உள்ள குளுக்கோசின் அள வைக் கட்டுப்படுத்தி சர்க்கரை நோய் ஏற்படாமல் பாதுகாக்கிறது.

* உடலுக்கு நோய் எதிர்ப்பாற்றலை தந்து, ஆரோக்கியத்தை மேம் படுத்துகிறது.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: