Sunday, June 11அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

இன்று மாலை 6 மணியுடன் உலகம் அழிகிறது‍: கிறிஸ்தவ போதனையாளர்! – வீடியோ

இன்று மாலை 6 மணியுடன் உலகம் அழிந்து விடு ம். இப்படிச் சொல்லியுள்ளார் அமெரிக்காவின் ஹ ரால்ட் கேம்பிங் என்ற கிறிஸ்தவ மதத் தலைவர். இவர் ரேடியோ நிலையத்தில் தொகுப்பாளராக வேலை பார்த்து வருபவர். இவரது பேச்சு உலகெ ங்கும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

89 வயதாகும் கேம்பிங், ஏற்கனவே இதுபோன்ற கணிப்புகளைக் கூறியவர்தான். 1994ம் ஆண்டில் உலகம் அழியும் என்று இவர் கூறி யிருந்தார். ஆனால் அது புஸ்வாணமாகிப் போனது. ஆனால் தற்போ து மே 21ம் தேதியான இன்று மாலை 6 மணிக்கு உலகம் அழிவது உறுதி என்று அவர் கூறியுள்ளார்.

தான் பணியாற்றும் ரேடியோ நிலையத்தில் நேற்று பணி முடிந்து கிளம்பியபோது அங்கு பணியாற்றி வரும் ஊழியர்களுக்குக் கை குலுக்கிய கேம்பிங், இதுதான் நாம் சந்திக்கும் கடைசி சந்திப்பு என்று கூறிய அவர், நாளை மாலையுடன் உலகம் அழியப் போவதால் நாம் மீண்டும் சந்திக்க மாட்டோம். நானும் இருக்க மாட்டேன் என்று கூறி விட்டுக் கிளம்பினார்.

எப்படி உலகம் அழியும் என்று உறுதியாகச் சொல்கிறீர்கள் என்று கேம்பிங்கிடம் கேட்டபோது, நியூசிலாந்தில் மிகப் பயங்கரமான பூகம்பங்கள் 21ம் தேதி மாலை 6 மணிக்கு ஏற்படும். இதனால் மிகப் பெரிய பேரழிவுகள் ஏற்படும். இந்த பூகம்பங்கள் நியூசிலாந்தோடு நின்று விடாது. அப்படியே ஒவ்வொரு பிராந்தியமாக நகரும். கடைசியில், உலகத்தின் பெரும்பாலான மக்கள் அழிந்து போய் விடுவார்கள். 2 அல்லது 3 சதவீத மக்கள்தான் உயிர் பிழைப்பார்கள். அவர்களையும் கூட கடவுள் தன்னுடன் அழைத்துக் கொண்டு விடு வார்.

எனது கணிப்பு மிகச் சரியானது, துல்லியமானது. நோவாவுக்கு கடவுள் 7 நாள் அவகாசம் கொடுத்தார். மாபெரும் வெள்ள அபாயத் திலிருந்து தப்பித்துக் கொள்ள இந்த கால அவகாசத்தை அவர் கொடுத்தார். ஆனால் நமக்கு கடவுள் 7000 ஆண்டு காலத்தை அவகாச மாக கொடுத்தார். அந்த காலம் யூத காலண்டர்படி மே 21ம் தேதி மாலை 6 மணியுடன் முடிவடைகிறது என்கிறார் கேம்பிங்.

கேம்பிங் கிடக்கிறார், இன்று மாலை 6 மணிக்கு மேல் எங்கு ‘கேம்ப்’ என்பதை திட்டமிட்டு வாழ்க்கையைத் தொடரும் வழியைப் பார்ப்போம்!.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: