Monday, June 5அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பொறியியல் கவுன்சிலிங்கில் பங்கேற்கும் மாணவர்களுக்காக ஆலோசனை

பொறியியல் கவுன்சிலிங்கில் பங்கேற்கும் மாணவர்களுக்காக ஆலோசனை கூறும், “உங்களால் முடியும்” என்ற நிகழ்ச்சி

தமிழகத்தின் பல பகுதிகளில் தினமலர் சார்பில், நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக மே 21 ம் தேதியன்று, சென்னை, சேத்துப்பட்டு சின்மயா அரங்கில் நடந்த “உங்களால் முடியும்” நிகழ்ச்சியில் திரளான மாணவர்கள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் அண்ணா பல்கலை துணைவேந்தர் மன்னர் ஜவஹர் பேசியதாவது: ஒரு மாணவர் நன்றாக படிப்பதோ அல்லது தேர்வில் தோல்வியடைவதோ அவர் கையில்தான் உள்ளது. பெற்றோர்கள் உங்களுக்கு தேவையான உதவியை மட்டும்தான் செய்ய முடியும். மற்றபடி, கடினமாக உழைப்பது மாணவர்களின் பொறுப்பு. கஷ்டப்படாமல் பலன் இல்லை. மாணவர்களுக்கு 5 முக்கியமான அடிப்படை பண்புகள் அவசியம்.

கடின உழைப்பு, அக்கறை, கண்ணியம், நேர்மை, ஈடுபாடு ஆகியவைதான் அந்த பண்புகள்.

பொறியியல் கல்லூரிகள் என்று எடுத்துக் கொண்டால், தமிழகத்தில் 486 சுயநிதி பொறியியல் கல்லூரிகளும், 17 உறுப்பு(constituent) பொறியியல் கல்லூரிகளும், 6 அரசு பொறியியல் கல்லூரிகளும், 3 அரசு உதவிபெறும் கல்லூரிகளும் இருக்கின்றன.

பள்ளி நிலையில் அடிப்படை அறிவியல் உண்டு. அந்த அறிவியலின் பயன்பாடுதான் பொறியியல், அந்த பொறியியலின் பயன்பாடு தொழில்நுட்பம். மொத்தம் 41 தொழில்நுட்ப படிப்புகள் தமிழ்நாட்டில் உள்ளன.

பொறியியல் இளநிலை படிப்பில் சிறப்பு படிப்பு(specialisation) தேவையில்லை. முதுநிலை படிப்பின்போதுதான் அது சிறந்தது. நீங்கள் விரும்பிய படிப்போ அல்லது கல்லூரியோ கிடைக்கவில்லை என்றால், கிடைத்ததை விரும்புங்கள். நன்றாக படித்து உங்களின் வாழ்க்கையை தீர்மானியுங்கள்.

அனைவருக்கும் வாழ்த்துக்கள்! என்று பேசினார்.

கவுன்சிலிங் விதிமுறைகள் குறித்து தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை செயலர் திரு.ரைமன்ட் உத்தரியராஜ் பேசியதாவது: மாணவர்களுக்கு இதுபோன்ற சிறப்பான சேவைகளை செய்துவரும் தினமலருக்கு, முதலில் எனது நன்றிகள்.

தேர்வில் ஒருவேளை மதிப்பெண் குறைந்திருந்தால், அதைப்பற்றி இப்போது கவலைப்பட்டுக் கொண்டிருக்க கூடாது. போனது போகட்டும், இனி நடக்க வேண்டிய விஷயங்களைப் பார்ப்போம். இருக்கும் மதிப்பெண்ணுக்கு ஏற்ப, நமக்கு பிடித்தமான ஒரு படிப்பை தேர்ந்தெடுத்து எதிர்காலத்தை தொடங்குவோம்.

கடந்த ஆண்டு கணக்குப்படி, கவுன்சிலிங் மூலமாக மட்டுமே சுமார் 1.20 லட்சம் மாணவர்களுக்கு பொறியியல் இடம் கிடைத்தது. இதில் மைனாரிட்டி கல்லூரி இடங்கள் மற்றும் மேனேஜ்மென்ட் இடங்க ளின் கணக்கு தனி. எனவே அனைவருக்கும் பொறியியல் இடம் உண்டு. கவலை வேண்டாம்.

உறவினர்கள், நண்பர்கள் மற்றும் பிற கவுன்சிலிங் ஆலோசகர்கள் சொல்வதை சாதாரண ஆலோசனையாக மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும். ஆனால் இறுதி முடிவை உங்களின் குடும்பத்தினர் மட்டுமே எடுக்க வேண்டும். குடும்ப உறுப்பினர்கள் கூட்டாக அமர்ந்து கலந்துரையாட வேண்டும். எந்த படிப்பு – எந்த கல்லூரி என்பதை முதலிலேயே முடிவுசெய்து, கவுன்சிலிங் செல்ல வேண்டும். தங்களுடைய பிள்ளை, இளம் வயதில் இருந்தே எந்த விஷயத்தில் ஆர்வமாக இருக்கிறான் என்பதை யோசித்து, பாடப் பிரிவை தெரிவுசெய்ய வேண்டும்.

ஒரு கல்லூரியை தேர்வு செய்யும்போது, உள்கட்டமைப்பு வசதி, ஆசிரியர்களின் தகுதி மற்றும் அனுபவம், அதில் படிப்பவர் களுக்கான வேலைவாய்ப்பு ஆகியவற்றை முக்கியமாக கவனத்தி ல் கொள்ள வேண்டும். மேலும் கல்லூரி முதல்வர் எத்தனை வருடங் களாக பணியில் இருக்கிறார் என்றும் பார்க்க வேண்டும். ஒரு கல்லூரி நிர்வாகத்தில், முதல்வர் அடிக்கடி மாறினால் அங்கே நிர்வாகம் சரியில்லை என்று அர்த்தம்.

மேலும் பொறியியல் கல்லூரியில் சேர்வதற்கு முன்பாக கல்வி கட்டணம் பற்றியும், நம்மால் எந்தளவிற்கு சமாளிக்க முடியும் என்பது பற்றியும் தெளிவாக திட்டமிட்டுக் கொள்ள வேண்டும். கல்லூரியின் புக்லெட் -ல் உள்ளதை தெளிவாக படிக்க வேண்டும். அதில்தான், கல்வி கட்டணம், சிறப்பு கட்டணம், ஹாஸ்டல் கட்டணம் உள்ளிட்ட அனைத்து செலவுகளையும் பட்டியலிட்டிருப் பார்கள். அதில் குறிப்பிடப்பட்ட தொகைக்கு மேல், ஒரு கல்லூரி பணம் கேட்டால், தொழில்நுட்ப கல்வி இயக்குனரகத்தில் புகார் செய்யலாம்.

ஒரு கல்லூரியை தேர்வு செய்யும் முன்பாக, அங்கே நேரடியாக சென்று பார்ப்பது நல்லது. மேலும், அங்கே படிக்கும் மாணவர்களை யோ அல்லது படித்து முடித்த மாணவர்களையோ விசாரிக்க வேண்டும்.

மாணவர் சேர்க்கையில்,

விளையாட்டு வீரர்களுக்கான ஒதுக்கீடு, முன்னாள் ராணுவ வீரர் வாரிசுகளுக்கான ஒதுக்கீடு உள்ளிட்ட பல ஒதுக்கீடுகள் உண்டு. ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் நடைபெறும் கவுன்சிலிங்கில் மற்ற தகுதிகள் பார்க்கப்படாது. சம்பந்தப்பட்ட மாணவ-மாணவியரின் கடந்த 4 வருட விளையாட்டு சாதனைகள் மட்டுமே பார்க்கப்படும்.

பொது கவுன்சிலிங் நடைபெறும் முன்பாகவே, மாற்று திறனாளிகள் கவுன்சிலிங் நடைபெறும். அவர்களுக்கென்று 3% இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஆனால் பொதுவாக அந்த இடங்கள் நிரம்பிவிடுவதில்லை. எனவே அதில் மீதி உள்ள இடங்கள், பொது கவுன்சிலிங்கில் சேர்க்கப்படும்.

ஒரு மாணவர் 8 ம் வகுப்பிலிருந்து 12 ம் வகுப்பு வரை தமிழகத்தில் படித்திருந்தால் அவர் நேட்டிவிட்டி சான்றிதழ் பெறத் தேவையில் லை. அதேசமயம், ஒரு தமிழக மாணவர், 8 முதல் 12 ம் வகுப்பு வரை வெளிமாநிலத்திலோ அல்லது வெளிநாட்டிலோ படித்திருந்தால் நேட்டிவிட்டி சான்றிதழ் பெற வேண்டும். மேலும், தமிழக பிரிவை சேர்ந்த ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகளின் பிள்ளைகள், பொது போட்டியில் கலந்துகொள்ள தகுதி பெற்றவர்கள். இதைத் தவிர, தமிழகத்திலுள்ள இலங்கை அகதிகளின் பிள்ளைகளும் பொது போட்டிக்கு தகுதி உடையவர்கள்.

பொதுவாக பொறியியல் படிப்புகளுக்கு வயது வரம்பு இல்லை என்றா லும், மெரைன் இன்ஜினீயரிங் படிப்புக்கு மட்டும், 25, அதிக பட்ச வரம்பாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், சுரங்க பொறியி யல் படிப்பில் பெண்களுக்கு அனுமதி இல்லை.

விண்ணப்பிக்கும்போது, “கோடிங் சீட்” என்னை கண்டிப்பாக குறித்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் அதுதான் இறுதியானது. ஏனெனில் முழு கவுன்சிலிங் செயல்பாட்டிற்கும் அதுதான் பதிவு எண்ணாக இருக்கிறது. மேலும் ஒரு &’ரேண்டம்&’ எண்ணும் இணைக்கப்படும். ஒருவேளை மதிப்பெண் மற்றும் வயதில் மாணவர்களுக்கிடையே சமமான போட்டி ஏற்பட்டால், இந்த எண் பயன்படுத்தப்படும்.

கவுன்சிலிங் பற்றிய உடனடி புள்ளி விவரங்கள் அனைத்தும், அண்ணா பல்கலை இணையதளத்திலேயே கிடைக்கும். மொத்தம் 8 பிரிவுகளாக நடக்கும் கவுன்சிலிங் பற்றிய தகவல்கள், உடனுக் குடன் அப்டேட் செய்யப்படும். உங்களின் விண்ணப்பம் தகுதியான காரணத்தின் பொருட்டு நிராகரிக்கப்பட்டால் எதுவும் செய்ய இயலாது. அதேசமயம், காரணம் பொருத்தமற்று இருந்தால் நீங்கள் மீண்டும் முயற்சி செய்யலாம். கவுன்சிலிங்கின்போது, எக்காரணம் கொண்டும் இடைத்தரகர்களை நம்ப வேண்டாம். ஏனெனில் அவர்காளால் ஆகக்கூடியது எதுவும் இல்லை.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: