Monday, March 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஸ்பெக்ட்ரம் வழக்கில் ஜாமீன் மனு தள்ளுபடி: கனிமொழி கைது;

2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு ஊழல் தொடர்பாக கடந்த மாதம் இரண்டாவது குற்றப்பத்திரிகையை சி.பி.ஐ. தாக்கல் செய்தது. கனி மொழி எம்.பி., கலைஞர் டி.வி. நிர்வாக இயக்குனர் சரத்குமார் ஆகியோருக்கு ஸ்பெக்ட்ரம் ஊழலில் தொடர்பு இருப்பதாக அந்த குற்றப்பத்திரிகையில் குற் றம் சுமத்தப்பட்டி ருந்தது.
 ஸ்பெக்ட்ரம் விவகாரத் தில் முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா வுக்கு இணையான பங்கு கனிமொழிக்கும் உள்ளது என்று அந்த குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதையடுத்து சி.பி.ஐ.உத்தரவுப்படி கனிமொழி எம்.பி.யும், சரத் குமாரும் கடந்த 6-ந் தேதி டெல்லி சிறப்பு கோர்ட்டில் ஆஜரானார் கள். கனிமொழி சார்பில் ஆஜரான வக்கீல் ராம்ஜெத்மலானி வாதா டுகையில், “ஸ்பெக்டரம் முறைகேடுக்கும், கனிமொழிக்கும் எந்த தொடர்பும் இல்லை” என்று கூறினார்.
பிறகு கனிமொழி, சரத்குமார் இருவரும், தங்களை நீதிமன்றக் காவ லில் வைக்கக்கூடாது என்று கூறி முன்ஜாமீன் மனு செய்தனர். அந்த மனு மீது 14-ந் தேதி தீர்ப்பளிக்கப்படும் என்று சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டு நீதிபதி சைனி கூறி இருந்தார். ஆனால் உத்தரவு நகல்கள் தயாராகாததால் அன்று தீர்ப்பு வழங்காமல் 20-ந் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. இதனால் கனிமொழி கடந்த 5 நாட்களாக சி.பி.ஐ. கோர்ட்டில் ஆஜராகி வந்தார்.
 
தீர்ப்பு நாளான இன்று (வெள் ளிக் கிழமை) அவர் 9.30 மணிக் கெல்லாம் பாட்டியாலா ஹவு ஸ் வளாகத்தில் உள்ள சி.பி.ஐ. சிறப்புக் கோர்ட்டுக்கு வந்து விட் டார். 10 மணிக்கு அவர் கோர்ட்டில் ஆஜரானார். இரண்டு குற்றப்பத்திகைகளில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள அனைவரும் இன்று கோர்ட்டுக்கு வந்திருந்தனர்.
அங்கு அவர் நிருபர்களிடம் கூறுகையில், “தீர்ப்புக்காக காத்து இருக்கிறேன். எது நடந்தாலும் எதிர்கொள்வேன்” என்றார். கனிமொழி எம்.பி. முன் ஜாமீன் மனு மீது பிற்பகல் 2.30  மணிக்கு தீர்ப்பளிக்கப்படும் என்று சி.பி.ஐ. கோர்ட்டு நீதிபதி சைனி அறிவித்தார்.
அதன்படி 2.30 மணிக்கு நீதிபதி சைனி தீர்ப்பை வாசித்தார். கனிமொழி எம்.பி.க்கும், கலைஞர் டி.வி. நிர்வாக இயக்குனர் சரத்குமாருக்கும் முன்ஜாமீன் வழங்க இயலாது என்று தீர்ப்பளித்தார். மேலும் இருவரையும் 14 நாள் கோர்ட்டு காவலில் வைக்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து சி.பி.ஐ. போலீசார் கனிமொழி எம்.பி.யையும், சரத்குமாரையும் இன்று மாலை 4 மணிக்கு கைது செய்து, திகார் சிறையில் அடைக்கப்படுவார்கள். மேலும் கனிமொழி திகார் சிறையில் பெண்களுக்கான தனி அறையில் அடைக்கப்படுவார்.
சி.பி.ஐ. கோர்ட்டின் தீர்ப்பையடுத்து கனிமொழி கோர்ட்டின் முன் திரண்டிருந்த நிருபர்களிடம் “இத்தீர்ப்பு எதிர்பார்த்ததுதான்” என்று தெரிவித்தார்.

News In Malaimalar

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: