பால்வினை நோய்கள் உடல் உறவின் மூலம் தான் மிகமுக்கியமாக வருகின்றன. வைரஸ், பாக்டீரியா, ஒட்டுண் ணிகள் ஆகியவையே இவற்றிற்குக் காரண மாகும். இவ்வகையில் குறைந்தபட்சம் 25 வேறு பட்ட பால்வினை நோய்கள் உள்ளன. இவை எல்லாமே 5 விதமான அறிகுறிகளை வெளிப் படுத்துகின்றன.
பிறப்புறுப்பில் புண்
இந்த வகைப் புண்கள் ஒன்றோ பலவோ இருக் கும். இவை வலியுடனோ வலி இல்லாமலோ இருக்கும். இவை சாதாரணக் கட்டியாகவோ நீருடன் கூடிய சிறு சிறு கொப்புளங்களாகவோ காணப்படும். இவை ஆண், பெண் இருவருக்கும் வரும்.
பிறப்புறுப்பிலிருந்து வெளிவரும் சீழ்
ஒரு மனிதனின் சிறுநீர் துவார த்தின் வழி சீழ் வெளிப்படுமா னால் அது நிச்சயமாகப் பால் வினை நோயின் அறிகுறி யாகும். இது அடிக்கடி சிறுநீர் கழிக்கும் போது எரிச்சலுட னோ வலியுடனோ வெளிப் படும். பெண்களுக்குத் துர்நாற் றத்தோடு ஒழுக்கு வெளிப் பட்டு துணிகள் கறை படியு மானால் அது பால்வினை நோயின் அறிகுறியாகும்.
கவட்டியில் நெறிகட்டுதல்
ஆண், பெண் இருபாலருக்கும் கவட்டியில் அதாவது இடுப் பும்கா லும் இணையும் பகுதி யில் நெறிகட்டுதல். இது மிக வும் வலியினை ஏற்படுத் தும்.
விதைப்பை வீக்கம்
ஆண்களுக்கு விதைப்பை வீக்கமும் வலியும் பால் வினை நோயின் அறிகுறியாக இருக் கலாம்.
அடிவயிற்றில் தொடர்ச்சியான வலி
பெண்களுக்கு தொடர்ச்சியான அடிவயிற்று வலி பால்வினை நோ யாக இருக்கலாம். உடலு றவின் போது எப்போதும் மிகு ந்த வலி ஏற்படுமானால் அது நிச்சயமாகப் பால்வினை நோ யின் அறிகுறியே ஆகும்.
இதில் ஒரு சில அறிகுறிகள் வெறும் தொற்றுக் கிருமிக ளாலும் ஏற்படலாம். ஆனால் எது வாக இருந்தாலும் உடனடியாக மருத்துவ பரிசோதனை செய்து சிகிச்சை மேற்கொள்வது மிகவும் முக்கியம்.
எனது விதைப்பை ஒவ்வொரு நாளும் அதிகாலையில் சற்று வீக்கமாகமும் பின்னர்( மலம் கழித்த பின்னர்) மிகவும் தளர்வாகவும் உள்ளன, இது ஏதாவது நோயின் அறிகுறியா? அல்லது எல்லோருக்கும் சாதாரணமாக இவ்வாறு தான் இருக்குமா?
Prabu urupil pun vandhu ulladhu oru idathil four vandhu ullathu vali ullathu ithu enna arikurigal nan aidska checkup paninen athil onndrm illai .ithan arikui enna, same five time vandhu ullathu five daysla sari agkividum vali enna epadi sari saivadhu