Thursday, September 24அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பாங்க் ஆப் இந்தியாவில் காலியிடங்கள்

பொதுத் துறை வங்கியான பாங்க் ஆப் இந்தியா நவீனமயமாக்கப் பட்ட கிளைகள், சிறந்த வாடிக்கையாளர் சேவை போன்றவற்றால் நாடெங்கும் அறியப்படுகிறது. இந்த வங்கியில் ஸ்பெஷலிஸ்ட் அதிகாரிப் பிரிவில் சி.ஏ., படித்தவர்களுக்கு 200 காலி இடங்களும், ஐ.டி., ஆபிசர் பிரிவில் 56 காலி இடங்களும், டெக்னிகல் ஆபிசர்-அப்ரைசல் பிரிவில் 20 காலி இடங்களும், அக்ரிகல்சுரல் ஆபிசர் பிரிவில் 500 காலி இடங்களையும் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளி யாகியுள்ளது. அரசு நிபந்தனைகளுக்கு ஏற்ப இந்த இடங் களுக்கு எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி., ஆகிய பிரிவினருக்கு இட ஒதுக் கீடும் உள்ளது.

கல்வித் தகுதி: சி.ஏ., பிரிவு அதிகாரிப்பதவிக்கு விண்ணப்பிக்க சார்டர்டு அக்கவுண்டண்ட் இறுதித் தேர்வை முடித்திருக்க வே ண்டும். ஐ.டி., அதிகாரி பதவிக்கு முழு நேரப் படிப்பாக கம்ப்யூட்டர் சயின்ஸ் அல்லது எலக்ட்ரானிக்ஸ் அண்டு டெலிகம்யூனிகேஷனில் இன்ஜினியரிங் பட்டப்படிப்பு, எம்.சி.ஏ., ஆகியவற்றைக் குறைந்த பட்சம் 55 சதவிகித மதிப்பெண்களுடன் முடித்தவர்களும், பி.எஸ் .சி., கம்ப்யூட்டர் சயின்ஸ் அல்லது பி.சி.ஏ., படிப்பைக் குறை ந்த பட்சம் 60 சதவிகித மதிப் பெண்க ளுடன் முடித்தவர்களும், ஏதா வது ஒரு பிரிவில் பட்டப்படிப்பை முடித்து அதன் பின்னர் டி.ஓ. இ.ஏ. சி.சி.,யின் ‘ஏ’ அளவு படிப்பை முடித்தவர்களும் விண்ண ப்பிக் கலாம்.

டெக்னிகல் ஆபிசர்-அப்ரைசல் பதவிக்கு டெக்ஸ்டைல்ஸ், கெமி க்கல், மெக்கானிகல், எலக்ட்ரிகல், எலக்ட்ரானிக்ஸ், புரொடக்சன், கம்ப்யூட்டர் சயின்ஸ், மெட்டலர்ஜி ஆகிய ஏதாவது ஒரு பிரிவில் இன்ஜினியரிங் பட்டம் முடித்தவர்களும், பி.பார்ம்., நிதியில் எம்.பி.ஏ., போன்ற படிப்புகளை அங்கீகரிக்கப்பட்ட ஏதாவது ஒரு பல்கலைக் கழகத்தின் மூலமாக முடித்தவர்களும் விண்ணப் பிக்க லாம்.

அக்ரிகல்சுரல் ஆபிசர் பதவிக்கு முழு நேரப் படிப்பாக அக்ரிகல்சர், ஹார்டிகல்சர், அனிமல் ஹஸ்பெண்டரி, வெர்டினரி சயின்ஸ், டெய்ரி சயின்ஸ், அக்ரிகல்சுரல் இன்ஜினியரிங், பிஸிகல்சர், அக்ரி-மார்க்கெடிங், பாரஸ்ட்ரி ஆகிய ஏதாவது ஒரு பிரிவில் குறைந்த பட்சம் 60 சதவிகித மதிப்பெண்களுடன் பட்டப்படிப்பை முடித் திருக்க வேண்டும்.

தேர்ச்சி முறை: பாங்க் ஆப் இந்தியாவின் ஸ்பெஷலிஸ்ட் அதிகாரிப் பதவிகளுக்கு முதலில் அப்ஜெக்டிவ் வகையிலான தேர்வு நடத்தப்படும். இந்தத் தேர்வில் வெற்றி பெறுபவர்களுக்கு மட்டுமே நேர்காணல் அழைப்பு அனுப்பப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: பாங்க் ஆப் இந்தியாவின் மேற்கண்ட காலி இடங்களுக்கு விண்ணப்பிக்க முதலில் இணைய தளத் திலிருந்து பணம் செலுத்துவதற்கான சலானை டவுன்லோடு செய்து பெற வேண்டும். இந்த சலானின் மூலமாக ஏதாவது ஒரு பாங்க் ஆப் இந்தியா கிளையில் ரூ.400/-ஐ செலுத்த வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., உடல் ஊனமுற்ற பிரிவினருக்கு இது பொருந்தாது. முழு விபரங்கள் அறிய இணைய தளத்தைப் பார்க்கவும். விண்ணப்பக் கட்டணத்தை செலுத்திய பின் இந்த வங்கியின் இணைய தளத்திற்கு சென்று ஆன்-லைன் முறையில் விண்ணப் பிக்க வேண்டும். எனவே, உங்களுக்கான உபயோகத்தில் உள்ள பிரத்யேகமான இ-மெயில் முகவரி இருப்பதனை உறுதி செய்யவும்.
முக்கிய தேதிகள்: கல்வித் தகுதி, வயது ஆகியவற்றுக்கான கணக்கீட்டு நாள் : 31.03.2011

கட்டணம் செலுத்த, ஆன்-லைனில் விண்ணப்பிக்க இறுதி நாள் : 21.05.2011
எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள் : 03.07.2011
இணைய தள முகவரி : www.bankofindia.com/

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply