Saturday, June 3அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

கனிமொழி கைதும் திமுகவின் அமைதியும்

ராசா கைது செய்யப்பட்டு சிறையில் அடைத்தபோது பெரிய அள வில் ரியாக்ஷன் கொடுக்காமல், கனிமொழி கைதுக்காக மட்டும் பெரும் அமளி துமளியில் இறங் கினால் கட்சியின் பெயர் மே லும் கெட்டு விடும் என்பதா லும், காங்கிரஸ் மேலும் அதி ருப்தியாகி, கனிமொழி யை அதிக நாட்கள் சிறையில் வைக்க நேரிட்டு விடும் என்ப தாலும்தான் திமுக அமைதி காப்பதாக கூறப்படுகி றது.

திமுக எம்.பி. கனிமொழியை 2 ஜி ஸ்பெக்ரம் வழக்கில் சிஐ கைது செய்த சம்பவம் குறித்து திமுக மவுனம் சாதித்து வருகின்றது. திமுக தலைவர் கருணாநிதியிடம் இந்த விவகாரம் குறித்துக் கேட்ட போது பட்டும் படாமலும்தான் பதிலளித்தார்.

2ஜி வழக்கில் சி.பி.ஐ. தாக்கல் செய்த 2வது குற்றப்பத்திரிகையில் கூட்டு சதியாளர் என குற்ற ஞ்சாட்டப்பட்டிருந்த தி.மு. க. எம்.பி-யும், திமுக தலை வர் கருணாநிதியின் மகளு மான கனிமொழி ‌நேற்று டில்லி திகார் சிறையில் அடைக்கப்பட் டார்.

இதனால் தமிழகம் முழுக்க திமுகவினர் சாலை மறி யல், போராட்டம், ஆர்பாட் டம் போன்ற பல்வேறு நடவ டிக்கைகளில் ஈடுபடுவார் கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ராசா கைது செய்யப்பட்டபோது கூட பெரம்பலூரில் திமுகவினர் சிலர் போராட்டங்களில் ஈடுப ட்டனர்.

ஆனால், தமிழகத்தில் தற்போது, அதிமுக ஆட்சி நடைபெறுவதால் , போராட்டத்தில் ஈடுபட்டால், போலீசார் கைது செய்து சிறையில் வைத்து விடுவார்கல் என்ற காரணத்தால் திமுகவினர் அமைதி காப்பதாக கூறப்படுகிறது.

மேலும் ராசா கைதின்போது திமுக தரப்பில் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. இப்போது கனிமொழிக்காக பெரும் பிரச்சினை யைக் கிளப்பினால் அது கட்சிக்கு மேலும் கெட்ட பெயரை ஏற் படுத்தும் என்பதால் திமுக தரப்பு அமைதி காப்பதாகவும் தெரிகிறது.

அதேசமயம், காங்கிரஸ் கட்சியுடனான உறவை முறிப்பதாக இப் போது அறிவித்து விட்டால் அது கனிமொழிக்கு மேலும் பாதகமாகி விடும் என்பதாலும் திமுக தரப்பு அமைதி காப்பதாக கூறப்படுகிற து.

அதேசமயம், இப்போது திமுகவிடம் ஆட்சிப் பொறுப்பு இருந் திருந்தால் பெரும் பிரச்சினையாக்கி, காங்கிரஸுக்கு பெரும் நெரு க்கடியைக் கொடுத்திருப்போம் என்றும் திமுகவினர் தரப்பில் பேச ப்படுகிறது.

ஆனால் தற்போது ஆட்சி மாறி, காட்சியும் மாறிவிட்டது. காங்கி ரஸும் இப்போது திமுக மீது பாசமாக இருப்பதாக தெரியவில்லை. இந்த நிலையில் எதுவும் செய்ய முடியாத நிலையில் தாங்கள் இருப்பதாக திமுகவினர் சோகத்துடன் கூறுகி ன்றனர்.

அதேசமயம், காங்கிரஸ் கட்சியை ஆரம்பத்திலிருந்தே தட்டி வைத் திருந்தால் இந்த நிலையே வந்திருக்காது என்றும் தீவிர திமுக அனு தாபிகள் கவலையுடன் கூறுகின்றனர். காங்கிரஸ் கட்சியினரால் தான் தங்களுக்கு இந்த இக்கட்டான நிலை ஏற்பட்டது. திமுக வை வசமாக மாட்ட வைத்து அதில் அவர்கள் குளிர்காய்கிறார்கள் என் பது இவர்களின் கருத்தாகும்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: